ஆன்லைன் நிகழ்ச்சியில் நீருக்கு அடியில் ஜீப்பை செலுத்தி சாகசம் !!

பிரபலமான ஆன்லைன் நிகழ்ச்சியில் டீசல் எஞ்சினைக் கொண்டு இயங்கும் ஜீப் ஒன்றை நீருக்கு அடியில் ஓட்டி சாகசம் செய்துள்ளனர்.

By Azhagar

மோட்டார் வாகனங்களை பற்றி நடத்தப்படும் ஆன்லைன் நிகழ்ச்சியில் பிரபலனமானவர்கள் 'தி டர்ட் எவிரி டே' என்ற யூ ட்யூப் சேனல் குழுவினர்.

பழைய வாகனங்களை புதுமுறையான முறையில் வடிவமைத்து சாகசம் செய்வது இக்குழுவினரின் வழக்கம். சமீபத்தில் ஜீப்பை நீருக்குள் ஓட்டுவது போல 'தி டர்ட் எவிரி டே' குழு செய்து காட்டிய சாகசம் ஆன்லைனில் ஏகோபித்த வரவேற்பை அள்ளியுள்ளது.

நீருக்கு அடியில் ஜீப்பை செலுத்தி சாகசம் !!

அமெரிக்காவின் குமின்ஸ் நிறுவனம் தயாரித்த டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட ஜீப் ஒன்றை, ’தி டர்ட் எவிரி டே’ குழுவினர் சாலை மற்றும் நீர் என 2 வழித்தடங்களிலும் பயன்படுத்தும் வசதியுடன் வடிவமைத்துள்ளனர்.

நீருக்கு அடியில் ஜீப்பை செலுத்தி சாகசம் !!

இக்குழுவினர் பிரத்யேகமாக வடிவமைத்திருக்கும் இந்த ஜீப்பில், குமின்ஸ் நிறுவனம் நான்கு சிலிண்டர் கொண்டு வடிவமைத்த 2.5 லிட்டர் எஞ்சின் உள்ளது. இது 160 பி.எச்.பி பவர் மற்றும் 360என்.எம் டார்க் திறனை வழங்கும்.

நீருக்கு அடியில் ஜீப்பை செலுத்தி சாகசம் !!

இப்படி ஒரு வடிவமைப்பை பெற்ற ஜீப்பை, 5 நிமிடத்தில் தண்ணீருக்கு அடியில் ஒட்டி காட்டியிருக்கிறார் 'தி டர்ட் எவிரி டே' நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஃபெர்ட் வில்லியம்ஸ். ஜீப்பை நீருக்கு அடியில் செலுத்தும் போது அந்த காட்சிப்பதிவில் ஜீப் எஞ்சினின் எடை, அதனுடைய செயல் திறன் என அனைத்தையும் விவரித்துக்கொண்டே வருகிறார்.

நீருக்கு அடியில் ஜீப்பை செலுத்தி சாகசம் !!

ஃபெர்ட் வில்லியம்ஸ் கூறியத்தில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்ன என்றால்,நீருக்கு அடியில் ஜீப்பை ஃபெர்ட் செலுத்தும் முன்னர், ஜீப்பில் மின்சாரத்தால் இயங்கும் அனைத்து வயர்களும், நீர் உள்ளே புகாத வண்ணம் சீல் செய்யப்பட்டுள்ளது.

நீருக்கு அடியில் ஜீப்பை செலுத்தி சாகசம் !!

முக்கியமாக வண்டியின் டயர் பெரிதாகவும், வலிமைகொண்டதாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஜீப் சேற்றில் சிக்கிக்கொண்டாலோ அல்லது நீருக்கு அடியில் செலுத்துவதில் பின்னிடைவு ஏற்பட்டாலோ, வேகத்தை அதிகரிக்க வேண்டும். அப்போது ஜீப்பின் செயல்பாடு அனைத்தும் கட்டுக்குள் வர, பெரிய சக்கரங்களில் ஏற்படும் விசை பயனளிக்கும் என ஃபெர்ட் வில்லியம்ஸ் காட்சிப் பதிவில் தெரிவிக்கிறார்.

அப்போது எஞ்சின் கதி என்ன என்று நமக்கு கேள்வி வரலாம், அதற்கும் பதில் சொல்கிறார் அவர். அதாவது பெட்ரோல் எஞ்சினை விட டீசல் எஞ்சின் இயல்பாகவே வாட்டர்ஃப்ரூப் தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படுகின்றன. அதன் காரணமாக ஜீப்பின் எஞ்சின் சில எளிய முறையைக் கொண்டு பாதுகாக்கப்பட்டுள்ளன.

 நீருக்கு அடியில் ஜீப்பை செலுத்தி சாகசம் !!

பெட்ரோல் எஞ்சின் இயங்கும் போது, அதற்கு நீர் மற்றும் காற்று தேவைகள் மறைமுகமாக தேவைப்படுகிறது. ஆனால் டீசல் எஞ்சினில் அதுபோல தேவையிருந்தால் பயன்படுத்தாலாம். இந்த வசதியால் ஜீப்பின் எஞ்சினில் ஏந்த கோளாறும் ஏற்படவில்லை என்று வீடியோவில் ஜீப்பை நீருக்கு அடியில் செலுத்தியவாறே கூறுகிறார் ஃபெர்ட் வில்லியம்ஸ்.

நீருக்கு அடியில் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் வாகனத்தை செலுத்த, மேலும் ஒரு முக்கியமான வசதியை 'தி டர்ட் எவிரி டே' குழு ஒரு வசதியை வண்டியில் பொருத்தியுள்ளனர். அதுதான் ஸ்னார்கெல்ஸ் (snorkels). எஞ்சினுக்கு தங்கு தடையில்லாமல் காற்றை தரும் உபகரணம் இது.

நீருக்கு அடியில் ஜீப்பை செலுத்தி சாகசம் !!

உயர்ந்த பகுதிகளுக்கு செல்ல தீயனைப்பு வண்டிகளில் ஸ்னார்கெல்ஸ் வசதி செய்யப்படும். இந்த தொழில்நுட்பம் சில டிரக்குகளிலும் இருக்கும். ஹைட்ராலிக் திறன் கொண்டு இயங்கும் ஸ்னார்கெல்ஸ் தொழில்நுட்பம், ஜீப்பை நீருக்கு அடியில் செலுத்தும் சகாசத்திற்கு முக்கிய பங்காற்றியுள்ளது.

'தி டர்ட் எவிரி டே' நிகழ்ச்சியில் நீருக்கு அடியில் ஃபெர்ட் வில்லியம்ஸ் ஜீப் செலுத்தும் காணொளி காட்சியை பாருங்கள்...

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
James Bond dream come true. Cummins-diesel powered Jeep Wrangler also works as a submarine
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X