இந்தியாவின் தேஜஸ் மார்க் 1ஏ போர் விமானத்தின் சிறப்பம்சங்கள்!

மேம்படுத்தப்பட்ட மாடலாக வர இருக்கும் புதிய தேஜஸ் போர் விமானத்தின் சிறப்புகளை இந்த செய்தியில் காணலாம்.

Written By:

இந்தியாவின் சொந்த தயாரிப்பான தேஜஸ் போர் விமானம், விமானப்படையில் சேர்க்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில், தேஜஸ் போர் விமானத்தில் கூடுதல் சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட உள்ளது.

தற்போது வழங்கப்பட்டிருக்கும் தேஜஸ் மார்க்-1 விமானங்களை கூடுதல் சிறப்பம்சங்களுடன் மார்க்-1ஏ என்ற மாடலில் மேம்படுத்தப்பட உள்ளது. தேஜஸ் மார்க்1 ஏ விமானத்தில் இடம்பெற இருக்கும் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

இந்திய விமானப்படைக்கு டெலிவிரி கொடுக்கப்பட்டு வரும் தேஜஸ் மார்க்-1 விமானத்திற்கும், அதன் மேம்பட்ட வடிவமாக உருவாக்கப்பட்டு வரும் புதிய தேஜஸ் மார்க்-2 மாடலுக்கும் இடைப்பட்ட வகையில் இந்த மார்க்-1ஏ விமானம் மேம்படுத்தப்படுகிறது.

தேஜஸ் மார்க்-1 விமானத்தின் ரேடார் போதுமான திறன் கொண்டதாக இல்லை என்ற புகார் வைக்கப்பட்டது. இதனை களையும் விதமாக தேஜஸ் மார்க்-1ஏ போர் விமானத்தில் நவீன ஏஇஎஸ்ஏ ரேடார் பொருத்தப்பபட உள்ளது. பழைய ரேடார் அமைப்பைவிட இந்த ரேடார் சாதனம் பொருத்துவதன் மூலமாக மிக சிறப்பான எச்சரிக்கை வசதியை தேஜஸ் பெறும்.

அத்துடன், பழைய ரேடார் அமைப்பிற்கான சாதனத்தைவிட புதிய சாதனத்திற்கு குறைந்த அளவு இடம் மட்டுமே விமானத்தின் மூக்கு பகுதியில் தேவைப்படும். இதனால், எதிரி நாட்டு ரேடார்களில் அவ்வளவு எளிதாக சிக்காது என்றும் கூறப்படுகிறது.

புதிய தேஜஸ் மார்க்-1ஏ போர் விமானத்தில் நவீன ஏவியோனிக்ஸ் சிஸ்டம் பொருத்தப்பட உள்ளது. இதனால், மேலை நாடுகளில் பயன்படுத்தப்படும் நவீன ரக போர் விமானங்களுக்கு இணையான நவீன கட்டுப்பாட்டு தொழில்நுட்ப முறைக்கு முன்னேறுகிறது தேஜஸ்.

புதிய தேஜஸ் மார்க்-1ஏ விமானத்தின் எடை குறைவாக இருப்பதால், விமானத்தின் செயல்திறன் வெகுவாக மேம்படும். மேலும், விமானத்தின் எடை விரவும் பரப்பும் மிகச் சரியான விகிதத்தில் இருக்கும் என்பதால் களத்தில் கில்லியாக சொல்லி அடிக்கும் திறனை பெறுகிறது.

தேஜஸ் மார்க்-1 மாடலைவிட புதிய மார்க்-1ஏ மாடல் மிக எளிமையான பராமரிப்பு முறைகளை கொண்டதாக இருக்கும். உட்புறத்தில் கருவிகள் அமைக்கப்படும் முறையில் மாற்றம் செய்யப்படுவதால், தினசரி பராமரிப்புக்கு மிக உகந்தமாக இருக்கும்.

புதிய தேஜஸ் மார்க்-1ஏ விமானத்தில் எதிரிகளின் ஏவுகணைகள் மற்றும் பீரங்கி தாக்குதல்களை துல்லியமாக கண்டறிவதற்கான நவீன சாதனங்கள் பொருத்தப்படுகின்றன. இதனால், இந்த விமானத்தின் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கும். அதேபோன்று, விரைவாகவும், துல்லியமாகவும் தாக்குதல் நடத்துவதற்கும் இவை துணையாக இருக்கும்.

வானில் பறக்கும்போதே எரிபொருள் நிரப்புவதற்கான வசதியும் இணைக்கப்படுகிறது. இதன்மூலமாக, தேஜஸ் போர் விமானத்தின் பறக்கும் தூரம் வெகுவாக அதிகரிக்கும். தரையிறக்கி எரிபொருள் நிரப்ப வேண்டிய அவசியம் இருக்காது என்பதால், போர் சமயங்களில் பெரிய அளவில் கைகொடுக்கும்.

மொத்தம் 86 தேஜஸ் மார்க்-1 போர் விமானங்கள் இவ்வாறு மார்க்-1ஏ மாடலாக மேம்படுத்தப்பட உள்ளது. இதனிடையே, 100 தேஜஸ் போர் விமானங்களை மார்க்-1ஏ மாடலில் பயன்பாட்டிற்கு வைக்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

தேஜஸ் மார்க்-1ஏ மாடல் மேம்படுத்தும் திட்டம் துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தேஜஸ் மார்க்-2 விமானத்தின் தயாரிப்பு மறுபுறத்தில் தீவிரமாக நடந்து வருவதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த திட்டத்தை நிறுத்தும் எண்ணம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தேஜஸ் போன்றே மற்றொரு ஒற்றை இருக்கை வசதி கொண்ட புதிய இலகு ரக போர் விமானத்தை மேக் இன இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்க முடிவு செய்துள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார். அதாவது, இரண்டு வகை இலகு ரக போர் விமானங்கள் இந்திய விமானப்படை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.

டொயோட்டா சிஎச்-ஆர் எஸ்யூவியின் படங்கள்!

டொயோட்டா சிஎச்-ஆர் எஸ்யூவி இந்தியா வருகிறது என்ற தகவலை கேட்டவுடன், அதனை முழுமையாக பார்த்துவிட வேண்டும் என்ற ஆவல் பிறக்கிறதல்லவா? அதனை தீர்ப்பதற்காக 35 படங்கள் அடங்கிய கேலரியை உங்கள் பார்வைக்கு வழங்குகிறோம்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #ராணுவம் #military
English summary
Important Things About Tejas Mark 1-A Fighter Jet.
Please Wait while comments are loading...

Latest Photos

LIKE US ON FACEBOOK