இந்தியாவின் சொந்த பயணிகள் விமான கனவுக்கு அடிகோலிய ரஷ்ய விமானம்!

By Saravana Rajan

உலக அளவில் அமெரிக்காவின் போயிங் மற்றும் பிரான்ஸ் நாட்டின் ஏர்பஸ் நிறுவனங்கள்தான் வர்த்தக ரீதியிலான பயணிகள் விமானங்கள் தயாரிப்பில் புகழ்பெற்று விளங்குகின்றன. இந்த நிலையில், ரஷ்யாவும் தனது சொந்த பயணிகள் விமான மாடல்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது.

அரசு- தனியார் கூட்டணியில் உருவாகியிருக்கும் விமான தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் இந்த விமானங்கள் தயாரிக்கப்பட உள்ளன. ரஷ்யாவின் புதிய பயணிகள் விமானங்கள் போயிங் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்களுக்கு கடும் போட்டியை கொடுக்கும். இதெல்லாம் தெரிந்த சேதிதான். ஆனால், ரஷ்யா அறிமுகம் செய்திருக்கும் விமானங்களின் அடிப்படையில், இந்தியாவும் தனது சொந்த பயணிகள் விமானங்களை களமிறக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

முதல் விமானம்

முதல் விமானம்

1950ல் எச்ஏஎல் நிறுவனம் முதல்முறையாக இரண்டு இருக்கை வசதி கொண்ட எச்யூஎல்-26 புஷ்பக் என்ற விமானத்தையே தயாரித்தது. மொத்தம் 160 விமானங்கள் தயாரிக்கப்பட்டன. ஆனால், இது பயிற்சிக்காக பயன்படுத்தப்பட்டது. அதன்பிறகு, ராணுவ விமான தயாரிப்பில் எச்ஏஎல் நிறுவனம் முழு கவனம் செலுத்த துவங்கியதால், வணிக ரீதியிலான பயணிகள் விமானத் தயாரிப்புக்கு முழுக்கு போட்டது.

Photo Credit: Wikipedia

முதல் விமானம்

முதல் விமானம்

என்ஏஎல் நிறுவனத்தின் சரஸ் விமானம்தான் இந்தியாவின் முதல் பன்னோக்கு பயணிகள் விமான மாடலாக தயாரானது. ஆனால், அதிக எடை, எரிபொருளை அதிகம் உறிஞ்சும் பிரச்னை போன்ற காரணங்களால் இந்த விமானத்தின் மீது விமர்சனங்கள் எழுந்தது. ரஷ்யாவின் உதவியுடன் தயாரான இந்த விமானம் 2004ல் முதல்முறையாக பறக்கவிடப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

Photo Credit: Wikipedia

 விபத்து

விபத்து

இந்த நிலையில், இரண்டாவதாக தயாரிக்கப்பட்ட சரஸ் விமானத்தின் புரோட்டோடைப் மாடல் 2009ம் ஆண்டு நடுவானில் தீப்பிடித்து விபத்தில் சிக்கியது. இதில், அந்த விமானத்தை இயக்கிய, இந்திய விமானப்படை விமானிகள் பிரவீண் கோட்டேகொப்பா, தீபேஷ் ஷா மற்றும் டெஸ்ட் எஞ்சினியர் இளையராஜா ஆகிய மூவரும் உயிரிழந்தனர்.

ரத்து

ரத்து

சரஸ் விமானத்தின் தொழில்நுட்பங்கள் மற்றும் இதர அம்சங்கள் திருப்தி அளிக்காததால், அதற்கான நிதி ஒதுக்கீடு நிறுத்தப்பட்டதையடுத்து, இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்த விமானத்தை உருவாக்கிய எஞ்சினியர்கள், இதர விமான தயாரிப்பு திட்டங்களில் பணியமர்த்தப்பட்டனர். முதலில் விமானப்படையில் பயன்படுத்துவதற்காக இந்த விமானம் தயாரிக்கப்பட்டது.

Photo Credit: Wikipedia

வாய்ப்பு

வாய்ப்பு

ராக்கெட் சயின்சில் உலகை வியக்க வைத்து வரும் நம் நாடு, பயணிகள் விமான தயாரிப்பில் பின்தங்கி இருந்து வருகிறது. இந்த நிலையில், சொந்தமாக பயணிகள் விமானங்களை தயாரிக்கும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.

ரஷ்யாவுடன் பேச்சு

ரஷ்யாவுடன் பேச்சு

கடந்த 2013ம் ஆண்டு சொந்த பயணிகள் விமானத்தை தயாரிக்கும் திட்டத்துடன் ரஷ்யாவுடன் மத்திய அரசு பேச்சு நடத்தியது. இதன்படி, சுகோய் சூப்பர்ஜெட் 100 மற்றும் இர்குட் எம்எஸ்-21 பயணிகள் விமானங்களை இந்தியாவில் தயாரிப்பதற்கான திட்டம் குறித்து ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பேச்சு நடத்தப்பட்டது.

 விமான மாடல்கள்

விமான மாடல்கள்

சுகோய் சூப்பர்ஜெட் 100 மாடல் நடுத்தர வகையை சேர்ந்தது. இந்த விமானத்தில் 75 முதல் 95 பேர் பயணிக்கும் வசதி கொண்டது. இதேபோன்று, சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இர்குட் எம்சி21 விமானத்தையும் தயாரிக்க திட்டமிட்டது. இந்த விமானத்தில் 150- 212 பேர் பயணிக்கும் வசதி கொண்டது.

பயன்

பயன்

முந்தைய ஸ்லைடில் கண்ட 2 விமான மாடல்கள் உட்பட மொத்தம் 5 விமானங்களை இந்தியாவில் தயாரிக்கவும் திட்டமிடப்பட்டது. இரு நாடுகளும் இந்த விமான தயாரிப்பில் இணைந்து ஈடுபட்டால், அது தயாரிப்பு செலவீனத்தை வெகுவாக குறைக்க உதவும் என்றும் கருதப்பட்டது.

புத்துயிர்...

புத்துயிர்...

ஆனால், அரசியல் மாற்றங்களால் பரபரப்பு குறைந்த இந்த பயணிகள் விமான தயாரிப்புத் திட்டம் தற்போது மீண்டும் புத்துயிர் பெற்றிருக்கிறது. ஆம், கடந்த மாதம் ரஷ்யாவின் யுனைடேட் ஏர்கிராஃப்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் புதிய விமான மாடல்களை வர்த்தக ரீதியில் அறிமுகம் செய்தது. இதனையடுத்து, இந்த விமானங்களை இந்தியாவிலும் தயாரிக்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

மும்முரம்

மும்முரம்

இந்தியாவின் டாடா மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள் சிறிய ரக விமானங்களை தயாரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்றன. மேலும், எச்ஏஎல் நிறுவனமும் ரஷ்யாவுடன் இணைந்து நடுத்தர வகை விமானங்களை தயாரிக்கும் சூழல் உருவாகியிருக்கிறது.

வர்த்தக வாய்ப்பு

வர்த்தக வாய்ப்பு

தற்போது ராணுவ விமானங்கள், ஹெலிகாப்டர் தயாரிப்பு மூலமாக நல்ல வருவாயை ஈட்டி வரும் எச்ஏஎல் நிறுவனம், வணிக ரீதியிலான விமானத் தயாரிப்புத் துறையிலும் ஈடுபடும் சாத்தியக்கூறுகள் உள்ளன. அவ்வாறு, தயாரிப்பு துவங்கும்பட்சத்தில் வேலைவாய்ப்பும், வர்த்தகமும் வெகுவாக அதிகரிக்கும்.

கொள்கை முடிவுகள்

கொள்கை முடிவுகள்

இந்தியாவில் பயணிகள் விமானங்களை தயாரிப்பதற்கு தேவையான கொள்கைகளை வகுப்பதிலும், நடைமுறைப்படுத்துவதிலும் சிக்கல்கள் உள்ளன. இதற்காக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஒத்துழைப்புடன் இதற்கான தயாரிப்பு கொள்கைகளை வகுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்திய விமான போக்குவரத்து வரலாற்றின் சுவராஸ்ய பக்கங்கள்

இந்திய விமான போக்குவரத்து வரலாற்றின் சுவராஸ்ய பக்கங்கள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
India Gets A Chance To Build Its Indigenous Passenger Aircraft.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X