இஸ்ரோவின் புதிய ஸ்க்ராம்ஜெட் ராக்கெட் எஞ்சின் பற்றிய சிறப்புத் தகவல்கள்!

By Saravana Rajan

புதுப்புது சாதனைகளால் அனைவரின் கவனத்தை ஈர்த்து வரும் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ நேற்று ஒரு புதிய சாதனையை படைத்து உலகின் கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளது. ஆம், மறுபயன்பாட்டு விண்கலத்தில் பயன்படுத்துவதற்கான ஸ்க்ராம்ஜெட் என்ற நவீன எஞ்சினை நேற்று வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.

இந்த ஸ்க்ராம்ஜெட் எஞ்சின் இஸ்ரோவின் சாதனைகளில் புதிய மைல்கல் என்று கருதப்படுகிறது. ஏனெனில், தற்போது உள்ள ராக்கெட் ஏவும் தொழில்நுட்பத்தை அடுத்த பரிணாமத்திற்கு கொண்டு செல்வதற்கு பிள்ளையார் சுழியாகவே இதனை கருத முடியும்.

இஸ்ரோவின் புதிய ஸ்க்ராம்ஜெட் ராக்கெட் எஞ்சின்

ராக்கெட் என்றில்லை, வருங்காலத்தில் இந்தியாவின் பாதுகாப்புத் துறையிலும் இந்த ஸ்க்ராம்ஜெட் எஞ்சின் முக்கிய பங்கை வகிக்கும் வாய்ப்புகள் அதிகம். இந்தநிலையில், இந்த ஸ்க்ராம்ஜெட் எஞ்சின் பற்றிய சிறப்பம்சங்கள், தொழில்நுட்பங்கள் குறித்த சுவாரஸ்யங்களை தொடர்ந்து காணலாம்.

இஸ்ரோவின் புதிய ஸ்க்ராம்ஜெட் ராக்கெட் எஞ்சின்

தற்போது ஏவப்படும் ராக்கெட்டுகளில் எரிபொருளாக பயன்படும் திரவ ஹைட்ரஜனை எரிப்பதற்கு ஆக்சிஜன் தேவை. இதற்காக, ராக்கெட்டில் கூடவே ஆக்சிஜன் வாயு நிரம்பிய கொள்கலன்களையும் இணைத்து அனுப்ப வேண்டியிருக்கிறது. இதனால், ராக்கெட்டின் எடையும், ஏவும் செலவும் அதிகமாகிறது.

இஸ்ரோவின் புதிய ஸ்க்ராம்ஜெட் ராக்கெட் எஞ்சின்

ஆனால், ஸ்க்ராம்ஜெட் எஞ்சின் பொருத்தப்படும் ராக்கெட்டுகளில் ஆக்சிஜன் கலன்களை இணைக்க வேண்டிய அவசியமில்லை. பூமியிலிருந்து 50 கிமீ உயரம் வரையில், வளிமண்டல காற்றில் இருக்கும் ஆக்சிஜனை உறிஞ்சி, அதன்மூலமாக திரவ ஹைட்ரஜனை எரிக்கும் நுட்பத்தில் இந்த எஞ்சின் இயங்குகிறது.

இஸ்ரோவின் புதிய ஸ்க்ராம்ஜெட் ராக்கெட் எஞ்சின்

ராக்கெட்டின் முன்புறத்தில் இருக்கும் துளை வழியாக அதிக அழுத்தத்தில் காற்று உள்வாங்கப்படும். பின்னர், அந்த காற்றில் திரவ ஹைட்ரஜனை கலந்து காற்று சூடாக்கப்பட்டு பின்புறத்தில் இருக்கும் துளை வழியாக அதிக அழுத்தத்தில் வெளியேறும். இதனால், கிடைக்கும் அபரிதமான காற்றழுத்தத்தால், ராக்கெட் முன்னோக்கி உந்தப்படும். இதுதான் ஸ்க்ராம்ஜெட் எஞ்சின் எளிய தாத்பரியம்.

இஸ்ரோவின் புதிய ஸ்க்ராம்ஜெட் ராக்கெட் எஞ்சின்

இது கேட்பதற்கு எளிமையான தொழில்நுட்பமாக இருந்தாலும், இது மிகவும் துல்லியமான அமைப்புடையதாக வடிவமைக்கப்பட வேண்டும். இல்லையெனில், எளிதாக வெடிக்கவும், தீப்பற்றும் ஆபத்தும் அதிகம். இதுமட்டுமல்ல, ஸ்க்ராம்ஜெட் எஞ்சினை இயங்கச் செய்வதற்கு ராக்கெட் குறைந்தது மேக் 2 எனப்படும் ஒலியைவிட இரண்டு மடங்கு வேகத்தை எட்ட வேண்டும். இதற்கா,

இஸ்ரோவின் புதிய ஸ்க்ராம்ஜெட் ராக்கெட் எஞ்சின்

மற்றொரு எஞ்சினும் பயன்படுத்தப்படும். அதன்பிறகே ஸ்க்ராம்ஜெட் எஞ்சினை இயக்க வேண்டியிருக்கும். ஸ்க்ராம்ஜெட் எஞ்சின் இயங்க ஆரம்பித்தவுடன், மேக் 12 முதல் மேக் 24 என்ற வேகத்தில் ராக்கெட் சீறிச் செல்லும்.

இஸ்ரோவின் புதிய ஸ்க்ராம்ஜெட் ராக்கெட் எஞ்சின்

இந்த ஸ்க்ராம்ஜெட் எஞ்சின் மூலமாக பல அனுகூலங்களை பெற முடியும். அதாவது, திரவ ஆக்சிஜன் கொள்கலன்களை இணைப்பதற்கான அவசியம் இருக்காது. இதன்மூலமாக, ராக்கெட்டின் எடை 70 சதவீதம் வரை குறையும் என்பதுடன், அதற்கான தயாரிப்பு செலவும் வெகுவாக குறையும்.

இஸ்ரோவின் புதிய ஸ்க்ராம்ஜெட் ராக்கெட் எஞ்சின்

இந்த ராக்கெட் எஞ்சின் தொழில்நுட்பத்தை தனது மறுபயன்பாட்டு விண்கலத்தில் பயன்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதனால், ராக்கெட் ஏவும் செலவு 10 மடங்கு வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரோவின் புதிய ஸ்க்ராம்ஜெட் ராக்கெட் எஞ்சின்

இஸ்ரோ ராக்கெட்டுகளுக்கு மட்டுமின்றி, எதிர்காலத்தில் ஹைப்பர்சானிக் போர் விமானங்களிலும், அதிவேக பயணிகள் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளிலும் இந்த ஸ்க்ராம்ஜெட் எஞ்சின் தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியும். எனவே, இஸ்ரோ மிக முக்கிய மைல்கல்லை தொட்டுள்ளது.

இஸ்ரோவின் புதிய ஸ்க்ராம்ஜெட் ராக்கெட் எஞ்சின்

300 வினாடிகள் நீடித்த இந்த முதல்கட்ட சோதனை திருப்திகரமாக அமைந்திருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும், தற்போதுதான் ஆரம்ப கட்ட பரிசோதனைகள் துவங்கியிருக்கின்றன என்றும் அவர்கள் தெளிவுப்படுத்தினர். எனவே, அடுத்த தசாப்தத்தில் இஸ்ரோவின் இந்த ஸ்க்ராம்ஜெட் எஞ்சின் ராக்கெட் ஏவுவதில் புரட்சியை ஏற்படுத்தும் என கருதலாம்.

இஸ்ரோவின் புதிய ஸ்க்ராம்ஜெட் ராக்கெட் எஞ்சின்

இதுவரை இந்த ஸ்க்ராம்ஜெட் எஞ்சின் தொழில்நுட்பத்தை ரஷ்யா, சீனா உள்ளிட்ட சில நாடுகளே வெற்றிகரமாக பரிசோதித்துள்ளன. இந்த வகையில், ஸ்க்ராம்ஜெட் எஞ்சினை வெற்றிகரமாக பரிசோதித்திருக்கும் நான்காவது நாடு இந்தியா என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் பெருமிதம் தெரிவித்தனர்.

இஸ்ரோவின் புதிய ஸ்க்ராம்ஜெட் ராக்கெட் எஞ்சின்

இது மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல்கலாமின் கனவு திட்டங்களில் ஒன்றாகவும் இஸ்ரோ விஞ்ஞானி கே.சிவன் தெரிவித்தார். அதாவது, மிக குறைந்த செலவில் ராக்கெட்டுகளை ஏவ வேண்டும் என்பதே அவரது கனவு என்றும் அவர் குறிப்பிட்டார். கலாமின் கனவுக்கு உயிர் கொடுத்து ஓயாது உழைத்து வரும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எமது பாராட்டுகள்... !!

இந்திய விண்வெளி ஆய்வு மையம்[இஸ்ரோ] பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

இந்திய விண்வெளி ஆய்வு மையம்[இஸ்ரோ] பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

Most Read Articles
English summary
Important Things About ISRO's Scramjet Engine.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X