இந்திய கார் மார்க்கெட்டும், பாகிஸ்தான் கார் மார்க்கெட்டும்... ஒப்பீடு

Written By:

அணு ஆயுத பலத்தில் இந்தியாவுக்கு இணையாக உயர்ந்துவிட்டதாக கனவு கண்டு கொண்டிருக்கும் பாகிஸ்தானுக்கு, இந்தியாவுடன் மல்லுக்கட்டுவதையே முக்கிய பணியாக கருதி செயல்பட்டு வருகிறது. பிற துறைகளில் இந்தியா எட்டிவிட்ட உயரங்களை நினைத்துக்கூட பார்க்க முடியாத நிலையிலேயே அந்நாடு உள்ளது. அணு ஆயுதத்தை விட்டு சற்று அலசி பார்த்தால், அந்நாடு பல துறைகளிலும் பின்தங்கியிருக்கிறது. இதற்கு, அந்நாட்டின் வாகன மார்க்கெட்டை மிக முக்கிய அத்தாட்சியாக கூறலாம்.

இந்திய வாகன துறை உலக அளவில் மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில், பாகிஸ்தானின் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சி பல தசாப்தங்களை பின்னோக்கியதாக இருக்கிறது. இதனை அந்நாட்டு வாகன துறையினரும், வாகன உரிமையாளர்களும் கூட ஆதங்கத்துடன் கூறுகின்றனர்.

குறிப்பாக, பாகிஸ்தானின் ஆட்டோமொபைல் வளர்ச்சிக்கு காரணம், அங்கு ஸ்திரத்தன்மையற்ற பொருளாதார நிலை, எதேச்சதிகார அரசுகளும், ஊழல் அரசியல்வாதிகளுமே முக்கிய காரணமாக அந்நாட்டு மக்களே குற்றம் சாட்டுகின்றனர். அங்கு தற்போது ஜப்பானிய நிறுவனங்களான சுஸுகி, ஹோண்டா மற்றும் டொயோட்டா போன்றவை வாகனங்களை விற்பனை செய்துவருகின்றன.

ஆடி, பிஎம்டபிள்யூ, பென்ஸ், ஃபோர்டு, ரோல்ஸ்ராய்ஸ், ஃபெராரி, லம்போர்கினி, ஜெனரல் மோட்டார்ஸ்,ஃபோக்ஸ்வேகன், ஸ்கோடா என பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் சிறப்பான வர்த்தகத்தை செய்து வருகின்றன. மேலும், இந்தியாவில் ஆலைகளை நிறுவி பல வெளிநாடுகளுக்கு இங்கிருந்து கார்களை ஏற்றுமதி செய்து வருகின்றன.

கடும் சந்தைப் போட்டி காரணமாக, பல புதிய மாடல்களையும், நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட கார்களையும் இந்தியர்களுக்கு பெற வாய்ப்புகள் பெருகிவிட்டன. ஆனால், பாகிஸ்தான் கார் வாடிக்கையாளர்களின் நிலை ரொம்ப மோசம். அந்நாட்டின் வாகன துறையின் கொள்கைகளால், வாடிக்கையாளர்கள் தரமான கார்களை பெற முடியாத நிலை இருக்கிறது.

எனவே, டொயோட்டா போன்ற முன்னணி நிறுவனங்கள் கூட இரண்டாந்தர வாகன மாடல்களையே அங்கு விற்பனை செய்து வருகின்றன. உதாரணத்திற்கு, அங்கு விற்பனையில் உள்ள 1.3 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட டொயோட்டா கரொல்லா கார் பிற நாடுகளில் விற்பனை செய்யப்படும் கரொல்லா காருடன் ஒப்பிடும்போது, இரண்டாந்தர வாகனமாகவே இருக்கிறது.

பாகிஸ்தானில் விற்பனை செய்யப்படும் பல கார்களில் இன்னமும் ஏர்பேக், இம்மொபைலைசர், க்ரூஸ் கன்ட்ரோல், பவர் விண்டோஸ் போன்ற பல முக்கிய வசதிகள இன்னமும் இடம்பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

மேலும், அரசாங்கத்தின் வரி விதிப்பு கொள்கையால் அமெரிக்காவில் 28,000 டாலர் விலையில் விற்பனை செய்யப்படும் டொயோட்டா கேம்ரி கார் அங்கு 1.10 லட்சம் டாலர் விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. அதாவது, பன்மடங்கு விலை அதிகம்.

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்படும் மாடல்கள் பாகிஸ்தானுக்கு வருவதற்கு குறைந்தது 3 ஆண்டுகள் பிடிக்கிறதாம். அதற்குள் அடுத்த மாடலே பிற நாடுகளில் வெளியிடப்பட்டு விடுகின்றன. அதுமட்டுமில்லை, பாகிஸ்தானில் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்று சுஸுகி மெரான். அதாவது, நம்மூரில் விற்பனையான மாருதி 800தான் அந்த ஊரில் மெரான்.

ஆனால், 1986ம் ஆண்டு வந்த சுஸுகி மெரான் காருக்கும், தற்போது விற்பனையில் இருக்கும் மெரான் மாடலுக்கும் குறிப்பிட்டு கூறும் விதத்தில் எந்த வேறுபாடுகளும் இல்லை. படத்தை பார்த்தாலே தெரியும். கொஞ்சம் கையை கடிக்காது என்பதாலேயே இந்த மாடலை தேர்வு செய்யும் நிலைக்கு பாகிஸ்தானியர் தள்ளப்படுகின்றனர்.

வசதி படைத்தவர்கள் ஜப்பானிலிருந்து நேரடியாக கார்களை இறக்குமதி செய்து கொள்கின்றனர். இதனால், சற்று நவீன வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை கொண்ட கார்களை அவர்கள் பெற முடிகிறது. பாகிஸ்தானில் அசெம்பிள் செய்யப்படும் கார்களுடன் ஒப்பிடும்போது இறக்குமதி செய்யப்படும் கார்கள் 100 மடங்கு சிறந்தவை என்று அந்நாட்டு வாடிக்கையாளர்களே கூறுகின்றனர்.

இந்தியாவில் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 23.56 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யப்படும் நிலையில், பாகிஸ்தானில் வெறும் 1.50 லட்சம் கார்களே உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. அதேபோன்றுதான், இருசக்கர வாகன மார்க்கெட்டும். கடந்த ஆண்டில் 1.61 கோடி இருசக்கர வாகனங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டிருக்கின்றன.

ஆனால், பாகிஸ்தானில் வெறும் 19.12 லட்சம் இருசக்கர வாகனங்களே உற்பத்தி செய்யப்பட்டு இருக்கின்றன.. அதாவது, பாகிஸ்தானைவிட இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை பன்மடங்கு உற்பத்தி திறனில் விஞ்சி நிற்கிறது. மக்கள் தொகையின் அடிப்படையில் இந்தியாவில் வாகன உற்பத்தி அதிகம் என்று மல்லுக்கட்டினாலும், அந்நாட்டின் தனிநபர் வருவாய் மிகவும் குறைவாக இருப்பதே மிக முக்கிய காரணமாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, வளர்ச்சி விகிதாச்சாரத்தின் அடிப்படையில் மிகவும் பின்தங்கியிருக்கிறது.

ஆனால், பாகிஸ்தானைவிட இந்தியர்களின் தனி நபர் வருவாய், பொருளாதார ஸ்திரத்தன்மை போன்றவையும் வாகன மார்க்கெட் சுபிட்சமாக இருப்பதற்கு காரணமாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. சுதந்திரத்திற்கு பின் இரு நாடுகளின் வளர்ச்சியையும் பொதுவாக ஒப்பிட்டால் பாகிஸ்தான் பல துறைகளிலும் இந்தியாவுடன் போட்டி போட முடியாத நிலையிலேயே பின்தங்கி நிற்கிறது.

பாகிஸ்தானின் வளர்ச்சிக்கு இந்தியாவோ அல்லது வேறு பிற நாடுகளோ எதிரிகள் இல்லை. கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான் என்பதுபோலத்தான் தீவிரவாதம் எனும் கத்தியை கையில் வைத்துக் கொண்டு தனது நாட்டுக்கு ஆப்பு வைத்துக் கொண்டு வருகிறது பாகிஸ்தான்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
India Auto Industry Vs Pakistan Auto Industry: Read the comparison details in Tamil.
Please Wait while comments are loading...

Latest Photos