அகமதாபாத்தில் 5 வயது சிறுவனுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த மெர்சிடிஸ் நிறுவனம்.. காரணம் இது தான்

Written By:

சிலருக்கு சிறு வயதில் கார்கள் மீது அலாதி பிரியம் இருக்கும். நம் சச்சின் டெண்டுல்கர் கூட சிறுவயதில் கார்கள் மீது தீராத காதல் கொண்டிருந்ததாக பல முறை குறிப்பிட்டுள்ளார்.

இதே போல அகமதாபாத்தை சேர்ந்த ஹிதார்த் என்ற 5 வயது சிறுவனுக்கு கார்கள் என்றால் கொள்ளை பிரியம். தொலைக்காட்சியில் தனக்கு பிடித்த கார்ட்டூன் நிகழ்ச்சிகளை பார்பதை விட கார் விளம்பரங்களையே அதிகம் பார்ப்பானாம்.

சிறுவன் ஹிதார்த்துக்கு மெர்சிடிஸ் நிறுவன கார்கள் தான் மிகப் பிடித்தவையாம். மெர்சிடிஸ் கார் விளம்பரம் வந்தால் அதையே பார்த்துக்கொண்டிருப்பான்.

ஹிதார்த்தின் இந்த மோகம் குறித்து அவனின் தந்தை நிபுன் தோலேகியா, மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்திற்கு டிவிட்டரில் டேக் செய்து தெரியப்படுத்தியுள்ளார்.

சிறுவனின் மெர்சிடிஸ் மோகம் குறித்து அறிந்த மெர்சிடிஸ் நிறுவனம் இதை கேள்விப்பட்டு மகிழ்ச்சியடைவதாகவும், எங்களுடைய குட்டி ரசிகரை பென்ஸ் காரில் அழைத்துச் செல்ல ஆசைப்படுவதாகவும் தந்தை நிபுன் தோலேகியாவுக்கு பதில் அளித்துள்ளனர்.

மெர்சிடிஸ் நிறுவனத்திடம் இருந்து இப்படி ஒரு பதில் வரும் என்று கற்பனை கூட செய்யாத நிபுன் ஆச்சரியம் அடைந்து, தன்னுடைய மகன் ஹிதார்த் அடுத்த சில ஆண்டுகளில் மெர்சிடிஸ் நிறுவனத்தின் மதிப்புமிகு வாடிக்கையாளர்களுள் ஒருவராக இருப்பான் என தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

மெர்சிடிஸ் நிறுவனம் சொன்னதோடு இல்லாமல், அவர்களுடைய குடும்பம் பற்றிய குறிப்புகளை கேட்டுப் பெற்று அகமதாபாத்தில் உள்ள பென்ச்மார்க் கார்ஸ் என்ற மெர்சிடிஸ் டீலர் மூலமாக சிறுவனின் கனவை நிறைவேற்ற பணித்துள்ளனர்.

திடீரென வீட்டு வாசலுக்கு வந்த மெர்சிடிஸ் காரில் தான் ஏற்றப்படுவதை அறிந்த போது
சிறுவன் ஹிதார்த் மகிழ்ச்சியில் திளைத்துள்ளான். அந்தக் காரில் அவர் குடும்பத்தினருடன் வலம் வரச் செய்யப்பட்டான்.

அதுவரையிலும் சிறுவனுக்கு இது குறித்து தெரிவிக்காமல் ரகசியமாக இன்ப அதிர்ச்சி அளித்துள்ளனர்.

மேலும் அருகில் இருந்த மெர்சிடிஸ் ஷோரூமுக்கு காரில் அழைத்துச்செல்லப்பட்ட சிறுவனுக்கு அங்கிருந்த அனைத்து மாடல் கார்களும் காண்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்வினை மனதில் கொள்ள அச்சிறுவனுக்கு மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி காரின் மினியேச்சர் மாடல் ஒன்றும் நினைவுப் பரிசாக அளிக்கப்பட்டது.

சமூகவலைத்தளம் மூலமாக சிறுவனின் ஆசையை அறிந்து அதனை நிறைவேற்றியுள்ள பென்ஸ் நிறுவனத்திற்கு பாராட்டுகள் குவிகிறது.

English summary
Read in Tamil about Mercedes Benz surprises 5 year old with incredible gift.
Please Wait while comments are loading...

Latest Photos