உலகின் மிக உயரமான ரயில் பாலம்: காஷ்மீரில் கட்டப்படுகிறது!

உலகின் மிக உயரமான ரயில் பாலம் காஷ்மீரில் உள்ள சீனாப் ஆற்றின் குறுக்கே கட்டப்படுகிறது. இது ஈஃபிள் டவரைவிட 35 மீட்டர் உயரமானதாக இருக்கும். இயற்கை அமைப்பின் பல சவால்களை கடந்து காஷ்மீரில் ரயில் வழித்தடங்கள் விஸ்தரிக்கப்பட்டு வருகிறது. பொறியியலுக்கு சவாலான மலைப் பகுதிகளை குடைந்து அங்கு ரயில் வழித்தடங்கள் விஸ்தரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், உலகின் மிக உயரமான ரயில் பாலம் காஷ்மீர் மாநிலத்தின் கவ்ரி என்ற இடத்தில் அமைக்கப்படுகிறது. சீனாப் ஆற்றின் குறுக்கே அமைக்கப்படும் இந்த பாலம் உலகின் பொறியியல் அதிசயமாக மாற இருக்கிறது. தற்போது இந்த பாலம் அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. வரும் 2016ம் ஆண்டில் பணிகள் நிறைவடையும் என ரயில்வே துறையினர் தெரிவிக்கின்றனர்.


 உயரம்

உயரம்

இந்த பாலம் 359 மீட்டர்(1,177 அடி) உயரம் கொண்டதாக இருக்கும். 1,315 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலத்தின் அமைப்பு ஆர்ச் போன்று அமைக்கப்படுகிறது.

 சவால்கள்

சவால்கள்

கடந்த 2002ம் ஆண்டே இந்த பாலத்தை கட்டும் பணிகள் துவங்கப்பட்டன. ஆனால், பாதுகாப்புப் பிரச்னைகள் மற்றும் அந்த பகுதியின் 90 கிமீ வேகத்தில் வீசும் காற்றின் வேகம், நிலநடுக்கப் பிரச்னைகள் உள்ளிட்ட காரணங்களால் 2008ம் ஆண்டில் பணிகள் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில், மீண்டும் இந்த பாலத்தை அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

 திட்ட மதிப்பீடு

திட்ட மதிப்பீடு

இந்த ரயில் பாலத் திட்டத்தை கொங்கன் ரயில்வே ஏற்றுக் கொண்டுள்ளது. ரூ.500 கோடி மதிப்பீட்டில் இந்த பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.

 முக்கிய வழித்தடம்

முக்கிய வழித்தடம்

பாரமுல்லா- ஜம்முவை இணைக்கும் மிக முக்கிய வழித்தடமாக இது அமையும். சாலை மார்க்கமாக செல்லும் போது ஆகும் பயண நேரத்தை இந்த ரயில் வழித்தடம் பாதியாக குறைக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் ரயில் சேவை துவங்கும்போது பாரமுல்லாவிலிருந்து ஜம்முவுக்கு ஆறரை மணி நேரத்தில் சென்றுவிடலாம்.

 மூலப்பொருட்கள்

மூலப்பொருட்கள்

1,315 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலத்திற்கு 25,000 டன் இரும்பு கம்பிகள் பயன்படுத்தப்பட உள்ளது. குறிப்பிட்ட அளவு கட்டுமானப் பொருட்கள் ஹெலிகாப்டர் மூலம் தருவிக்கப்படுகிறது. ஆற்றில் நீரோட்டத்தை தடுக்காமல் இந்த பாலத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 தற்போதைய உயரமான பாலம்

தற்போதைய உயரமான பாலம்

தற்போதைய உயரமான பாலமாக சீனாவின் குயிஷோ மாகாணத்தில் ஓடும் பெய்பான்ஜியாங் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது. இது 275 மீட்டர் உயரம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Engineers are toiling in the Himalayas to build the world's highest railway bridge which is expected to be 35 metres taller than the Eiffel Tower when completed by 2016.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X