இந்திய பைக் வீக் திருவிழாவிற்கு டிரைவ்ஸ்பார்க் குழுவினர் கோவா பயணம்!

வரும் 20 மற்றும் 21ந் தேதிகளில் கோவாவில் நடைபெற இருக்கும் 3-வது இந்திய பைக் வீக் திருவிழாவிற்கு, டிரைவ்ஸ்பார்க் குழுவினர் இன்று பயணம் மேற்கொண்டிருக்கின்றனர்.

நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பைக் பிரியர்கள் இந்த விழாவில் தங்களது உயிரினும் மேலாக நேசிக்கும் உயர்வகை பைக் மாடல்களுடன் கலந்து கொள்ள இருக்கின்றனர். டிரைவ்ஸ்பார்க் குழுவினரின் பயணத்தின்போது எடுக்கப்பட்ட சில படங்கள் மற்றும் வழித்தட தகவல்களை இங்கே பகிர்ந்துகொள்கிறோம்.


இந்திய பைக் வீக் திருவிழா

இந்திய பைக் வீக் திருவிழா

மூன்றாவது ஆண்டாக கோவாவில் இந்திய பைக் திருவிழாவை செவன்டி ஈவண்ட் மீடியா குரூப் அமைப்பும், டிராவல் அண்ட் லைஃப் ஸ்டைல், பாக்ஸ் லைஃப் சேனல்களும் இணைந்து நடத்துகின்றன.

நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள்

இந்த விழாவின்போது பைக் ராலி, பைக் கண்காட்சி, பைக் ஸ்டன்ட் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. ஹார்லி டேவிட்சன், ட்ரையம்ஃப் உள்ளிட்ட பல முன்னணி மோட்டார்சைக்கிள் நிறுவனங்கள் இந்த விழாவிற்கு ஸ்பான்சர் செய்கின்றன.

பொலிரோவில் பயணம்

பொலிரோவில் பயணம்

கடந்த ஆண்டு இந்திய பைக் வீக் திருவிழாவிற்கு பைக்குகளில் 18 மணி நேரம் பயணம் மேற்கொண்ட டிரைவ்ஸ்பார்க் குழுவினர் இந்த முறை பொலிரோ எஸ்யூவியில் பயணம் மேற்கொண்டிருக்கின்றனர்.

 பெங்களூர் - கோவா

பெங்களூர் - கோவா

இன்று அதிகாலை 3.20 மணிக்கு புறப்பட்ட டிரைவ்ஸ்பார்க் குழுவினர் பெங்களூர்- ஹூப்ளி நெடுஞ்சாலையில் பயணித்து, பங்காபூரில் இருந்து யெல்லாபூருக்கு வனச்சாலைகள் வழியாக பயணம் மேற்கொண்டிருக்கின்றனர். வழக்கமான சாலைகளை தவிர்த்து, புதிய சாலைகளில் எமது குழுவினர் பயணித்து கொண்டிருக்கின்றனர்.

சாகச பயணம்

சாகச பயணம்

யெல்லாபூரை அடைவதற்கு முன்பாக அல்நவாகர் என்ற இடம் வழியாக சென்றபோது கடும் சவால்களை கடந்து சென்றதாக எமது குழுவினர் தெரிவித்தனர்.

இலக்கு

இலக்கு

அல்நவாரிலிருந்து கோவா எல்லை நகரான மோலம் நகரத்தை இன்னும் சிறிது நேரத்தில் தொட்டுவிடுவோம் என்று எமது குழுவினர் தெரிவித்துள்ளனர். இன்று மாலையிலிருந்து இந்திய பைக் வீக் திருவிழா நிகழ்வுகள் பற்றிய செய்தி சேகரிப்பில் ஈடுபடுவர்.

முழு கவரேஜ்

முழு கவரேஜ்

இந்த பைக் திருவிழாவின் முழுமையான கவரேஜை டிரைவ்ஸ்பார்க் தளத்தில் காணலாம். இந்த விழா நிகழ்வுகளின் படங்களை நிகான் D610 உயர் துல்லிய கேமரா மூலம் வாசகர்களுக்கு வழங்க இருக்கிறோம்.

விபத்தில் சிக்கிய மினி கார்

விபத்தில் சிக்கிய மினி கார்

வழியில் இருந்த போலீஸ் நிலையத்தில், மினி கார் ஒன்று விபத்தில் சிக்கி முன் பக்கம் உருக்குலைந்து நின்ற காட்சி.

டிரைவ்ஸ்பார்க் டீம்

டிரைவ்ஸ்பார்க் டீம்

டிரைவ்ஸ்பார்க் ஆசிரியர் ஜோபோ குருவில்லா, ஆங்கில துணை ஆசிரியர் ராஜ்கமல் ஆகியோர் பெங்களூரிலிருந்து கோவோ சென்று கொண்டிருக்கின்றனர். எமது மும்பை நிருபர் அஜிங்கியாவும் இந்த பைக் திருவிழா நிகழ்வுகளை தருவதற்கான கோவா செல்ல இருக்கிறார்.

Most Read Articles
English summary
DriveSpark is en route to cover India Bike Week 2015 in an easily recognisable Mahindra Bolero. The team begun from Bangalore at 3:20 am this morning, and are currently counting down the last hundred kilometres or so before destination Goa.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X