டெல்லியை தாக்கினால் பாகிஸ்தான் பெரும் அழிவை சந்திக்க நேரிடும்... !!

By Saravana Rajan

டெல்லியை 5 நிமிடங்களில் தாக்கும் திறன் பாகிஸ்தானிடம் உள்ளது என்று அந்நாட்டு அணு விஞ்ஞானி அப்துல் காதர் கான் கொக்கரித்துள்ளார். ஆனால், அது சாத்தியமா, அவ்வாறு செய்தால் என்னவாகும் என்பது பாகிஸ்தானுக்கு தெரியாத உண்மை அல்ல. ஒருவேளை இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தினால், அது தன் தலையிலேயே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வதற்கு சமமான விஷயமாகவே பாவிக்கலாம்.

இதுபோன்ற சூழ்நிலைகளை சமாளிப்பதற்கு செகண்ட் ஸ்ட்ரைக் என்ற திட்டத்தை இந்தியா வைத்துள்ளது. அதன்படி, இந்தியா மீது பாகிஸ்தான் அணு ஆயுத தாக்குதல் நடத்தினால், உலக வரைபடத்திலிருந்தே பாகிஸ்தானை காணாமல் அடித்துவிடும் வல்லமை இந்தியாவிற்கு உள்ளது. அப்படி ஒருகால் தாக்குதல் நடத்தினால், அதற்கு பெரும் விலையை பாகிஸ்தான் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை விளக்கும் செய்தியாக இது அமைகிறது.

இந்தியா பயன்படுத்தாது...

இந்தியா பயன்படுத்தாது...

முதலில் அணு ஆயுதத்தை பயன்படுத்துவதில்லை என்ற கொள்கையை இந்தியா பின்பற்றி வருகிறது. அதன்படி, பாகிஸ்தானிலிருந்து அணு ஆயுத தாக்குதல் வந்தால், அதனை சமாளிக்கும் திட்டமும் இந்தியாவிடம் உள்ளது.

சான்ஸே இல்ல...

சான்ஸே இல்ல...

நாட்டின் தலைநகரான டெல்லி மீது முன் அறிவிப்பு இல்லாமல் பாகிஸ்தான் அணு ஆயுத தாக்குதல் நடத்தும் பட்சத்தில், எல்லையை நோக்கி வைக்கப்பட்டிருக்கும் ரேடார்கள் மூலமாக, அந்த ஏவுகணையை இடைமறித்து வானிலேயே பஸ்பமாக்கிவிடும் இடைமறித்து தாக்கும் ஏவுகணைகள் தக்க பதிலடி கொடுக்கும்.

அதனையும் மீறினால்...

அதனையும் மீறினால்...

ஒருகால் அதனையும் மீறி டெல்லி மீது தாக்குதல் நடத்தினால், ராணுவம் உடனடியாக செகண்ட் ஸ்ட்ரைக் திட்டத்தை கையிலெடுக்கும். இதன்மூலமாக, பாகிஸ்தானின் கராச்சி துறைமுகம் நோக்கி இந்தியாவின் விமானம் தாங்கி கப்பல் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் விரைந்து சென்று பாகிஸ்தான் நகரங்கள் மீது சரமாரியான தாக்குதல்களை தொடுக்கும்.

பலவீனம்...

பலவீனம்...

பாகிஸ்தானிடம் விமானம் தாங்கி போர்க்கப்பல் மற்றும் ஏவுகணைகளை ஏவும் திறன் கொண்ட நீர்மூழ்கி கப்பல்கள் இல்லை. இதனால், இந்தியாவை சுற்றி வளைக்கும் வாய்ப்பே கிடையாது. ஆனால், பாகிஸ்தானுக்கு அருகில் சென்று தாக்குதல் நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு அதிகம்.

ஒரே வாய்ப்பு

ஒரே வாய்ப்பு

பாகிஸ்தானிடம் இருக்கும் ஒரே வாய்ப்பு, நீண்ட தூர ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்துவது மட்டுமே. ஆனால், அந்த ஏவுகணைகள் நீண்ட தூரம் பாய்ந்து சென்றாலும், மிக துல்லியமாக இலக்கை தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை அல்ல. அதற்குள் நமது இடைமறிப்பு ஏவுகணைகள் வானிலேயே அவற்றை பொசுக்கிவிடும்.

ஏவுகணைகள்

ஏவுகணைகள்

ஐஎன்எஸ் அரிஹந்த் போர்க்கப்பலிருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட கே-4 என்ற அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணை ஒன்றே பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க போதும் என்கின்றனர் பாதுகாப்புத் துறை வல்லுனர்கள். இது மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவாக, அவரது பெயரின் ஆங்கில முதல் எழுத்தின்படி, கே என்று பெயரிடப்பட்டது.

கே4 ஏவுகணை

கே4 ஏவுகணை

17 டன் எடையுடைய இந்த ஏவுகணை 3,500 கிமீ தூரம் பயணிக்கும். 2,000 கிலோ எடையுடைய வெடிகுண்டுகள் மற்றும் அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும். இந்த ஏவுகணை சோதனை குறித்து பாகிஸ்தான் ஏற்கனவே அச்சம் தெரிவித்துள்ளதையும், பாகிஸ்தான் அணு விஞ்ஞானி வசதியாக மறந்துவிட்டு பேசியுள்ளார்.

 வான்படையும் ரவுண்டு கட்டும்...

வான்படையும் ரவுண்டு கட்டும்...

பாகிஸ்தானின் ராணு நிலைகள் மற்றும் ராவல்பிண்டி அருகேயுள்ள கதுலா உள்ளிட்ட ஏவுகணை தளங்கள் மீது இந்தியா ஏவுகணைகளையும், வான் படை கொண்டும் கடுமையான தாக்குதல்களை தொடுக்கும். இதனால், ஏவுகணைகளை ஏவும் வல்லமையை இழக்கும் வாய்ப்பும் பாகிஸ்தானுக்கு ஏற்படும்.

வியூகம்

வியூகம்

தெற்கிலிருந்து போர்க்கப்பல்கள் மூலமாகவும், வடக்கிலிருந்து வான்படை மூலமாகவும் பாகிஸ்தானை எளிதாக தாக்கும் திட்டங்களும், வியூகங்களும் இந்தியாவிடம் உள்ளன. எனினும், பாகிஸ்தானுக்கு சீனா உதவினால், அது தெற்காசியாவில் மிகுந்த பதட்டத்தை ஏற்படுத்தும் விஷயமாக அமையும்.

 மக்கள் பெருக்கம்

மக்கள் பெருக்கம்

மக்கள் நெருக்கம் அதிகம் கொண்ட இந்திய நகரங்கள் பாகிஸ்தான் எல்லையிலிருந்து 100 கிமீ தூரத்திற்கு அப்பால் உள்ளன. ஏவுகணை தாக்குதல்களை முறியடித்து, தற்காத்து கொள்ளும் தூரத்தில்தான் அமைந்துள்ளன. பாகிஸ்தானில் அப்படியில்லை. இந்திய எல்லைக்கு மிக அருகாமையில்தான் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகள் உள்ளன பூகோள ரீதியில் பாகிஸ்தானுக்கு பாதகமான விஷயமே.

Image: Wikipedia

புள்ள குட்டிய பாருங்கப்பா...

புள்ள குட்டிய பாருங்கப்பா...

வறுமைப் பிடியிலும், தீவிரவாதப் பிரச்னைகளிலும் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானை அண்டை நாடுகள் தங்களை லேசாக எடை போட்டுவிடக் கூடாது என்பதற்காக அவ்வப்போது இதுபோன்ற பரபரப்பை கிளப்புவது வாடிக்கையாகி இருக்கிறது. அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் செய்யும் அடாவடிகளுக்கு அப்பாவி மக்கள் இறையாவது உலக வரலாற்றில் புதிது கிடையாது.

 நாங்களும் தயார்...

நாங்களும் தயார்...

அதுபோன்ற ஒரு நிலையை தன் நாட்டு மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க பாகிஸ்தான் தயாராக இருக்கும் பட்சத்தில், அதற்கு தக்க பதிலடி கொடுக்கவும், துணை நிற்கவும் இந்திய மக்களும் தயாராகவே இருக்கின்றனர் என்பதை பாகிஸ்தான் புரிந்துகொள்ள வேண்டும்.

ஐஎன்எஸ் விக்ரமாதித்யா போர்க்கப்பலின் சிறப்புகள்!

ஐஎன்எஸ் விக்ரமாதித்யா போர்க்கப்பலின் சிறப்புகள்!

Most Read Articles
மேலும்... #ராணுவம் #military
English summary
India’s Missile Modernization Beyond Minimum Deterrence.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X