திருடர்கள் வெறும் 40 நொடிகளில் உங்கள் இருசக்கர வாகனத்தை திருடுவது இப்படித்தான்..!

Written By:

அதிக மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் பைக்கை பூட்டி நிறுத்திவிட்டு, கடைகளுக்கோ, அல்லது ஏடிஎம்களுக்கோ சென்று திரும்புவதற்குள் அதனை அபேஸ் செய்து விடுகின்றனர் பலே திருடர்கள்.

நாமெல்லாம் சாவியை தொலைத்துவிட்டு அவசரத்திற்கு அவற்றை உடைக்க படாதபாடு படுகிறோம். அப்படியிருக்க இவர்கள் எப்படி இவ்வளவு எளிதாக பைக்கை திருடுகின்றனர்? என தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்படலாம்.

இதில் நமக்கு மூன்று கேள்விகள் எழலாம்..

முதல் கேள்வி: மக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதிகளில் எப்படி இவர்களால் திருட்டில் ஈடுபட முடிகிறது?

2வது கேள்வி: பூட்டப்பட்டிருக்கும் போது எப்படி பைக்கை திருட முடியும்?

3வது கேள்வி: சில நிமிடங்கள் கடைக்கு சென்று திரும்புவதற்குள் எப்படி குறைந்த நேரத்தில் பைக்கை திருட முடியும்?

இது குறித்த விவரங்கள் மிகவும் ஆச்சரியாமாகவே உள்ளது. ஒரு பைக்கை திருட திருடர்களுக்கு நிமிடங்கள் தேவையில்லை, சில நொடிகளே போதுமானது என்பது வியப்பாகவே உள்ளது.

பொதுவாக இருசக்கர வாகனங்களை திருடுபவர்கள் இரண்டு பேர் கொண்ட குழுவாகவே உள்ளனர்.

இந்த திருட்டு கும்பலைச் சேர்ந்தவர்கள் ஒரு இருசக்கர வாகனத்தில் வருகின்றனர். சாலைகளில் சுற்றித்திரிந்தவாரே தோதான இடமாகப் பார்த்து நோட்டமிடுகின்றனர்.

இவர்கள் உங்களை தொடர்ந்தும் வரலாம். அப்படி நீங்கள் பைக்கை சாலையோரம் நிறுத்திச் செல்லும் போது தான் உங்கள் பைக் திருடப்படுகிறது.

முதலில் யாரேனும் நம்மை கவனிக்கிறார்களா என்பதனை பைக் ஓட்டி வரும் திருடன் தன்னுடைய பைக்கை ஆன்-ல் வைத்தவாறே நோட்டமிடுகிறான்.

இருசக்கர வாகனத்தில் வரும் திருடர்களில் பின் சீட்டில் அமர்ந்திருப்பவன் தான் வைத்திருக்கும் சில விஷேச கருவிகள் மூலமாக பைக்கின் இக்னிஷன் கேபிளை துண்டித்துவிடுகிறான்.

இக்னிஷன் கேபிள் அறுக்கப்பட்டவுடன், திருடப்படும் பைக் சீட்டில் ஏறி அமர்ந்து தனது காலால் சைடு லாக்கை உடைக்கின்றான்.

பின்னர், அந்த பைக்கை ஆன் செய்து ஓட்டிச் சென்று விடுகின்றனர். இந்த மொத்த செயலுமே வெறும் 30 முதல் 40 நொடிகளில் நடக்கிறது.

பொதுவாக பைக்கை திருடுவது என்னவோ பின்சீட்டில் இருப்பவன் தான். இவன் தான் தொழில் தெரிந்த கில்லாடியாகவும் உள்ளான்.

திருடும் போது அருகில் இருப்பவர்களால் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் பைக்கை ஓட்டிவருபவன், தனது கூட்டாளியை பத்திரமாக பாதுகாத்து கூட்டிச் செல்லும் அளவுக்கு திறமைமிக்கவனாக இருப்பான்.

பலம் + புத்திசாலித்தனம் என இந்த கூட்டணியில் தான் இவர்கள் நோட்டமிடுவது, இக்னிஷன் கேபிளை அறுப்பது, ஹேண்டில் பாரை உடைப்பது, பின் திருடிய பைக்குடன் சிட்டாய் பறப்பது என சில நொடிகளில் பைக்கை திருடிவிடுகின்றனர்.

இந்த மொத்த சம்பவமும் வெறும் 30 முதல் 40 நொடிகளில் நடந்து முடிந்து விடுகிறது. பெரும்பாலும் பைக் திருட்டின் போது எந்த பிரச்சனைகளும் இவர்களுக்கு ஏற்படுவதில்லை.

ஏனெனில் 40 நொடிகள் என்பது யாருடைய கவனத்திலும் சிக்காமல் ஒரு பைக்கை திருடிவிட இவர்களுக்கு போதுமானதாக இருப்பதே காரணமாகும்.

நம்முடைய பைக் திருடப்பட்டதை அறிந்துகொண்டு நாம் சுதாரித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிப்பதற்குள், திருடிய பைக்குடன் அவர்கள் தங்கள் இருப்பிடத்திற்கே சென்றிருப்பர்.

இந்த முறையில் பைக் திருடப்படும் போது பதிவான சிசிடிவி காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதனை மேலே உள்ள ஸ்லைடரில் காணுங்கள்.

என்னதான் நாம் உஷாராக இருந்தாலும் திருடர்களின் சாமர்த்தியம் என்பது மிகவும் அபாரமாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாகவே போலீசாருக்கும் இவர்களை பிடிப்பது சவால் மிகுந்ததாகவே இருக்கிறது.

சிசிடிவி காட்சிகள் மூலமாகவும், வாகன சோதனைகள் மூலமாகவும் மட்டுமே இவர்கள் காவல்துறையினரிடம் சிக்குகின்றனர்.

ஆகவே வெளியிடத்தில் செல்லும் போதும், வாகனங்களை சாலைகளில் நிறுத்தும்போதும் கூடுதல் கவனிப்புடன் செயல்படுவதே பாதுகாப்பானதாகும்.

English summary
Read in Tamil about how do thieves steal bikes in india.
Please Wait while comments are loading...

Latest Photos