வரி ஏய்ப்பு கார்கள் விவகாரம் - சிபிஐ வளையத்தில் அழகிரி?

முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியும் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட கார்களை பயன்படுத்தி வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிநாட்டு சொகுசு கார்களை இறக்குமதி செய்தத்தில் வரி ஏய்ப்பு செய்ததாக கடந்த வாரம் தமிழகத்தில் சிபிஐ அதிகாரிகள் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வீடு உள்பட ஒரே நேரத்தில் பல இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தினர்.

காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக., வெளியேறிய உடனே நடத்தப்பட்ட இந்த அதிரடி ரெய்டு அரசியல் வட்டாரத்திலும், தமிழகத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், சில கார்களை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகவும் கூறப்படுகிறது.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் வரி ஏய்ப்பு செய்த காரை பயன்படுத்தி வந்ததால் ரெய்டு நடந்ததாக கூறப்பட்டது. முன்னாள் மத்திய அமைச்சரும், தென்மாவட்ட திமுக பொறுப்பாளருமான அழகிரியும் சட்டவிரோதமாக இறக்குமதி செய்த கார்களை பயன்படுத்தி வந்துள்ளதாக தற்போது சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புது தலைவலி

புது தலைவலி

வரி ஏய்ப்பு செய்து இறக்குமதி செய்யப்பட்ட பல கார்களை திமுக தலைவர் கருணாநிதியின் குடும்பத்தினர் பயன்படுத்தி வந்ததாக சிபிஐ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிஎம்டபிள்யூ எக்ஸ்5

பிஎம்டபிள்யூ எக்ஸ்5

டிஎன் 04 ஏசி 000 என்ற பதிவெண் கொண்ட இந்த காரும் தற்போது சிபிஐ நடத்தி வரும் வரி ஏய்ப்பு விசாரணை வளையத்தில் உள்ளது.

லெக்சஸ் கார்

லெக்சஸ் கார்

டிஎன் 01 ஏஇ 8080 என்ற காரும் தற்போது சிபிஐ விசாரணை வளையத்தில் உள்ளதாம்.

டொயோட்டா பிராடோ

டொயோட்டா பிராடோ

டிஎன் 07 ஏக்யூ 6000 என்ற டொயோட்டா பிராடோ எஸ்யூவியும் வரி ஏய்ப்பு வழக்கில் இருக்கிறதாம்.

டொயோட்டா எஸ்டிமா

டொயோட்டா எஸ்டிமா

டிஎன் 03 7789 என்ற டொயோட்டா எஸ்டிமா வேன் உதயநிதி ஸ்டாலின் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

 2008ல் தொடங்கிய விசாரணை

2008ல் தொடங்கிய விசாரணை

2008ம் ஆண்டு சென்னை சுங்கத் துறை வழியாக இறக்குமதி செய்யப்பட்ட கார்கள் தொடர்பாக வருவாய் புலனாய்வு இயக்குனரகம் திமுக., முக்கிய புள்ளிகள் வீடுகளில் சோதனை நடத்தியது. இதில், வரி ஏய்ப்பு ஆவணங்கள் தயாரித்த அலெக்ஸுக்கு எதிரான ஆவணங்கள் சிக்கியதாகவும், ஆனால், வருவாய் புலனாய்வுத் துறை நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

காவந்து செய்த அதிகாரி

காவந்து செய்த அதிகாரி

இதுதொடர்பான விசாரணை நடத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரி முருகானந்தம் என்பவர் அழகிரி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரிடம் இருந்த சட்டவிரோத கார்களை பறிமுதல் செய்யாமல் விட்டதோடு, சம்பந்தப்பட்ட கார்களை "தேட இயலவில்லை" என்று விசாரணை அறிக்கையையும் சமரப்பித்துள்ளார். அவர் இரண்டு முறை பொய்யான அறிக்கை சமர்பித்ததாக தற்போது சிபிஐ விசாரணயைில் தெரியவந்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

Most Read Articles
English summary
It is not just DMK chief M Karunanidhi's younger son and his heir apparent MK Stalin and his son Udayanidhi, but even the DMK chief's elder son and former central minister MK Alagiri allegedly used illegally imported cars. 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X