பாலிவுட் நடனப் புயல் ஹிருத்திக் ரோஷன் கார் கலெக்ஷன்!

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று புகழப்பெறும் பிரவுதேவாவுக்கு அடுத்து நடனத்தில் பெரும் புகழை சம்பாதித்து வைத்திருப்பவர் ஹிருத்திக் ரோஷன். இவரது கால்கள் நடனத்தில் பேசும்போது, அதனை காணும் கண்கள் கூட இமைப்பதை மறுந்துவிடும். அந்த அளவுக்கு தனது நடனம், நடிப்பால் லட்சோப லட்சம் ரசிகர் இதயங்களில் சிம்மாசனம் போட்டிருக்கும் ஹிருத்திக் ரோஷனும் பெரும் கார் விரும்பிதான்.

ஓய்வு நேரங்களில் காரில் வலம் வருவதுதான் இவரது மனதுக்கு இதம் தருகிறதாம். நடனத்தில் மட்டுமல்ல இவர் புயல் அல்ல. காரை ஓட்டுவதிலும் கில்லாடி என்று நண்பர்கள் வட்டாரத்தில் அறியப்பெற்றவர். மார்க்கெட்டில் இருக்கும் சிறந்த கார்களை தேர்ந்தெடுப்பதில் சூரராக இருக்கும் ஹிருத்திக் ரோஷனின் கார் கலெக்ஷன் தகவல்களை படங்களுடன் ஸ்லைடரில் காணலாம்.

பென்ஸ் எஸ் கிளாஸ்

பென்ஸ் எஸ் கிளாஸ்

மார்க்கெட்டில் இருக்கும் மிகச்சிறந்த சொகுசு கார் பென்ஸ் எஸ் கிளாஸ். ஏராளமான வசதிகளை கொண்ட இந்த காரில் லெதர் இருக்கைகள், ஜிபிஎஸ் சிஸ்டம், 7 சர்ரவுண்ட் மியூசிக் சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்கள். இதனால், அதிக பிரிமியம் கொண்டதாக இருக்கிறது இதன் இன்டிரியர். ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஏர்பேக்ஸ் என நவீன பாதுகாப்பு வசதிகளையும் கொண்டிருக்கிறது.

பென்ஸ் எஸ் கிளாஸ் எஞ்சின்

பென்ஸ் எஸ் கிளாஸ் எஞ்சின்

210 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 3.0 லிட்டர் எஞ்சின் கொண்ட இந்த காரில் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது. மணிக்கு 250 கிமீ வேகத்தில் செல்லும் ஆற்றல் வாய்ந்தது. மொத்ததில் சொகுசும், ஆற்றலும் கலந்த சிறந்த மாடல்தான் ஹிருத்திக் கேரேஜை அலங்கரிக்கிறது. ரூ.1.25 கோடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

 போர்ஷே கேயென்னி

போர்ஷே கேயென்னி

பாலிவுட் நட்சத்திரங்களின் இல்லங்களின் போர்டிகோவில் ஸ்டான்டர்டு ஆக்சஸெரீயாக மாறி வருகிறது போர்ஷே கேயென்னி எஸ்யூவி. நீண்ட தூர பயணங்களுக்கு ஹிருத்திக் இந்த காரைத்தான் பயன்படுத்துகிறார். சிறந்த இன்டிரியர் கொண்ட கார் மாடல்களின் ஒன்று. டிரைவர் காக்பிட், பின் இருக்கை தாராள இடவசதி மற்றும் வசதிகளை கொண்டிருக்கிறது. லெதர் இருக்கைகள், டிஎஃப்டி டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் ஆகிய முக்கிய அம்சங்களோடு மிடுக்கான டிசைனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

போர்ஷே கேயென்னி எஞ்சின்

போர்ஷே கேயென்னி எஞ்சின்

240 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 3.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் இந்த காரில் 7 டிரிப்ட்ரோனிக் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனை கொண்டிருக்கிறது. 0-100 கிமீ வேகத்தை 7.8 வினாடிகளில் தொட்டு விடும் ஆற்றல் கொண்ட இந்த எஸ்யூவி மணிக்கு அதிகபட்சமாக 180 கிமீ வேகம் வரை செல்லும். ரூ.80 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஜாகுவார் எக்ஸ்ஜே

ஜாகுவார் எக்ஸ்ஜே

சிறந்த பிரிமியம் கார்களில் ஒன்றான ஜாகுவார் எக்ஸ்ஜே ஹிருத்திக்கின் ஆல்டைம் ஃபேவரிட் கார். தாராள இடவசதி, மிகச்சிறந்த சொகுசு இருக்கைகள், நவீன வசதிகள் என அனைத்து அம்சங்களிலும் ஹிருத்திக்குக்கு நிறைவை கொடுத்து வருகிறதாம் ஜாகுவார் எக்ஸ்ஜே. 385 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட 5.0 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இசட்எஃப் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனை கொண்டிருக்கிறது. அதிகபட்சமாக மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் ஆற்றல் வாய்ந்தது. ஒரு கோடி ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ரேஞ்ச்ரோவர் எவோக்

ரேஞ்ச்ரோவர் எவோக்

நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது ரேஞ்ச்ரோவர் எவோக்தான் ஹிருத்திக்கின் ஃபர்ஸ்ட் சாய்ஸ். கையால் தைக்கப்பட்ட லெதர் இருக்கைகள், தரமான பாகங்கள், நவீன தொழில்நுட்ப வசதிகள் என இன்டிரியர் பட்டியல் நீள்கிறது. எல்சிடி திரை கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம் குறிப்பிடத்தக்க அம்சம். 187 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. மணிக்கு அதிகபட்சமாக 205 கிமீ வேகம் வரை செல்லும். 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது. ரூ.80 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

 ஹிருத்திக் ரோஷன் கார் கலெக்ஷன்!

ஹிருத்திக் ரோஷன் கார் கலெக்ஷன்!

 ஹிருத்திக் ரோஷன் கார் கலெக்ஷன்!

ஹிருத்திக் ரோஷன் கார் கலெக்ஷன்!

Most Read Articles
English summary
Bollywood Actor Hrithik Roshan is a true car lover. Check out Hrithik Roshan's car collection in pictures.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X