10,000 கிமீ தூரம் செல்லும் புதிய ஏவுகணையை வெளியிட்ட ரஷ்யா!

Written By:

எதிரிகளிடம் இருந்து தற்காத்து கொள்வதற்கும் அல்லது வேட்டையாடுவதற்கும் ஆக்ரோஷமான உணர்வுகளை மிருகங்கள் வெளிப்படுத்தும். அதுபோலத்தான் மனித குலமும் இப்போது மாறிவிட்டது. எதிரிகளை மிரட்டுவதற்காகவும், தற்காத்துக் கொள்வதற்கும் மனித குலத்தை கொத்தாக மடியச் செய்யும் கொடிய ஆயுதங்களை தயாரிக்கும் பணிகளில் எல்லா நாடுகளுமே ஈடுபட்டுள்ளன.

அந்த வகையில், ஒரு தேசத்தையே ஒரு நொடியில் அழித்துவிடக்கூடிய கொடிய அணு ஆயுதத்தை தாங்கிச் செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய ஏவுகணை ஒன்றின் விபரங்களை ரஷ்யா வெளியிட்டிருக்கிறது. மேற்கத்திய நாடுகளை மிரட்டும் நோக்கில் வெளியிடப்பட்டிருக்கும் அந்த ஏவுகணை பற்றிய செய்திதான் சர்வதேச மீடியாக்களின் பரபரப்பான விஷயமாக உள்ளது.

ஆர்எஸ்-28 சர்மத் ஏவுகணை என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட இந்த ஏவுகணையானது சதன்-2 என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. எஸ்எஸ்-18 என்ற ஏவுகணைக்கு மாற்றாக ரஷ்ய ராணுவத்தில் சேர்க்ப்பட இருக்கிறது.

ஏவுகணை எதிர்ப்பு சாதனங்களின் கண்களில் மண்ணை தூவிவிட்டு எதிரி நாட்டு இலக்கை மிக துல்லியமாக தகர்த்துவிடும் வல்லமை கொண்ட அணு ஆயுத ஏவுகணை இது. வினாடிக்கு 7 கிமீ வேகத்தில் இந்த ஏவுகணையானது பயணிக்கும்.

இந்த ஏவுகணையானது 100 டன் எடை கொண்டதாக இருக்கிறது. இந்த ஏவுகணையானது 10 டன் வரை வெடிப்பொருட்களை சுமந்து செல்லும் வல்லமை படைத்தது. அணு ஆயுதம் இல்லாமல் சாதாரண வெடிப்பொருட்களை வைத்தும் ஏவ முடியும்.

திரவ எரிபொருளில் இயங்கும் ராக்கெட் பொறியில் செல்லும். இதன் முதல் நிலை எஞ்சின் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. மேக் 20 என்ற வேகத்தில் செல்லும். அதாவது மணிக்கு 24,500 கிமீ வேகத்தில் பறக்கும்.

சென்சார்களின் உதவியுடன் சுயமாகவே வழித்தடத்தை நிர்ணயித்து செல்லும் ஆற்றல் பெற்றிருக்கிறது. மேலும், மண்ணில் புதைக்கப்பட்ட உருளை அமைப்பிலான ஏவு தளத்திலிருந்து இதனை ஏவ முடியும். கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் எந்நேரமும் தயார் நிலையில் வைத்து, ஏவுவதற்கான இந்த ஏவுதளமானது சிலோ என்று அழைக்கப்படுகிறது.

1945ம் ஆண்டு ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகாசாகியில் அமெரிக்கா வீசியோ அணுகுண்டுகளை விட 2,000 மடங்கு அதிக சக்தியை கொண்ட அணுகுண்டுகளை இந்த ஏவுகணையானது சுமந்து செல்லும்.

இந்த ஏவுகணையானது 100 டன் எடை கொண்டதாக இருக்கிறது. இந்த ஏவுகணையானது 10 டன் வரை வெடிப்பொருட்களை சுமந்து செல்லும் வல்லமை படைத்தது. அணு ஆயுதம் இல்லாமல் சாதாரண வெடிப்பொருட்களை வைத்தும் ஏவ முடியும்.

ஆர்எஸ்-28 ஏவுகணையில் பொருத்தப்பட்டு இருக்கும் 16 அணு ஆயுதங்கள் மூலமாக பிரான்ஸ் போன்ற ஒரு தேசத்தையோ அல்லது அமெரிக்காவின் டெக்சாஸ் போன்ற பெரிய நிலப்பரப்பு கொண்ட மாகாணத்தையோ நொடியில் அழித்துவிட முடியும் என்று ரஷ்ய பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ரேடார் சாதனங்களின் கண்களில் சிக்காமல் அதிகபட்சமாக 10,000 கிமீ தூரம் வரை பாய்ந்து செல்லும் திறன் கொண்டது. ரஷ்யாவிலிருந்து 2,500 கிமீ தொலைவில் இருக்கும் லண்டன் மாநகரம் மற்றும் 7,580 கிமீ தொலைவில் இருக்கும் வாஷிங்டன் நகரங்களையும் குறி வைத்து நிலைநிறுத்த முடியுமாம்.

தற்போது ரஷ்யாவின் மியாஸ் என்ற பகுதியில் வைத்து சோதனைகள் செய்யப்பட்டு வரும் இந்த புதிய ஏவுகணையானது, 2018ம் ஆண்டில் பயன்பாட்டில் வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிரியா போர் தொடர்பாக அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையில் பனிப்போர் நடந்து வரும் நிலையில், இந்த அணு ஆயுத ஏவுகணை மூலமாக ரஷ்யா மறைமுக எச்சரிக்கை விடுப்பதாகவே கருதப்படுகிறது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #ராணுவம் #military
English summary
Important Details About Russia's New 'Satan 2' missile.
Please Wait while comments are loading...

Latest Photos