மலைச்சாலையில் எந்த முறையில் பிரேக் பயன்படுத்தலாம்? - வீடியோ டுடோரியல்..!

Written By:

மலைச்சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கையில், ஆபத்தான வளைவை எதிர்நோக்கும் போது ஓட்டுநர் செய்யக்கூடாத செயல் என்ன என்பது அண்மையில் நடந்த ஒரு சம்பவம் மூலம் தெரிய வருகிறது. இந்த தகவல் நிச்சயம் ஆச்சரியம் அளிப்பதாக இருக்கும் என நம்புகிறோம்.

இது குறித்து பலரிடம் முன்வைத்த ஒரு கேள்வியை உங்களிடமும் முன்வைக்கிறோம்..

மலைச் சாலை ஒன்றில் பைக்கில் அதிவேகமாக சென்றுகொண்டிருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம், அப்போது நீங்கள் ஆபத்தான வளைவை எதிர்கொள்ள இருக்கிறீர்கள்.

அதேசமயம், அந்த சாலை வளைவில் எதிரே பெரிய வாகனம் ஒன்றும் வந்துகொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையை தவிர்க்க என்ன மாதிரியான செயலை உடனடியாக நீங்கள் செய்வீர்கள்?

இந்த கேள்விக்கு பலரும் உடனடியாக பிரேக்கை அழுத்துவதோடு வண்டியின் வேகத்தையும் குறைப்போம் என்று தான் கூறினார்கள். இது தான் நாமும் செய்வோம் என்று வைத்துக்கொள்வோம். இது ஆபத்தில் தான் போய் முடியும் என்றால் நம்புவீர்களா?

ஆம், நிச்சயம் இது உண்மை தான். இதற்கு ஒரு உதாரணம் ஒன்றை கூறுகிறோம் கேளுங்கள்..

அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியாவில் உள்ள மலைச்சாலை ஒன்றில் பைக் குழு ஒன்று தங்களது சூப்பர் பைக்குகளில் அதிவேகத்தில் ஒருவர்பின் ஒருவராக பயணித்துக் கொண்டிருந்தது.

அப்போது, ஆபத்தான வளைவு ஒன்றை அவர்கள் எதிர்நோக்கினர். அப்போது அதே வளைவில் பெரிய வாகனம் ஒன்றும் எதிரே வந்துகொண்டிருந்தது.

பைக்கில் பயணப்பட்ட குழுவைச் சேர்ந்த ஒருவர் எல்லோரையும் போல பைக்கின் பிரேக்கை உடனடியாக அழுத்தினார். உடனடியாக பிரேக் போட்டதில் வண்டியின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்டு பக்கவாட்டில் இருந்த சாலைத்தடுப்பில் மோதி பள்ளத்தாக்கில் பைக்குடன் பறந்து சென்றார் அந்த ரைடர்.

இதைப்பார்த்த பின்னால் வந்துகொண்டிருந்த இந்த குழுவைச் சேர்ந்த மற்றொருவர் அணிந்துகொண்டிருந்த ஹெல்மெட்டில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகிக்கொண்டிருந்தது.

அந்த நபர் உடனடியாக தனது வாகனத்தை நிறுத்தியதோடு சம்பவம் நடந்த இடத்துக்கு ஓடோடிச் சென்று கீழே இறங்கி பார்த்தபோது சிறிய காயங்களோடு அந்த நபர் மரங்களுக்கு நடுவே சிக்கி உயிர்பிழைத்ததை கண்டார்.

பின்னர் அவர் தகவல் அளித்ததன் பேரில் ஹெலிகாப்டரில் விரைந்து வந்த மீட்புக் குழு, அடிபட்டவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது. மரங்களுக்கு இடையில் சிக்கியதால் அவர் அதிசயமாக உயிர் பிழைத்துள்ளார் என்று மீட்புக் குழு தெரிவித்தது.

இவரின் பைக் சில கிலோமீட்டர்களுக்கு கிழே, பள்ளத்தாக்கில் விழுந்து சுக்குநூறானது தனிக்கதை. இந்த சம்பவத்தில் இருந்து சிறந்த பாடம் ஒன்றை நாம் கற்றுக்கொள்ள இருக்கிறோம்.

முதலாவது இதைப் போன்ற சந்தர்ப்பங்களில் பிரேக்கை அழுத்தமாக பிடிப்பது பைக்கின் நிலைத்தன்மையை மாற்றிவிடும் என்பதோடு மோசமான விளைவுகளையும் ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

பைக் வேகத்தை குறைப்பதோடு, பின் பக்க பிரேக்கை சீரான விசையில் அழுத்துவது பைக்கை நேர் கோட்டில் வைத்திருக்க உதவும். பின்னர் முன்பக்க பிரேக்கை உபயோகிக்கலாம். இதுவே சிறந்த ஆபத்தில்லா பிரேக் உபயோகிக்கும் முறையாகும்.

வேகம் என்பது திரில்லங் தருவதாக இருந்தாலும், ஆபத்திற்கும் அழைத்துச்செல்லும் என்பதனை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். அதிலும் அதிக ஆபத்து நிறைந்த மலைச்சாலைகளில் பயணிக்கும் போது குறைந்த வேகத்தில் செல்வதே பாதுகாப்பானதாகும்.

குறைந்த வேகத்தில் செல்வதோடு, இதைப்போன்ற ஆபத்தை எதிர்கொள்ள நேர்கையில் மேற்கூறிய முறையில் பிரேக் உபயோகிப்பது பாதுகாப்பான பயணத்திற்கு வழிவகுக்கும். பதற்றத்தில் தவறான முறையில் செயல்படாமல் இருப்பது நல்லது.

இந்த பாடத்தை கற்றுத்தந்த அந்த சம்பவத்தை முழுமையாக படம்பிடித்தவர் அதனை சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்துள்ளார். மேலே உள்ள ஸ்லைடரில் அந்த வீடீயோவை காணுங்கள்..

English summary
Read in Tamil about how to use brakes in hill driving in bike
Please Wait while comments are loading...

Latest Photos