பேட்மேனை பின்னிற்கு தள்ளி ஃபெராரி கார் ஓட்டப்போகும் உல்வரின்

என்ஸோ ஃபெராரி பற்றிய வாழ்க்கை வரலாற்று படத்தில் கிறிஸ்டியன் பேல் நடிப்பதாக இருந்ததை அடுத்து ஹூக் ஜேக்மென் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Written by: Azhagar

உலகின் பிரபல கார் கம்பெனிகளில் முன்னணியாக உள்ள ஃபெராரி காரின் நிறுவனரான என்ஸோ ஃபெராரியின் வாழ்க்கை, திரைப்படமாக உருவாகவுள்ளது. இப்படத்தில் என்ஸோவாக முதலில் கிறிஸ்டியன் பேல் நடிப்பார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது ஹூக் ஜேக்மென் ஃபெராரி நிறுவனர் என்ஸோவாக நடிக்கிறார்.

இதுகுறித்து வெளியான சமீபத்திய தகவலின் படி, கிறிஸ்டின் பேலிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் படத்திலிருந்து விலகிவிட்டதாகவும், அதனால் தயரிப்பு தரப்பு ஹூக் ஜேக்மெனை ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது

கிறிஸ்டியேல் பேல் நடிப்பதை எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு, ஃபெராரி படத்திலிருந்து அவர் வெளியேறியது வருத்தமளித்திருந்தாலும், கிறிஸ்டியன் பேலின் நண்பரான ஹூக்ஜேக்மென் அப்படத்தில் நடிப்பதற்கு ரசிகர்கள் மகிழ்ச்சியே தெரிவித்துள்ளனர்.

எக்ஸ்மென் வரிசைப் படங்களில் உல்வரினாக நடித்து வந்த ஹூக் ஜேக்மென், பல காட்சிகளில் கார்களில் ஸ்டண்ட் செய்து ரசிகர்களிடம் பாராட்டுதலை பெற்றவர். இதன் காரணமாக என்ஸோ ஃபெராரியின் வாழ்க்கையை தழுவி உருவாகும் ஃபெராரி படத்தில் ஹூக் ஜேக்மென் நடிப்பது பொருத்தமான ஒன்று தான் எனவும் ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தற்போது தோல்புற்றுநோய்க்கான சிகிச்சையிலிருந்து வீடு திரும்பியுள்ள ஹூக் ஜேக்மென், என்ஸோவாக நடிப்பதற்கு உடல் எடையை கூட்டவேண்டும். அப்போது தான் ஃபெராரி கதாபாத்திரத்தின் தன்மை ரசிகர்களுக்கு எளிதில் புரியும்.

ஹூக் ஜேக்மென் நடிப்பில் சமீபத்தில் வெளியான லோகன் படம் தான் உல்வரினாக அவர் நடித்த கடைசிப் படம். அதனால், இனி அவர் எடையை கூட்டவேண்டியதில் எந்த பிரச்சனையும் இல்லை. மேலும் உடல் எடையோடு ஹூக் ஜேக்மென் படத்தில் நடித்தால், ஃபெராரியின் உடல்சாயல் அவருக்கு எளிதில் வந்துவிடும் என்பதை என்ஸோ ஃபெராரியின் அபிமானிகள் தெரிவித்துள்ளனர்

ஃபெராரி கார்களின் தோற்றம் வளர்ச்சி, அதற்காக நிறுவனர் ஃபெராரியின் உழைப்பு என கமர்ஷியல் மற்றும் ஆர்ச் சினிமா என சமகால ரசிகர்களுக்கு ஏற்றவாறு இப்படம் உருவாகவுள்ளது. என்ஸோ ஃபெராரியை சுற்றியே திரைக்கதை அமையவுள்ளதால் படத்திற்கு அவர் பெயரையே தலைப்பாக படக்குழு வைத்துவிட்டனர்.

2018ம் ஆண்டு கோடைக்காலத்தில் தொடங்கப்பட்டு 2019ம் ஆண்டின் தொடக்கத்தில் என்ஸோ ஃபெராரி படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹூக் ஜேக்மென் நடிக்கும் இந்த படத்தோடு, ஹாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் ராபர்ட் டீ நீரோவும் ஃபெராரியாக நடிக்கும் மற்றொரு படமும் விரைவில் உருவாகவுள்ளது.

சூப்பர் கார் என்று நாம் நினைத்தாலே அது ஃபெராரி கார்கள் தான், 2017 ஜெனிவா கண்காட்சியில் ஃபெராரி நிறுவனம் வெளியிட்ட 812 சூப்பர்ஃபாஸ்ட் காரின் புகைப்பட தொகுப்பை கீழே காணுங்கள்

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Hugh Jackman is set to star as Enzo Ferrari in the biopic about the the iconic Ferrari founder. Jackman will replace The Dark Knight actor Christian Bale as Enzo.
Please Wait while comments are loading...

Latest Photos