பயணிகள் வாகனங்கள் ஏற்றுமதியில் இந்தியாவில் முன்னிலை வகிப்பது இந்த நிறுவனம் தான்..!

Written By:

பயணிகள் வாகனங்கள் ஏற்றுமதியில் இதுவரையில் வரலாற்றில் இல்லாத அளவாக 7,58,830 வாகனங்களை 2016-17 ஆண்டில் ஏற்றுமதி செய்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது இந்தியா.

மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிந்த கடந்த நிதி ஆண்டில் அதிகபட்ச அளவு பயணிகள் வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பது ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிய வந்திருக்கிறது.

கார்கள் மற்றும் யுடிலிட்டி வாகனங்கள் ஏற்றுமதி செய்ய அரசு அளித்த அதிகப்படியான ஊக்கம் காரணமாக, கடந்த நிதி ஆண்டில் பயணிகள் வாகன ஏற்றுமதி 16.2 என்ற இரட்டை இலக்க வளர்ச்சியை அடைந்துள்ளது.

2016-17 நிதி ஆண்டில் மொத்தம் 7,58,830 பயணிகள் வாகனங்கள் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பான புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ள இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சம்மேளனம், கார் மற்றும் யுடிலிட்டி வாகனங்கள் ஏற்றுமதி கடந்த நிதி ஆண்டை காட்டிலும் 13.09 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

2016-17 ஆண்டு காலகட்டத்தில் இந்த வகை வாகனங்களின் ஏற்றுமதி 6,02,341 என்ற எண்ணிக்கையை அடைந்துள்ளது. 2015-16 காலகட்டத்தில் இது 5,32,63 என்ற எண்ணிக்கையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

யுடிலிட்டி வாகனங்களை மட்டும் கணக்கில் கொண்டால் 2015-16 ஆண்டு காலகட்டத்தில் 1,18,741 என்ற எண்ணிக்கையிலிருந்து, 16-17 ஆண்டு காலகட்டத்தில் 1,54,153 ஆக அதிகரித்துள்ளது. இது 29.82 சதவீத வளர்ச்சி ஆகும்.

இந்தியாவிலிருந்து அதிகம் கார்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனமாக ஹூண்டாய் முதல் இடத்தில் தொடருகிறது. 1,67,120 வாகனங்களை ஹூண்டாய் நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது. இது 3.02% வளர்ச்சி ஆகும்.

ஹூண்டாய்க்கு அடுத்த இடத்தில் 1,58,469 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ள ஃபோர்டு நிறுவனம் இரண்டாமிடத்தில் நீடிக்கிறது.

மாருதிசுசுகி நிறுவனம் 1,22,039 பயணிகள் வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த ஆண்டை கணக்கிடும்போது இது 1.5 சதவீதம் குறைவானதாகும்.

இதேபோல 1,09,459 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ள நிசான் நிறுவனத்திற்கும் இது 1.93 சதவீதம் குறைவானதாகும்.

கார்கள் மற்றும் யுடிலிட்டி வாகன ஏற்றுமதி அதிகரித்தாலும் இருசக்கர வாகன ஏற்றுமதி இந்த நிதி ஆண்டில் 5.78 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

கடந்த ஆண்டு 24,82,876 இருசக்கர வாகனங்கள் ஏற்றுமதி ஆன நிலையில், இந்த ஆண்டில் 23,39,273 வாகனங்களே ஏற்றுமதி ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Read in Tamil about india reaches new height in passenger vehicles export.
Please Wait while comments are loading...

Latest Photos