முதல் சோதனை ஓட்டத்திற்கு தயாரான ஹைப்பர்லூப்

உலகளவில் பல நாடுகளில் ஹைப்பர்லூப் போக்குவரத்திற்கான கட்டமைப்புகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் முதல் சோதனை ஓட்டம் லாஸ் வேகாஸின் பாலைவனத்தில் நடத்தப்படவுள்ளது.

Written By:

அதிவேகத்தில் குழாய் வடிவிலான அமைப்பில் கற்பனைக்கு எட்டாத வேகத்தில் பயணிக்க வழிவகை செய்யும் தொழில்நுட்பம் தான் ஹைப்பர்லூப். அமெரிக்காவின் பிரபல தொழிலதிபரான எலன் மஸ்க் என்பவர் 2012ம் ஆண்டில் ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தார்.

உலகளவில் 12 நிறுவனங்கள் ஹைப்பர்லூப் போக்குவரத்திற்கான கட்டமைப்புகளில் இறங்கியுள்ளன. இத்திட்டத்தை செயல்படுத்தும் முதல் நாடாக ஐக்கிய அரபு அமீரகம் இருக்கும். ஹைப்பர்லூப் ஒன் நிறுவனத்துடன் அந்நாட்டு அரசு செய்துகொண்ட ஒப்பந்தத்தின் படி, 2021ஆம் ஆண்டில் துபாய் மற்றும் அபுதாபிக்கு இடையில் ஹைப்பர்லூப் போக்குவரத்து துவங்கும்.

இந்த போக்குவரத்து சாதனத்தை செயல்படுத்த அமெரிக்கா, ஸ்லோவேகியா, செக் குடியரசு, துபாய், இந்தோனேசியா, இந்தியா, பிரான்ஸ் உள்ளிட்ட 28க்கும் மேற்பட்ட நாடுகள் ஹைப்பர்லூப் ஒன் நிறுவனத்தை அனுகியுள்ளன. இதில் இரண்டாவது நாடாக அமெரிக்க இருக்கும்.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் மாகாணத்தில் உள்ள நெவாடா பாலைவனத்தில் ஹைப்பூர்லூப் போக்குவரத்தை கட்டுமானப்படுத்த 500 மீட்டர் தொலைவு கொண்ட சோதனை குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஹைப்பூர்லூப் சாதனத்திற்கான சோதனை ஒட்டம் இன்னும் 2 மாதங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 11 இடங்களில் ஹைப்பர்லூப் போக்குவரத்திற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்படுகின்றன. இதில் வட அமெரிக்காவின் ஷையேன் முதல் தென் அமெரிக்காவின் ஹூஸ்டன் வரையிலான 1815.2 கிலோ மீட்டர், அதிக தொலைவு கொண்ட ஹைப்பர்லூப் போக்குவரத்தாக உள்ளது.

இதற்கு பிறகு சிறியளவிலான ஹைப்பர்லூப் போக்குவரத்து சேவை 102 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட பாஸ்டன் முதல் பிராவிடென்ஸ் வரையில் அமைக்கப்படவுள்ளது.

ஷையேனிலிருந்து காரில் பயணம் செய்தால், குறைந்தது 17 மணி நேரம், 43 நிமிடங்கள் வரை பயணித்து தான் ஹூஸ்டனனை அடைய முடியும். ஆனால் ஹைப்பர்லூப் போக்குவரத்தின் மூலம் 45 நிமிடங்களில் ஷையேனிலிருந்து ஹூஸ்டனை அடையலாம்.

மேலும் இங்கிலாந்திலும் ஹைப்பூர் போக்குவரத்திற்கான கட்டமைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 3 மணி நேர பயண தூரத்தை கொண்ட லண்டன் முதல் மான்செஸ்ட்டருக்கு ஹைப்பர்லூப் போக்குவரத்தின் மூலம், 18 நிமிடங்களில் சென்றடையலாம்.

தூண்கள் மீது அமைக்கப்படும் வெற்றிடக் குழாய்கள் மூலம் போக்குவரத்து நடைபெறும் ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தில், கேப்சூல்கள் போன்ற சாதனங்களில் மக்கள் பயணிக்கலாம். சக்கரங்களில்லாமல், இதனுடைய நகர்வு காற்றின் எதிர்ப்பு விசையை பயன்படுத்தி உராய்வற்ற பயணச்சூழலை உருவாக்கி தருகிறது.

ஹைப்பர்லூப் ஒன் மட்டுமின்றி இதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கி தருவதில் உலகளவில் பல்வேறு நிறுவனங்கள் முயன்று வருகின்றன. அதில் ஒன்று தான் ஹைப்பர்லூப் போக்குவரத்து தொழில்நுட்ப நிறுவனம் (Hyperloop Transportation Technologies). இது தற்போது ஹைப்பர்லூப்பிற்கான கேப்சூல்களை தயாரிப்பதில் விறுவிறுப்பாக இறங்கியுள்ளது.

28 முதல் 40பேர் வரை பயணிக்கும் வகையில் ஹைப்பர்லூப் போக்குவரத்து தொழில்நுட்ப நிறுவனம் தயாரித்து வரும் கேப்சூல்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இது அடுத்தாண்டு தொடக்கத்தில் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்க, இங்கிலாந்து ஆகிய நாடுகளை தொடர்ந்து இந்தியா மற்றும் மத்திய ஐரோப்பிய நாடுகளிலும் ஹைப்பர்லூப் போக்குவரத்திற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்பட வாய்ப்புள்ளன.

இந்தியாவில் ஹைப்பர்லூப் அமையுமானால் 6 மணி நேர பயண தூரம் கொண்ட சென்னை முதல் பெங்களூருக்கு வெறும் 12 நிமிடங்களில் பயணிக்கலாம் என்பது இதன் வேகத்துக்கு எடுத்துக்காட்டாகும்.

அதிகம் வாசிக்கப்படும் இதர செய்திகள்...

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #ஆஃப் பீட் #off beat
Story first published: Thursday, April 13, 2017, 16:01 [IST]
English summary
Hyperloop high speed transporting system ready for its first trial run at las vegas. Click for more, it excites you...
Please Wait while comments are loading...

Latest Photos