புதிய பிரம்மோஸ் ஏவுகணை... பாகிஸ்தானின் எந்த மூலையையும் தாக்கலாம்... !!

கடந்த ஜூன் மாதம் ஏவுகணை தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு அமைப்பில் இந்தியா இணைந்தது. இதையடுத்து, அதிக தூரம் சென்று இலக்கை தாக்கும் புதிய பிரம்மோஸ் ஏவுகணையை தயாரிக்கும் திட்டத்தை கையிலெடுத்துள்ளது.

By Saravana Rajan

அண்டை நாடுகளின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை சமாளிக்கும் விதத்தில் நவீன ஆயுதங்களை வாங்கி குவித்து வருகிறது இந்தியா. உலகிலேயே அதிகமாக ஆயுதங்களை வாங்கிக் குவிக்கும் நாடுகளில் ஒன்றாகவும் குறிப்பிடப்படுகிறது.

குறிப்பாக, ரஷ்யாவிடம் இருந்துதான் அதிக அளவில் ஆயுதங்களையும், அதற்கான தொழில்நுட்பங்களையும் இந்தியா வாங்கி வருகிறது. இந்த நிலையில், சமீபத்தில் கோவாவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் ரஷ்யாவுடன் பல்வேறு புதிய ஆயுத ஒப்பந்தங்களை இந்தியா செய்திருக்கிறது. அதில், முக்கியமான விஷயமாக பார்க்கப்படுவது புதிய பிரம்மோஸ் ஏவுகணையை தயாரிக்கும் ஒப்பந்தம்தான்.

 புதிய பிரம்மோஸ் ஏவுகணை... பாகிஸ்தானின் எந்த மூலையையும் தாக்கும்... !!

பாகிஸ்தானால் பெரும் தொல்லையை அனுபவித்து வரும் இந்தியாவுக்கு இந்த புதிய பிரம்மோஸ் ஏவுகணை தயாரிப்பு மிக முக்கிய பாதுகாப்பை வழங்கும். அதாவது, பாகிஸ்தானின் எந்தவொரு மூலையையும் இந்த புதிய பிரம்மோஸ் க்ரூஸ் ரக ஏவுகணை மூலமாக தாக்குதல் நடத்த முடியும்.

 புதிய பிரம்மோஸ் ஏவுகணை... பாகிஸ்தானின் எந்த மூலையையும் தாக்கும்... !!

ரஷ்யாவுடன் இணைந்து ஏற்கனவே தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணையானது, 290 கிமீ தொலைவுடைய இலக்குகளை மட்டுமே தாக்கும் திறன் கொண்டது. இதற்கு முக்கிய காரணம், ஏவுகணை தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு அமைப்பில்[எம்டிசிஆர்] உறுப்பினர் அல்லாத நாட்டுக்கு 300 கிமீ தொலைவுக்கும் அதிகமாக செல்லும் திறன் கொண்ட ஏவுகணைகளை தயாரிக்கும் தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்ள இயலாத நிலை ரஷ்யாவுக்கு இருந்தது.

 புதிய பிரம்மோஸ் ஏவுகணை... பாகிஸ்தானின் எந்த மூலையையும் தாக்கும்... !!

இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் எம்டிசிஆர் அமைப்பில் இந்தியாவும் உறுப்பினராக இணைந்துவிட்டது. இதன்மூலமாக, நீண்ட தூரம் செல்லும் ஏவுகணைகளை தயாரிக்கும் தொழில்நுட்பத்தை ரஷ்யாவிடம் இருந்து பெறும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

 புதிய பிரம்மோஸ் ஏவுகணை... பாகிஸ்தானின் எந்த மூலையையும் தாக்கும்... !!

சமீபத்தில் கோவாவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் நீண்ட தூரம் செல்லும் புதிய பிரம்மோஸ் ஏவுகணையை தயாரிக்க ரஷ்யாவும், இந்தியாவும் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கின்றன. இதன்மூலமாக, செகண்ட் ஸ்டிரைக் எனப்படும் திருப்பி தாக்கும் இந்தியாவின் வியூகத்திற்கு பெரும் வலு சேர்க்கும்.

 புதிய பிரம்மோஸ் ஏவுகணை... பாகிஸ்தானின் எந்த மூலையையும் தாக்கும்... !!

தற்போதைய பிரம்மோஸ் ஏவுகணை 290 கிமீ தூரம் மட்டுமே செல்லும் திறன் கொண்டது. இதனால், பாகிஸ்தானின் உட்பகுதிகளில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்க இயலாத நிலை இருக்கிறது. ஆனால், புதிய பிரம்மோஸ் ஏவுகணையானது 600 கிமீ தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கும் வல்லமை படைத்ததாக மேம்படுத்தப்படுகிறது.

 புதிய பிரம்மோஸ் ஏவுகணை... பாகிஸ்தானின் எந்த மூலையையும் தாக்கும்... !!

இதன்மூலமாக, இந்திய எல்லையிலிருந்து பாகிஸ்தான் நாட்டின் பெரும்பாலான பகுதிகளை தாக்கும் திறனை இந்தியா பெறும். இந்த புதிய பிரம்மோஸ் ஏவுகணை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்போது, அது ஆளில்லா போர் விமானம் போன்றே கருத முடியும். போர்க் கப்பல்களையும் பாகிஸ்தானுக்கு நெருக்கமாக கொண்டு சென்று, அதிலிருந்து இந்த ஏவுகணையை செலுத்தி எளிதாக தாக்குதல் நடத்தவும் முடியும்.

 புதிய பிரம்மோஸ் ஏவுகணை... பாகிஸ்தானின் எந்த மூலையையும் தாக்கும்... !!

இந்த ஏவுகணையை விமானம் போலவே இலக்கை நோக்கி வளைந்து நெளிந்து சென்று தாக்கும் விதத்தில் கட்டுப்படுத்தும் சாஃப்ட்வேர் மற்றும் ரேடார் சாதனங்களை பெற்றிருக்கும். எந்த கோணத்திலும் தடைகளை கடந்து இலக்கை நோக்கி செல்லும். இதனால், போர் விமானங்களை பயன்படுத்துவதை தவிர்த்து, இந்த ஏவுகணையை பயன்படுத்த முடியும்.

 புதிய பிரம்மோஸ் ஏவுகணை... பாகிஸ்தானின் எந்த மூலையையும் தாக்கும்... !!

தவிரவும், அண்மையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முகாம் அமைத்து சதிச் செயல்களுக்கு தயாராக இருந்த தீவிரவாதிகளின் முகாம்களை சர்ஜிக்கல் ஸ்டிரைக் வியூகம் மூலமாக இந்திய ராணுவம் அதிரடியாக தாக்கியது.

 புதிய பிரம்மோஸ் ஏவுகணை... பாகிஸ்தானின் எந்த மூலையையும் தாக்கும்... !!

ஆனால், புதிய பிரம்மோஸ் ஏவுகணை வரும்போது, இதுபோன்ற தீவிரவாதிகளின் முகாம்களை இந்த ஏவுகணையை வைத்தே தாக்க முடியும் என்று பாதுகாப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். தீவிரவாதிகளின் பதுங்கு குழிகள் மற்றும் அடர்ந்த வனங்கள் மற்றும் மலைப்பகுதிகளில் இருக்கும் தீவிரவாதிகளின் முகாம்களை எல்லை தாண்டாமலையே தாக்க முடியும்.

 புதிய பிரம்மோஸ் ஏவுகணை... பாகிஸ்தானின் எந்த மூலையையும் தாக்கும்... !!

எல்லை தாண்டி இலக்கை நோக்கி செல்லும் புதிய பிரம்மோஸ் ஏவுகணையை எதிரி நாட்டின் ஏவுகணை எதிர்ப்பு சாதனங்களால் கூட எளிதில் கண்டறிய முடியாது. எனவே, மிக மிக துல்லியமாக இலக்கை அழிக்கும் வல்லமை உண்டு.

 புதிய பிரம்மோஸ் ஏவுகணை... பாகிஸ்தானின் எந்த மூலையையும் தாக்கும்... !!

மேக் 3.5 என்ற வேகத்தில் புதிய பிரம்மோஸ் ஏவுகணை செல்லும். பிரம்மோஸ் ஏவுகணையை தயாரிப்பதற்கான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் உள்ளன. தூரத்தை அதிகரிப்பது மட்டுமே இப்போதைய பணி. அடுத்த 3 ஆண்டுகளுக்குள் புதிய பிரம்மோஸ் தயாராகிவிடும் என்று பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 புதிய பிரம்மோஸ் ஏவுகணை... பாகிஸ்தானின் எந்த மூலையையும் தாக்கும்... !!
  • கடற்படையில் ரகசியமாக சேர்க்கப்பட்ட புதிய ஐஎன்எஸ் அரிஹந்த் நீர்மூழ்கி போர்க்கப்பல்!
  • அமெரிக்காவின் அதிநவீன போர்க்கப்பல் ஸும்வால்ட் பற்றிய சிறப்புத் தகவல்கள்!
  • பிரம்மோஸ் ஏவுகணையை கண்டு சீனாவுக்கு உதறல் எடுத்ததற்கான காரணங்கள்!
Most Read Articles
மேலும்... #ராணுவம் #military
English summary
Important Things About New BrahMos missile. Read in Tamil.
Story first published: Thursday, October 20, 2016, 12:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X