இந்தியாவின் விமானம் தாங்கி கப்பலை பார்த்து அரளும் சீனா..!

பொருளாதாரத்தை மேம்படுத்த இந்தியாவிற்கு சீனா வழங்கிய அறிவுரை, ஆசிய நாட்டில் இந்தியா தனக்கு போட்டியாக அமைந்துவிடுமோ என்று சீனா பயப்படுவது போன்ற வெளிப்பாட்டை காட்டுகிறது.

By Azhagar

இந்தியாவின் கடற்படை வலிமையாக்கப்பட்டு வருவதை கண்டு மற்ற உலக நாடுகளை விட சீனா அதிர்ந்து தான் போயுள்ளது. அதை உறுதிப்படுத்தும் விதமாக சீனாவின் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தி, இன்று நாட்டில் பரபரப்பு செய்தியாக மாறியுள்ளது.

வலிமையாகும் இந்திய கடற்படை, கடுப்பின் உச்சத்தில் சீனா

சீனாவின் கப்பற்படை விரிவுப்படுத்தப்பட்ட 68வது ஆண்டு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதுகுறித்து சீனாவின் குளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் இந்தியா விமானந்தாங்கிகள் உருவாக்குவது குறித்து மாறான ஒரு கருத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வலிமையாகும் இந்திய கடற்படை, கடுப்பின் உச்சத்தில் சீனா

பொருளாதரத்தை வளர்ப்பதில் ஆரம்பக்கட்டத்திலுள்ள இந்தியா, போர்கப்பல்கள் மற்றும் விமானம் தாங்கி கப்பல்களை தயாரிப்பதில் பொறுமை காக்க வேண்டும் என குளோபல் டைம்ஸ் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

வலிமையாகும் இந்திய கடற்படை, கடுப்பின் உச்சத்தில் சீனா

தொழில்மயமாக்கலில் நன்றாக வளர்ந்து வரும் நாடாக இருக்கும் போது, விமானம் தாங்கிகளை நிறுவுவதில் இந்தியா பொறுமையுடன் செயல்பட வேண்டும் என்றும்,

சீனாவைக் கட்டுப்படுத்த விமானந்தாங்கிக் கட்டமைப்புகளுக்கு முன்னர் பொருளாதார வளர்ச்சி இந்தியாவிற்கு அவசியம் என சீனாவின் குளோபல் டைம்ஸில் செய்தி வெளியாகியுள்ளது.

வலிமையாகும் இந்திய கடற்படை, கடுப்பின் உச்சத்தில் சீனா

பொருளாதாரத்தில் உலகின் இரண்டாவது பெரிய நாடக உள்ள சீனா ஏன் இந்தியாவின் கப்பற்படை வளர்ச்சியை உற்றுநோக்கி வருகிறது என்பது முழு முக்கிய பிரச்சனையாக இந்த செய்தி நமக்கு தெரிவிக்கிறது.

வலிமையாகும் இந்திய கடற்படை, கடுப்பின் உச்சத்தில் சீனா

உலகிலேயே பொருளாதார அளவில் இரண்டாவது பெரிய நாடாக உள்ள சீனா, இப்போது தான் ஒரு விமானம் தாங்கி கப்பலை தயாரித்துள்ளது, அதுவும் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை.

வலிமையாகும் இந்திய கடற்படை, கடுப்பின் உச்சத்தில் சீனா

இந்தியாவில் வளர்ச்சி ஏன் சீனாவிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது, கொஞ்சம் வரலாற்றுடன் பின்னோக்கி பார்க்கலாம்...

இரண்டாம் உலகப்போர் முடிவிற்கு வந்த சமயத்தில், இங்கிலாந்து அரசு எச்எம்எஸ் ஹெர்குலிஸ் என்ற விமானம் தாங்கி கப்பலை தயாரித்து வந்தது. போர் முடிந்த பிறகு இங்கிலாந்து அதற்கான உருவாக்க பணிகளில் பெரிய ஆர்வம்காட்டவில்லை.

வலிமையாகும் இந்திய கடற்படை, கடுப்பின் உச்சத்தில் சீனா

இதை அறிந்த இந்தியா, 1957ம் ஆண்டில் அதை வாங்கியது. 1961ம் ஆண்டு முதல் 1997வரை இந்திய கப்பற்படையில் எச்எம்எஸ் ஹெர்குலிஸ், ஐ.என்.எஸ் விராத் என்ற பெயரில் சேவையாற்றியது.

வலிமையாகும் இந்திய கடற்படை, கடுப்பின் உச்சத்தில் சீனா

ஐ.என்.எஸ் விராத் கிழக்கு பாகிஸ்தான் விடுதலை போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது. கடந்த மார்ச் 7 முதல் இந்திய கப்பற்படையிலிருந்து விடுவிக்கப்பட்டு பிரபல பைக் தயாரிப்பு நிறுவனத்திடம் உடைக்க ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வலிமையாகும் இந்திய கடற்படை, கடுப்பின் உச்சத்தில் சீனா

1987ம் ஆண்டில் ரஷ்யா பயன்படுத்திய கீவ்-கிளாஸ் விமானம் தாங்கி கப்பலை இந்தியா கடந்த 2014ம் ஆண்டில் வாங்கியது. ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு பிறகு இந்திய கப்பற்படையோடு சேர்த்துக்கொள்ளப்பட்டது.

வலிமையாகும் இந்திய கடற்படை, கடுப்பின் உச்சத்தில் சீனா

2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஐ.என்.எஸ் விக்ராந்த் இந்தியாவில் தயாரான முதல் விமானம் தாங்கி கப்பலாகும். இது கொச்சியிலுள்ள கப்பல் கட்டும் தளத்திலிருந்து முதல்முறையாக தண்ணீரில் விடுவிக்கப்பட்டது.

வலிமையாகும் இந்திய கடற்படை, கடுப்பின் உச்சத்தில் சீனா

ஐ.என்.எஸ் விக்ராந்த் முதல்முறையாக மிதக்கவிடப்பட்டபோது, இந்தியாவின் போர்க்கப்பல் தயாரிக்கும் நிபுணத்துவம் ஒரு புதிய மைல்கல்லை எட்டியிருப்பதை உலகிற்கு

பறைசாற்றியது.

வலிமையாகும் இந்திய கடற்படை, கடுப்பின் உச்சத்தில் சீனா

இந்த கப்பலுக்கான கட்டுமானப் பணிகள் நிறைவு அடைந்த பிறகு அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு அடுத்து சொந்தமாக விமானம் தாங்கி போர்க்கப்பலை உருவாக்கும் தகுதி பெற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்தது.

வலிமையாகும் இந்திய கடற்படை, கடுப்பின் உச்சத்தில் சீனா

இந்த இரண்டு விமானம் தாங்கிகள் கப்பலுக்கு பிறகு ஐ.என்.எஸ் விஷால் என்ற பெயரில் மூன்றாவது ஒரு கப்பலை இந்தியா தயாரித்து வருகிறது. அனால் 2025ம் ஆண்டில் தான் அது சேவைக்கு அறிமுகப்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வலிமையாகும் இந்திய கடற்படை, கடுப்பின் உச்சத்தில் சீனா

இவை தவிர இந்தியாவிடம், நீர்மூழ்கி கப்பல்கள் இரண்டு உள்ளன. ஹரிஹந்த் கிளாஸ் என்று பெயரிடப்பட்டுள்ள அணு ஏவுகணைகளை கொண்டுள்ள நீர்மூழ்கி கப்பல் 6000 டன் எடையில் உருவாக்கப்பட்டவை.

முற்றிலும் இந்தியாவில் தயாரான இது, 2016ம் ஆண்டு முதல் கப்பல் படையில் சேவையாற்றி வருகிறது.

வலிமையாகும் இந்திய கடற்படை, கடுப்பின் உச்சத்தில் சீனா

ரஷ்யாவிடம் ஒப்பந்த அடிப்படையில் தாக்கும் திறன் கொண்ட அணு ஆயுதங்களுக்கான மற்றொரு நீர்மூழ்கி கப்பலான சக்ராவும் பயன்பாட்டில் உள்ளது.

வலிமையாகும் இந்திய கடற்படை, கடுப்பின் உச்சத்தில் சீனா

10 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் ரஷ்யாவிடமிருந்து இந்தியா 2012ம் ஆண்டு இதை வாங்கியது. ஆனால் இதை முழுமையாக சொந்தமாகிக்கொள்ள இந்தயா சார்பில் ரஷ்யாவிடம் பேச்சு வார்த்தை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வலிமையாகும் இந்திய கடற்படை, கடுப்பின் உச்சத்தில் சீனா

தாக்கும் அடிப்படையிலான ஆயூதங்களுடன் கூடிய இரண்டு நீர்மூழ்கி கப்பல்கள் இந்தியாவிடமுள்ளது. இதில் ஒன்று ரஷ்யாவிடமிருந்தும், மற்றொன்று ஜெர்மனி நாட்டினிடமிருந்தும் பெறப்பட்டவை ஆகும்.

வலிமையாகும் இந்திய கடற்படை, கடுப்பின் உச்சத்தில் சீனா

சமீபத்தில் இந்தியா கொல்கத்தா கிளாஸ் பிரிவில் ஐ.என்.எஸ் சென்னை என்ற கப்பலை தயாரித்தது. தமிழ்நாட்டின் சென்னை பகுதிக்காக தயாராகியுள்ள இந்த போர் கப்பல் 8300 டன் எடைக்கொண்டது.

வலிமையாகும் இந்திய கடற்படை, கடுப்பின் உச்சத்தில் சீனா

அதிநவீன தொழில்நுட்பத்தில், தாக்கும் திறன் படைத்த தொழில்நுட்பம் கொண்ட இதை வெளியிட்ட பிறகு தான் சீனா, கடற்படை சார்ந்த வளர்ச்சியில் இந்தியாவின் பங்கை உற்றுநோக்கி வருகிறது.

வலிமையாகும் இந்திய கடற்படை, கடுப்பின் உச்சத்தில் சீனா

இந்தியாவின் வளர்ச்சி மீது சீனாவிற்கு ஏன் இந்த அக்கறை? இந்தியா ஏன் திடீரென்று கடற்படையை பலப்படுத்த முயற்சித்து வருகிறது ? என்று கேட்டால், இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதை கட்டுபடுத்தும் நோக்கிலே இந்தியா தற்போது செயல்பட்டு வருகிறது.

வலிமையாகும் இந்திய கடற்படை, கடுப்பின் உச்சத்தில் சீனா

இந்தியாவை சுற்றியிருக்ககூடிய அனைத்து திசைகளிலும் சீனா துறைமுகங்களை அமைத்து வருகிறது. பாகிஸ்தானின் கவாடர் பகுதியிலும், ஸ்ரீலங்காவின் ஹம்பபண்டோட்டா பகுதி என இந்தியாவை சுற்றியிருக்கும் ஏனைய அண்டை நாடுகளில் சீனா துறைமுகத்தை கட்டமைத்துள்ளது.

வலிமையாகும் இந்திய கடற்படை, கடுப்பின் உச்சத்தில் சீனா

ஆசிய நாட்டை பொறுத்தவரை சீனா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த விரும்புகிறது. அதற்கான வளர்ச்சியில் எங்கே, நமக்கு இந்தியா போட்டியாக அமைந்துவிடுமோ என்ற பயத்தின் வெளிப்பாடே, சீனாவின் தினசரி நாளிதழில் இன்று தெரியவந்தது.

வலிமையாகும் இந்திய கடற்படை, கடுப்பின் உச்சத்தில் சீனா

சீனாவைக் கட்டுப்படுத்த தற்போது கடல்சார் அச்சுறுத்தல்களை இந்தியா சமாளிக்க திட்டம் வகுத்து வருவது போல, ஆகாய விமானங்களுக்கான வளர்ச்சியின் மீதும் கவனம் செலுத்த வேண்டும் என்பது பல தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
India's navy devlopment makes china to suffer mocks through media. click for more details...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X