விமானத்தை விஞ்சும் வேகம்... ஹைப்பர்லூப் போக்குவரத்து சாதனத்தின் கட்டுமானம் துவக்கம்!

மணிக்கு 1200 கிமீ வேகத்தில் விமானத்தை விட வேகமாக செல்லும் ஹைப்பர்லூப் போக்குவரத்து அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.

By Arun

குழாய் வடிவிலான இயந்திரத்தில் நாம் கற்பனையும் செய்ய முடியாத வேகத்தில் பயணிக்க வழி செய்யும் போக்குவரத்து முறை தான் 'ஹைப்பர்லூப்'. ஆற்றல் சேமிப்பு தொழிலில் உலகின் முன்னோடியாக விளங்கும் 'டெஸ்லா' நிறுவனத்தின் தலைவர் 'எலான் மஸ்க்' கற்பனையில் உருவான ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் பலகட்ட சோதனைகளில் வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து வணிக ரீதியாக ஹைப்பர்லூப் ஒன் போக்குவரத்தை செயல்படுத்தும் பணிகளில் இறங்கியுள்ளனர்.

1200 கிமீ வேக ஹைப்பர்லூப் சாதனத்தின் கட்டுமானம் துவக்கம்

தற்போதைய காலகட்டத்தில் அனைவருக்கும் பெரிய இடையூறாக இருப்பது போக்குவரத்து தான். சாலை, ரயில் போக்குவரத்தை தவிர்த்து ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வெகு விரைவாக செல்லவேண்டுமென்றால் விமானத்தில் தான் அனைவரும் பயனிக்கின்றனர்.

1200 கிமீ வேக ஹைப்பர்லூப் சாதனத்தின் கட்டுமானம் துவக்கம்

தற்போது அதையும் மிஞ்சும் வகையில் தான் இந்த ஹைப்பர்லூப் போக்குவரத்து இருக்கப்போகிறது. தூண்கள் மீது அமைக்கப்படும் வெற்றிடக் குழாய்கள் மூலம் போக்குவரத்து நடைபெறும் ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தில், கேப்சூல்கள் போன்ற சாதனங்களில் மக்கள் பயணிக்கலாம்.

1200 கிமீ வேக ஹைப்பர்லூப் சாதனத்தின் கட்டுமானம் துவக்கம்

மணிக்கு 1200 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய இது கூடிய விரைவிலேயே உலகின் அதிவேக மக்கள் போக்குவரத்து முறையாக இருக்கப்போகிறது. இந்த சாதனத்தின் மூலம் 6 மணி நேர பயண தூரம் கொண்ட சென்னை முதல் பெங்களூருக்கு வெறும் 12 நிமிடங்களில் பயணிக்கலாம் என்பது இதன் வேகத்துக்கு எடுத்துக்காட்டாகும்.

1200 கிமீ வேக ஹைப்பர்லூப் சாதனத்தின் கட்டுமானம் துவக்கம்

இது மிகவும் பாதுகாப்பான போக்குவரத்து சாதனமாகவும் சொல்லப்படுகிறது. நிலநடுக்கத்தில் கூட இதன் கட்டமைப்பு பாதிக்காது என கூறப்படுகிறது.

1200 கிமீ வேக ஹைப்பர்லூப் சாதனத்தின் கட்டுமானம் துவக்கம்

இந்த போக்குவரத்து சாதனத்தை செயல்படுத்த அமெரிக்கா, ஸ்லோவேகியா, செக் குடியரசு, துபாய், இந்தோனேசியா, இந்தியா, பிரான்ஸ் உள்ளிட்ட 28க்கும் மேற்பட்ட நாடுகள் ஹைப்பர்லூப் ஒன் நிறுவனத்தை அனுகியுள்ளன. இதில் சில நாடுகளில் ஆரம்பகட்ட வேலைகளும் துவங்கியுள்ளது.

1200 கிமீ வேக ஹைப்பர்லூப் சாதனத்தின் கட்டுமானம் துவக்கம்

ஹைப்பர்லூப் போக்குவரத்து துவங்கும் முதல் நாடாக ஐக்கிய அரபு அமீரகம் இருக்கும். இதற்காக ஹைப்பர்லூப் ஒன் நிறுவனத்துடன் அந்நாட்டு அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. தற்போது இதற்கான சோதனைகட்டம் துவங்கியுள்ளது. வரும் 2021ஆம் ஆண்டில் துபாய் மற்றும் அபுதாபிக்கு இடையில் போக்குவரத்தை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.

பலவருட சோதனை, ஆய்வுக்கு பின்னர் தற்போது இரண்டு நிறுவனங்களும் இணைந்து ஹைப்பர்லூப் போக்குவரத்தின் கேப்சூல் சாதனங்களை தயாரிக்கும் பணியை தற்போது தொடங்கியுள்ளனர்.

2018ஆம் ஆண்டின் துவக்கத்தில் கேப்சூல்கள் டெலிவரி செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

1200 கிமீ வேக ஹைப்பர்லூப் சாதனத்தின் கட்டுமானம் துவக்கம்

தயாரிக்கப்படும் கேப்சூல்கள் பற்றிய விவரங்கள் தற்போது வெளிவந்துள்ளன.

நீளம்: 30 மீட்டர்கள் (98.5 அடி)

சுற்றளவு: 2.7 மீட்டர்கள் (9 அடி)

எடை: 20 டன்கள் (20,000 கிலோ)

பயணிகள் அளவு: 28- 40

வேகம் : அதிகபட்சமாக மணிக்கு 1223 கிமீ (760 மைல்கள்)

1200 கிமீ வேக ஹைப்பர்லூப் சாதனத்தின் கட்டுமானம் துவக்கம்

இது தொடர்பாக ஹைப்பர்லூப் ட்ரான்ஸ்போர்டேஷன் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிர்க் அல்ஹ்போர்ன் கூறுகையில், "பயணிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து கேப்சூல்கள் தயாரிக்கப்படுகின்றன, இதில் பயணிகள் போக்குவரத்து மட்டுமல்லாமல் சரக்கு போக்குவரத்தையும் மேற்கொள்ளலாம்" என்றார்.

1200 கிமீ வேக ஹைப்பர்லூப் சாதனத்தின் கட்டுமானம் துவக்கம்

நிலத்தில் மட்டுமே தற்போது செயல்படுத்தப்பட செயல்வடிவம் பெற்றுள்ள ஹைப்பர்லூப் போக்குவரத்து, கடலுக்கு அடியிலும் செயல்படுத்தும் வகையில் ஹைப்பர்லூப் ஒன் நிறுவனம் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. இதில் சாத்தியக்கூறுகள் கிடைக்கும்பட்சத்தில் கண்டங்களுக்கு இடையிலான போக்குவரத்தையும் ஹைப்பர்லூப் சாத்தியப்படுத்தும்.

1200 கிமீ வேக ஹைப்பர்லூப் சாதனத்தின் கட்டுமானம் துவக்கம்

அப்படி நிகழ்ந்தால், ஹைப்பர்லூப் போக்குவரத்து சாதனத்தில் காலையில் சென்னையிலிருந்து கிளம்பி துபாய், சிங்கப்பூர், சீனா போன்ற நாடுகளுக்கு வேலைக்குசென்று விட்டு, கடல்வழியாக மாலையில் மீண்டும் சென்னைக்கே திரும்பும் வகையில் உலகையே சுருக்கிவிடும் மாயாஜாலத்தை ஹைப்பர்லூப் போக்குவரத்து அரங்கேற்றும் என நம்பலாம்.

Most Read Articles
English summary
hyperloop transport technologies company starts capsule production, worlds high speed transport method.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X