ஒலியைவிட 10 மடங்கு வேகத்தில் பறக்கும் ஹைப்பர்சானிக் பயணிகள் விமானம்!

By Saravana

ஒலியைவிட 10 மடங்கு கூடுதல் வேகத்தில் வல்லமை கொண்ட பயணிகள் விமான கான்செப்ட் ஒன்றை கனடா நாட்டை சேர்ந்த சார்லஸ் பம்பார்டியர் வெளியிட்டுள்ளார்.

அடுத்த தலைமுறை விமானங்களை எவ்வாறு வடிவமைக்கலாம் என்பதற்கான அடித்தளமிடும் வகையில் இந்த கான்செப்ட் அமைந்திருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

வெளியீடு

வெளியீடு

கனடா நாட்டிலிருந்து வெளிவரும் குளோப் அண்ட் மெயில் என்ற பத்திரிக்கையில்தான் சார்லஸ் பம்பார்டியரின் புதிய விமானத்தின் கான்செப்ட் படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

பெயர்

பெயர்

ஸ்க்ரீமர் என்ற பெயரில் இந்த விமான கான்செப்ட் வெளியிடப்பட்டுள்ளது. இது பிற விமானங்களைவிட மிகவும் வித்தியாசமான வடிவமைப்பை பெற்றிருக்கிறது.

கன்கார்டு ஜுஜுபி

கன்கார்டு ஜுஜுபி

உலகின் அதிவேக பயணிகள் விமானம் என்ற பெருமைக்குரிய கன்கார்டு விமானத்தைவிட இந்த புதிய விமானம் 5 மடங்கு கூடுதல் வேகத்தில் செல்லும்.

அதிகபட்ச வேகம்

அதிகபட்ச வேகம்

மணிக்கு 8000 மைல் வேகம், அதாவது மணிக்கு 12,348 கிமீ வேகத்தில் இந்த விமானமானது பறக்கும் என்று சார்லஸ் பம்பார்டியர் தெரிவித்துள்ளார்.

பிரத்யேக தடம்

பிரத்யேக தடம்

இந்த விமானத்தை பிரத்யேக காந்தபுல தடத்தில் வைத்து ஓடுபாதை போன்று முதலில் செலுத்தப்படும். மணிக்கு 1,235 கிமீ வேகத்தை அடைந்ததும், மேலே எழும்புவதற்கு இந்த விமானத்தில் உள்ள திரவ ஆக்சிஜன் மறறும் மண்ணெண்ணெயில் இயங்கும் ராக்கெட் எஞ்சின் குறிப்பிட்ட உயரத்திற்கு விமானத்தை கொண்டு செல்லும்.

வேகம்

வேகம்

விமானம் குறிப்பிட்ட உயரத்தை அடைந்ததும், மேக் 10 என்ற ஒலியின் வேகத்தைவிட 10 மடங்கு அதிக வேகத்தில் பறக்கும். இதற்கு ஹைட்ரஜன் மற்றும் அழுத்தம் கூட்டப்பட்ட ஆக்சிஜனில் இயங்கும் ஸ்க்ராம்ஜெட் எஞ்சின் உதவும்.

பயணிகள்

பயணிகள்

இந்த விமானத்தில் அதிகபட்மாக 75 பயணிகள் செல்ல முடியும். மிக சொகுசானதாகவும், நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டதாகவும் இருக்கும்.

பயண நேரம்

பயண நேரம்

உதாரணத்திற்கு லண்டனிலிருந்து நியூயார்க் நகரை இந்த விமானம் வெறும் 30 நிமிடங்களில் கடந்து விடுமாம். எதிர்கால போக்குவரத்து துறையில் இந்த விமான கான்செப்ட்டை அடிப்படையாகக் கொண்டு புதிய ஹைப்பர்சானிக் விமானம் தயாரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Images Source: Charles Bombardier

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Hypersonic Jet Could Cross the Atlantic in 30 Minutes.
Story first published: Saturday, May 28, 2016, 16:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X