இந்தியாவில் துரு போர்வை போர்த்தபட்ட முதல் போர்ஷே 911 படங்கள் வெளியாகியது

By Ravichandran

இந்தியாவில் முதல் துரு போர்வை போர்த்தபட்ட போர்ஷே 911 கரீரா எஸ் கேப்ரியோலெட் காரின் படங்கள் சமூக வலைதளங்களில் வெளியிடபட்டது.

துரு போர்வை போர்த்தபட்ட போர்ஷே 911 கரீரா எஸ் கேப்ரியோலெட் கார் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

முதல் போர்ஷே 911 கரீரா எஸ் கேப்ரியோலெட்...

முதல் போர்ஷே 911 கரீரா எஸ் கேப்ரியோலெட்...

கேரளாவின் பதிவு எண் கொண்ட இந்த போர்ஷே 911 கரீரா எஸ் கேப்ரியோலெட் தான், இந்தியாவில் துரு போர்வை (Rust Wrap) போர்த்தபட்ட முதல் போர்ஷே காராக விளங்குகிறது.

இதில், கூடுதல் செய்தி என்ன என்றால், இந்தியாவில் எந்த ஒரு கார் மாடல் மீதும் துரு போர்வை போர்த்தபட்டது, இது தான் முதல் முறை என கூறப்படுகிறது.

மேற்கத்திய கலாச்சாரம்;

மேற்கத்திய கலாச்சாரம்;

கார்களுக்கு துரு போர்வை போர்த்தபட்டு பெயிண்ட் வேலைப்பாடுகள் செய்யபடுவது, மேற்கத்திய நாடுகளில் பிரபலமான மற்றும் சகஜமான விஷயம் ஆகும்.

இது நிஜமான துருவினால் அமைந்த போர்வை அல்ல. இது அனைத்தும் போலியான துரு கறை மற்றும் கீறல்கள் ஆகும். இது பார்ப்போரை குழப்பும் வகையில் இருக்கும்.

யாருமே, இது அருகில் சென்று உற்று நோக்கினால் தான், இது துரு போர்வையே என அறிந்து கொள்ள முடியும்.

டிசைன் பணிகள் செய்யபட்ட இடம்..

டிசைன் பணிகள் செய்யபட்ட இடம்..

இந்தியாவிலும் கார்கள் மீது துரு போர்வை போர்த்தபட்டு பெயிண்ட் வேலைப்பாடுகள் செய்யபடுவது வேகமாக பரவி வருகிறது.

இந்த துரு போர்வை பணிகள், பெங்களூருவில் உள்ள மோட்டார்மைண்ட் டிசைன்ஸ் நிறுவனத்தால் மேற்கொள்ளபட்டது.

மார்டினி ரேசிங் லிவரி;

மார்டினி ரேசிங் லிவரி;

போர்ஷே 911 கரீரா எஸ் கேப்ரியோலெட் காருக்கு பிரத்யேகமாக கஸ்டமையஸ் செய்யபட்ட இந்த துரு போர்வை பணிகள், தனித்து காணப்படும் டார்க் புளூ, லைட் புளூ மற்றும் ரெட் ஸ்டிரைப்கள் ஆகியவற்றால் ஆன புகழ்மிக்க மார்டினி ரேசிங் லிவரி கொண்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்;

சிறப்பு அம்சங்கள்;

இந்த பிரத்யேக துரு போர்வை மட்டுமல்லாமல், இந்த போர்ஷே 911 கரீரா எஸ் கேப்ரியோலெட் கார், ஐபிஇ எக்ஹாஸ்ட் சிஸ்டம் மற்றும் பிபிஎஸ் ரிம்கள் கொண்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

இந்த போர்ஷே 911 (997.1) கரீரா எஸ் கேப்ரியோலெட் கார், 3.8 லிட்டர், ஸ்ட்ரெய்ட்-சிக்ஸ் இஞ்ஜின் கொண்டுள்ளது.

செயல் திறன்;

செயல் திறன்;

இந்த போர்ஷே 911 கரீரா எஸ் கேப்ரியோலெட் கார், நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை, 4.7 நொடிகளில் எட்டிவிடும்.

பிற கார்கள்;

பிற கார்கள்;

இந்த குறிப்பிட்ட போர்ஷே 911 கரீரா எஸ் கேப்ரியோலெட் காரின் சொந்தகாரர், தனது கேரேஜில் ஃபெராரி 458 இடாலியா, ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி 55 ஏஎம்ஜி உள்ளிட்ட பல்வேறு கார்களையும் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

போர்ஷேவின் விளம்பர தூதராக மரியா ஷரபோவா நியமனம்

போர்ஷே காரை நடுவில் வைத்து மாளிகை கட்டிய ஜப்பானியர்!

போர்ஷே தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Pictures of India's first Rust Wrapped Car - Porsche 911 Carrera S Cabriolet from Kerala appeared on social network. This is first known instance of such a wrap work done on a vehicle in India. This design was developed and wrapped in Bengaluru by Motormind Designs. This custom made wrap job features the iconic Martini Racing livery. To know more, check here...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X