இந்தியாவின் நீண்ட சுரங்க வழித்தடத்தை மோடி திறந்து வைக்கிறார்

Written by: Azhagar

ஜம்மு காஷ்மீரின் செனைய் மற்றும் நஷ்ரீ பகுதிகளை இணைக்கும் சுரங்க வழிப்பாதை இம்மாதம் திறக்கப்படவுள்ளது. இந்தியாவிலுள்ள சுரங்க வழித்திடங்களிலே அதிக நீளம் கொண்டதாக கருதப்படும் இது 9.2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கட்டமைக்கப்பட்டுள்ளது. 6 மாத காலம் கட்டமைப்பு பணிகள் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில், இந்த சுரங்க வழித்தடத்தை இம்மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளார்.

தட்வெட்ப நிலை காரணமாக செனைய் மற்றும் நஷ்ரீ பகுதிகளுக்கு போக்குவரத்து பாதிப்படைந்து வந்த நிலையில் அனைத்து சீதோஷனத்திற்கு ஏற்றவாறு இந்த சுரங்க வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நேரமும் விரயமாகது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2011ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இந்த சுரங்க வழித்திடத்திற்கான ஆரம்பக் கட்ட பணிகள் தொடங்கின, அப்போது இது 2016 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மக்களின் பயன்பாட்டிற்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுயிருந்தது. தற்போது 7 மாத காலம் தாமதத்திற்கு பிறகு செனைய் மற்றும் நஷ்ரீ பகுதிகளை இணைக்கு சுரங்க வழித்திடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

செனைய் மற்றும் நஷ்ரீ பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் சுரங்க வழித்தடத்தில் மற்றொரு சுரங்க வழிப்பாதை குவாசிகண்ட் மற்றும் பனிஹால் பகுதிகளில் கட்டப்பட்டு வருகிறது. சுமார் 8.45 கிலோ மீட்டர் தூரத்தில் கட்டப்பட்டு வரும் இந்த வழித்தடம் அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீருக்கான மற்றொரு அடையாளமாக மாறியுள்ள இந்த 2 சுரங்க வழித்தடங்கள்களை குறித்து பேசிய இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் அதிகாரி ஒருவர் "காஷ்மீரில் கட்டமைக்கப்படவுள்ள இந்த 2 சுரங்க வழித்தடங்களால் மக்களின் போக்கு வரத்து நேரம் விரயமாவது தவிரக்கப்படும், மேலும் இந்த போக்குவரத்து இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தும்" என்று கூறினார்.

செனைய் மற்றும் நஷ்ரீ பகுதிகளை இணைக்கும் சுரங்க வழித்தடம் ஒரே சுரங்கப் பாதையாக 9.3 மீட்டர் அகலத்தில் கட்டப்பட்டுள்ளது. ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், மாற்று வழியில் செல்ல, குவாசிகண்ட் மற்றும் பனிஹால் பகுதிகளில் கட்டப்பட்டு வரும் சுரங்கப் பாதை உதவும். இந்த 2வது சுரங்கப் பாதை 2 வழித்தடங்களாக 7 மீட்டர் அகலத்தில் கட்டப்பட்டு வருகிறது.

Tunnel Of Hope அதாவது நம்பிக்கையான சுரங்கப்பாதை என்ற பெயரில் அடையாளப்படுத்தப்படும் இதற்கு காங்கிரஸின் துணைத் தலைவர் ராகுல் காந்தி அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சுரங்க வழித்தடங்கள் பயன்பாட்டிற்கு வந்தால், புறநகரலிருந்து நகருக்கு செல்ல கிட்டத்தட்ட 10 முதல் 11 மணி வரை அக்ககூடிய நேரம் மிச்சமாகும். மேலும் பனிப்பொழிவு காலங்களிலும் எந்த இடையூறுமின்றி செல்லலாம். இரண்டு சுரங்கப் பாதைகள் அமையுவுள்ளதால் இதுவரை இருந்த போக்குவரத்து பாதிப்பும் இருக்காது என இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய தெரிவித்துள்ளது.

காஷ்மீரின் செனைய், நஷ்ரீ உட்பட பகுதிகளில் வாழும் பழ வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிப்படையாமல் இருக்கும். வானிலையில் மாற்றம் ஏற்பட்டாலும் அவர்கள் எந்த சிரமுமின்றி மற்ற பகுதிகளுக்கு சென்று பழங்களை விற்பனை செய்வதற்கும் வழிவகை செய்யும். மேலும் இதனால் உள்ளூர் வேலைவாய்ப்பு உருவாகும்.

அக்டோபரிலிருந்து, ஜனவரி வரை காஷ்மீரில் ஆப்பிளுக்கான சீசன் தொடங்கும் என்பதால், செனைய், நஷ்ரீ, குவாசிகண்ட் பகுதிகளிலிருந்து இந்தியாவில் பல பகுதிகளுக்கு குறைந்தது 200 லாரிகளிலிருந்து ஆப்பிள் விநியோகம் செய்யப்படும்.

கடந்த நாட்களில் மோசமான வானிலை ஏற்படும்போது காஷ்மீரின் சில பகுதிகளில் ஆப்பிள் வியாபாரம் பாதிக்கப்பட்டுயிருந்த சூழலில் சுரங்க வழித்தடம் அமையவுள்ளது அப்பகுதி வாசிகள் மற்றும் ஆப்பிள் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

லேண்ட் ரோவரின் ரேஞ்ச் ரோவர் காரின் புகைப்பட தொகுப்பை கீழே காணுங்கள்

English summary
India's longest tunnel with 9.2km will connect Chenani and Nashri in Jammu & Kashmir
Please Wait while comments are loading...

Latest Photos