வளைவில் திரும்பும்போது ரயில்கள் கவிழாமல் செல்வதற்கான காரணம்?

Written By:

ரயில்கள் எந்த வேகத்தில் பயணித்தாலும் மிகுந்த நிலைத்தன்மையுடன் பயணிப்பதை பார்த்திருக்கிறோம். கார் போன்று ரயில்களில் திசை திருப்புவதற்கான விசேஷ தொழில்நுட்பம் எதுவும் கிடையாது. ஆனால், வளைவுகளிலும் ரயில் மிக சிறப்பான நிலைத்தன்மையுடன் பயணிப்பதற்கான காரணம் மிக எளிமையானதும், சுவாரஸ்யமானதும் என்பதையே இப்போது பார்க்க போகிறோம்.

ரயில் நேர்க்கோட்டில் செல்லும்போது எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், வளைவுகளில் திரும்பும்போது இடது, வலது புற சக்கரங்களின் சுழலும் வேகத்தில் மாறுபாடு ஏற்படும். அப்போது ரயில் நிலைத்தன்மையை இழக்க நேரிடும். ஏனெனில், கார் போன்று ரயில்களில் சக்கர சுழற்சி மாறுபாட்டை சமன் செய்வதற்கான விஷேச தொழில்நுட்பங்கள் எதுவும் கிடையாது.

இந்த பிரச்னையை போக்குவதற்காக மிக எளிமையான உபாயத்தை கையாண்டு, ரயில் சக்கரங்களை வடிவமைத்துள்ளனர். ரயில் சக்கரத்தின் உட்புறத்தின் விட்டம் அதிகமாகவும், வெளிப்புறப்பகுதியின் விட்டம் மிக குறைவாகவும் இருக்கும். சமமாக இல்லாமமல் ஒருபுறத்திலிருந்து மற்றொரு புறம் ரயில் சக்கரங்கள் சரிவாக தயார் செய்யப்படுகிறது.

ரயில் நேர்க்கோட்டில் செல்லும்போது சக்கரங்களின் நடுப்பகுதி தண்டவாளத்தை தொட்டு செல்லும். வளைவுகளில் திரும்பும்போது ஒருபக்கத்தில் சக்கரத்தின் அதிக விட்டமுடைய பகுதியும், மறுபக்கத்தில் குறைவான விட்டமுடைய பகுதியும் தண்டவாளத்தை தொட்டுக்கொண்டு செல்லும்.

இதன்மூலமாக, ரயில் சக்கரத்தின் சுழற்சி வேறுபாடு சமன் செய்யப்படுகிறது. உதாரணத்திற்கு, வலது பக்கத்தில் ரயில் திரும்பினால், இடது புற சக்கரத்தின் அதிக விட்டமுடைய பகுதியும், வலது புறத்தில் குறுகிய விட்டமுடைய சக்கர பகுதியும் தண்டவாளத்தில் தொட்டுக் கொண்டு செல்லும்.

எனவே, ஒரு சக்கரம் அதிகமாக சுழன்றாலும், மறுபுறத்தில் உள்ள சக்கரம் அதனை சமன் செய்து ரயிலின் இயக்கம் தடை படாமல் செல்ல உதவுகிறது. மேலும், ரயில் சக்கரங்கள் பிசகாமல் செல்வதற்கு ஏற்றவாறு, மிகப்பெரிய வட்டப்பாதை போன்று ரயில் தண்டவாளங்கள் அமைக்கப்படுகின்றன.

மேலும், அந்த தண்டவாள பகுதியின் வேக வரம்புக்கு ஏற்றவாறும், தண்டவாள அகலத்தின் அடிப்படையிலும், தண்டவாளத்தின் வளைவு அளவு வரையறுக்கப்பட்டு இருக்கிறது. ரயில் சக்கரங்களின் விளிம்பு பகுதி சக்கரத்தை விட பெரிதாக இருக்கும். இது தண்டவாளத்தை விட்டு ரயில் பிசகாமல் செல்வதற்கு பயன்படுகிறது.

மேலும், மேடான பகுதிகளில் செல்லும்போது ரயில் நேராக சென்றால் பிடிப்பு கிடைப்பதில் பிரச்னை ஏற்படும். இதற்காக, மேடான பகுதிகளில் தண்டவாளங்கள் நேராக இல்லாமல் சற்றே வளைவுகளுடன் அமைக்கப்படுகின்றன. அடுத்த முறை ரயிலில் பயணிக்கும்போது ரயில் சக்கரங்களை பார்த்தால் இந்த எளிமையான தொழில்நுட்பம் எந்தளவு சிறப்பானதாக புரிந்து கொள்ள முடியும்.

சக்கரங்கள் தவிர்த்து, வலுவான சஸ்பென்ஷன் அமைப்பும் ரயில் பெட்டிகளின் நிலைத்தன்மையை பாதுகாக்க உதவுகின்றன. இதனால், அதிவேகத்தில் செல்லும்போதும் ரயில்களின் நிலைத்தன்மை அவ்வளவு எளிதாக குலைந்து போவதில்லை.

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் படங்கள்!

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் படங்களின் தொகுப்பை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Read in Tamil: How do trains stay on the Tracks?.
Please Wait while comments are loading...

Latest Photos