சிறுமியின் கனவை நனவாக்க உதவிய ஹூண்டாய்... கின்னஸிலும் இடம்!!

By Saravana

விண்வெளியில் இருக்கும் ஒருவருக்கு தகவல் அனுப்ப வேண்டுமெனில் இ-மெயில்தான் வழியாக இருக்கும். அதையும் விட்டால் தொலைபேசி ஒரு வாய்ப்பாக இருக்கலாம். ஆனால், அதீத அன்பு வைத்திருக்கும் ஒருவர் விண்வெளியில் இருக்கும்போது அவருக்கு தனது அன்பை மொத்தமும் கொட்ட வேண்டுமெனில் என்ன செய்யலாம்.

அப்படி யோசித்து கவலையில் இருந்த சிறுமியின் கனவை நனவாக்கியிருக்கிறது ஹூண்டாய். கின்னஸிலும் இடம்பிடித்திருக்கும் இந்த சம்பவத்தின் சிறப்புத் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

 அமெரிக்க சிறுமி

அமெரிக்க சிறுமி

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், ஹஸ்டன் நகரை சேர்ந்த ஸ்டெஃபானி என்ற 12வயது சிறுமி விண்வெளியில் உள்ள ஆய்வு மையத்தில் பணிபுரியும் தனது தந்தைக்கு அன்பை வெளிப்படுத்த நினைத்தார். அதன்படி, அந்த சிறிமி தனது கைப்பட எழுதிய Steph loves you என்ற வாசகத்தை அப்படியே விண்வெளியில் இருக்கும் தந்தைக்கு நேரடியாக காணும் விதத்தில் ஏற்பாடு செய்தது ஹூண்டாய். அது எப்படி?

திட்டம்

திட்டம்

சிறுமி கைப்பட பேப்பரில் எழுதிய வாசகத்தை போன்று கார்களின் டயர் தடத்தை பிரம்மாண்டமாக பதித்து அதனை சிறுமியின் தந்தை விண்வெளியில் இருந்து தொலைநோக்கி மூலமாக காணும் விதத்தில் ஹூண்டாய் ஏற்பாடு செய்தது.

நெவடா பாலைவனம்

நெவடா பாலைவனம்

அமெரிக்காவின் நெவடா பாலைவனப் பகுதியில் உள்ள டெலாமர் டிரை லேக் பகுதியை ஹூண்டாய் மோட்டார்ஸ் அதிகாரிகள் தேர்வு செய்தனர். இந்த வாசகத்தை கார்களின் டயர் தடம் மூலம் பதியச் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக, 11 ஹூண்டாய் ஜெனிஸிஸ் கார்கள் பயன்படுத்தப்பட்டன.

கின்னஸ் சாதனை

கின்னஸ் சாதனை

ஹூண்டாய் ஜெனிசிஸ் கார்கள் மூலமாக 5.55 சதுர கிமீ அளவுக்கு கார் டயர்களின் தடம் பாலைவனத்தின் தரைப்பகுதியில் பதிய செய்யப்பட்டது. இதுவரை இல்லாத அளவு டயர்கள் மூலம் உருவாக்கப்பட்ட இந்த தடம்தான் உலகிலேயே மிகப்பெரியதாக கருதப்படுகிறது. இது கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றது.

தந்தை நெகிழ்ச்சி

தந்தை நெகிழ்ச்சி

நெவடா பாலைவனத்தில் கார் டயர்கள் மூலம் பதியச்செய்யப்பட்ட சிறுமியின் வாசகத்தை விண்வெளியில் உள்ள மிதக்கும் ஆய்வுமையத்திலிருந்து சிறுமியின் சந்தை தொலைநோக்கி மூலம் நேரில் பார்த்து நெகிழ்ச்சியடைந்தார். மேலும், அதைவிட பன்மடங்கு மகிழ்ச்சியை ஸ்டெஃபானி பெற்றார்.

பொறியாளர்கள் குழு

பொறியாளர்கள் குழு

'விண்வெளிக்கு ஒரு செய்தி' என்ற பெயரில் இந்த திட்டம் வகுக்கப்பட்டது. இந்த திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றுவதற்காக அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தை சேர்ந்த பொறியாளர்கள் மற்றும் நிபுணர்கள் அடங்கிய செயலாற்றியது.

சவால்கள்

சவால்கள்

பல்வேறு தட்பவெப்பம் மற்றும் விண்வெளியிலிருந்து பார்ப்பதற்கான நில இயல் அமைப்பு சார்ந்த சவால்களை கடந்து இந்த திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றினர்.

Most Read Articles
English summary
Hyundai's spectacular tire track image record sends daughter's message to father in space
Story first published: Wednesday, April 15, 2015, 12:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X