உலக போர் விமானங்களில் முதல் இடத்தை பெற்ற தேஜஸ் இனி ஆளில்லாமலும் பறக்கப்போகிறது..!

Written By:

தேஜஸ் போர் விமானத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஆளில்லா தேஜஸ் இலகுரக போர் விமானம் தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளது ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம்.

இந்த நூற்றாண்டின் போர்களை வானத்தில் இருந்த படி கட்டுப்படுத்துகின்றன போர் விமானங்கள். மின்னல் வேகத்தில் சீறிப்பாய்கின்ற, காற்றை கிழித்து செல்லக்கூடிய, மனிதன் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு உயரப் பறக்கும் பல போர் விமானங்களும் வானத்தில் வட்டமடித்துக்கொண்டிருக்கின்றன. அதில் சமீபத்திய வரவு இந்தியாவின் தேஜாஸ்.

இப்போது உலகத்தில் உள்ள 10 டன் தர வரிசையிலுள்ள விமானங்களில் முதலிடத்தில் உள்ளது தேஜஸ் விமானம் தான். 4ஆம் தலைமுறை விமானத்திற்கு இருக்கவேண்டிய வேகம், துல்லியம், ஆயுத வலிமை போன்ற அனைத்து அம்சங்களும் தேஜஸில் உண்டு.

கம்ப்யூட்டர் இன்டர்பேஸ் மூலம் விமானி, காக் பிட்டில் அமர்ந்தபடியே வேகம், தூரம், உயரம், எதிரியின் தூரம் உள்ளிட்ட அனைத்தையும் தன் முன்னால் உள்ள டிஸ்ப்ளேவில் பார்க்கலாம்.

இந்திய விமானப்படையிடம் உள்ள விஷேச தேஜஸ் விமானம் வாலில்லாமல் முக்கோண வடிவத்தில் உள்ளதால் எங்கு வேண்டுமானாலும் வளைந்து செல்லக்குடியது. அதே போல இதில் உள்ள இயங்கும் கியர்கள் மற்றும் லீவர்கள் fly by wire என்ற தொழில் நுட்பத்தில் இயங்குகிறது.

எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்குவதோடு, உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் பெயரை தேஜஸ் விமானங்கள் நிலை நிறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தின் கைவண்ணத்தில் உருவாகிய தேஜஸ், கடந்த ஆண்டு முதல் முறையாக விமானப்படையில் இணைந்தது. சமீபத்தில் பஹ்ரைனில் நடந்த சர்வதேச வானூர்தி கண்காட்சியில் அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது.

தற்போதுள்ள தேஜஸ் விமானம் ஒரு சீட் கொண்டது. வானூர்தி தொழில் நுட்பத்தில் இந்தியா இப்போது முதல் 6 இடங்களில் உள்ளது. வருங்காலத்தில் இந்த நிலையை அதிகரிக்க ஆளில்லா தேஜஸ் விமானத்தை தயாரிக்கும் முதற்கட்ட பணியில் இறங்கியுள்ளது ஹிந்துஸ்தான் ஏரோனாடிக் எனப்படும் ஹச்ஏஎல் நிறுவனம்.

ஒரு தேஜஸ் விமானத்தை தயாரிக்க 6 முதல் 8 மாதங்கள் ஆகும். இந்தியா ஒரு ஆண்டிற்கு 16 விமானங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதுவரை 2,000 முறைக்கு மேல் அனைத்து வகையான சூழல்களிலும் தேஜஸ் சோதனையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு ஆற்றல் வாய்ந்த ஒரு தேஜஸ் விமானத்தை தயாரிக்க 160 கோடி ரூபாய் செலவாகிறது. இதன் மற்றொரு வகையான தேஜஸ் மார்க் 1ஏ என்ற மாடலை தயாரிக்க 602.71 கோடி ரூபாய் செலவாகிறது.

ஆளில்லா தேஜஸ் விமானத்தை தவிர்த்து ஆளில்லா செடக் ஹெலிகாப்டர் மற்றும் ஆரா எனப்படும் சிறிய ரக போர் விமானங்களையும் (ட்ரோன்) தயாரிக்க ஹிந்துஸ்தான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வயதாகி வரும் முந்தைய தலைமுறை போர் விமானமான எம்ஐஜி-21 ஜெட் விமானங்கள் விட்டுச்செல்லக்கூடிய இடத்தை தேஜஸ் நிரப்ப ஆயத்தமாகி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆளில்லா இலகுரக தேஜஸ் போர் விமானங்களை கூடிய விரைவில் தயாரித்து வழங்க ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் கடும் முனைப்பு காட்டி வருகிறது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Read in Tamil about unmanned tejas light combat fighter production by india.
Please Wait while comments are loading...

Latest Photos