தொடர்ந்து விபத்தில் சிக்கும் விமானப்படை விமானங்கள்.. காரணம்

By Saravana Rajan

சில தினங்களுக்கு முன் சென்னையிலிருந்து அந்தமான் சென்ற இந்திய விமானப்படையின் ஏஎன் 30 விமானம் மாயமாகியிருக்கிறது. விமானப்படையின் அதிநவீன ரேடார் பொருத்தப்பட்ட விமானங்கள், 13 போர் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள், கடலோர கண்காணிப்பு விமானங்களை வைத்து தீவிர தேடுதல் வேட்டைகள் நடந்தும் இதுவரை உருப்படியான தகவல் இதுவரை இல்லை.

செயற்கைகோள் மூலமாக கண்டறியும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்தில் மிதந்து வரும் இவ்வேளையில், மாயமான விமானம் எங்கு சென்றது என்று கண்டறிய முடியாமல் தவித்து வருகிறோம்.

சந்தேகம்

சந்தேகம்

மாயமான விமானத்தில் இருந்தவர்களின் கதி என்ன என்பதும் தெரியதாதது பெரும் கவலைக்குரிய விஷயம். இந்த சோகம் ஒருபுறம் இருக்க, இந்திய விமானப்படைக்கு சொந்தமான பல விமானங்கள் தொடர்ந்து விபத்துக்குள்ளாகி வருவது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது.

மிக அதிகம்

மிக அதிகம்

உலகிலேயே அதிக விமான விபத்து சதவீதத்தை கொண்ட விமானப்படைகளில் ஒன்றாக இந்திய விமானப்படை இருப்பது புள்ளிவிபரங்கள் மூலமாக தெரியவருகிறது. கடந்த 2010ம் ஆண்டிலிருந்து இதுவரை 30க்கும் அதிகமான ராணுவ விமானங்களையும், 10 ராணுவ ஹெலிகாப்டர்களையும் இழந்திருக்கிறோம். அதைவிட, திறன்வாய்ந்த பைலட்டுகள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் விலை மதிப்பில்லாத உயிர்களும் பறிபோயிருக்கிறது.

பராமரிப்பு

பராமரிப்பு

போதிய பராமரிப்பு இல்லாததே இதுபோன்ற விபத்துக்களுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இதனை நாம் சொல்லவில்லை. விமானப்படை அதிகாரிகளே இதனை ஒப்புக் கொள்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன் விமானப்படை துணை தலைமை தளபதி பிஎஸ் தனோவா கூட, விமானங்கள் போதிய பராமரிப்பில் இல்லை என்று வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.

 தொழில்நுட்பக் கோளாறு

தொழில்நுட்பக் கோளாறு

பராமரிப்பு மட்டுமல்ல, தற்போது மாயமாகியிருக்கும் அன்டனோவ் ஏஎன்-32 விமானம் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 3 தொழில்நுட்பக் கோளாறுகளை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே, இந்த பழமையான விமானங்களை வைத்து பல பேரின் உயிருடன் விளையாடுவது அபத்தமாக இருக்கிறது.

தவிர்க்க முடியாத சக்தி

தவிர்க்க முடியாத சக்தி

இந்திய விமானப்படைக்கு தேவையான தளவாடங்கள் மற்றும் துருப்புகளை பரிமாற்றுவதில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்குகிறது ஏஎன்-32 விமானங்கள். சோவியத் யூனியனுடன் நெருங்கிய நட்பு பாராட்டிய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் இந்த விமானங்கள் வாங்கப்பட்டது. நூறுக்கும் மேற்பட்ட ஏஎன்-32 விமானங்கள் தற்போது இந்திய விமானப்படையின் பயன்பாட்டில் உள்ளன.

 நவீனப்படுத்தியும்...

நவீனப்படுத்தியும்...

இவை மிகச்சிறந்த விமான மாடலாக குறிப்பிடப்படுகிறது. மேலும், இந்த விமானங்களை நவீன மயமாக்கும் பணிகளும் நடந்துள்ளன. இருப்பினும், அவை போதிய பலனளிக்கவில்லை என்பது தெரிகிறது. ஏனெனில், விமானங்களை நவீனப்படுத்தினால் மட்டும் போதாது. போதிய பராமரிப்பும் அவசியம்.

தட்டுப்பாடு

தட்டுப்பாடு

அவற்றிற்கான உதிரிபாகங்கள் கிடைப்பதில் கூட சிக்கல் இருப்பதாக விமானப்படை அதிகாரி தனவோ தெரிவித்திருந்தார். இதனால், பழுதை சரிசெய்தே, பழைய உதிரிபாகங்களை சரி செய்தே பல விமானங்கள் இயக்கப்படும் அவல நிலையும் இருப்பதாக தெரிகிறது.

சிறந்த மாடல்

சிறந்த மாடல்

ஏஎன்-32 விமானத்தில் 42 பேர் வரை பயணிக்க முடியும். 6.7 டன் சரக்குகளை எடுத்துச் செல்லலாம். இந்த விமானங்கள் மணிக்கு 500 கிமீ வேகத்தில் பறக்கும். இவை அனைத்து சீதோஷ்ண நிலைகளிலும் மிகச்சிறப்பாக செயல்படுமாம். ஆனாலும்...

ஓய்வு

ஓய்வு

வயோதிக நிலையில் உள்ள இந்த விமானங்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, புதிய விமானங்களை சேர்ப்பதற்கான நேரம் இதுவாக கருதலாம். இதுமட்டுமல்ல, பூச்சாண்டி காட்டினால் போதுமா என்கிற ரீதியில் மற்றொரு விஷயத்தையும் விமானப்படை அதிகாரி தனவோ கூறியிருக்கிறார்.

மற்றொரு கோணம்

மற்றொரு கோணம்

1986ம் ஆண்டிலிருந்து இதுவரை 77 தடவை ஏஎன்32 விமானங்கள் விபத்துக்களில் சிக்கியிருக்கின்றன. அதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதாவது, சராசரியாக ஆண்டுக்கு ஒரு விபத்தை சந்தித்துள்ளது இந்த விமானங்கள். எனவே, வயோதிக நிலையில், இந்த விமானங்களின் செயல்திறன் எவ்வாறு இருக்கும் என்பதையும் நாம் யோசிக்க வேண்டியிருக்கிறது.

பகீர்...

பகீர்...

நாட்டின் மேற்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளின் வான் எல்லையை பாதுகாப்பதற்கு போதிய போர் விமானங்கள் நம்மிடம் இல்லையாம். இது மத்திய அரசுக்கும் தெரியும் என்று வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்.

நிலவரம்

நிலவரம்

நாட்டின் வான் எல்லை பாதுகாக்க 42 ஸ்குவாட்ரான்களை இருப்பது அவசியம். ஸ்குவாட்ரான் எனப்படும் ஒவ்வொரு விமானப்படை பிரிவிலும் 16 முதல் 18 போர் விமானங்கள் இருக்கும். ஆனால், நம்மிடம் தற்போது 33 ஸ்குவாட்ரான்களே உள்ளனவாம்.

அய்யய்யோ...

அய்யய்யோ...

பற்றாக்குறை மட்டுமல்ல, பழமையாகிவிட்ட மிக்-21 மற்றும் மிக்-27 போர் விமானங்கள் கொண்ட மூன்று ஸ்குவாட்ரான்கள் சமீபத்தில் விமானப்படையிலிருந்து விலக்கப்பட்டன. இதனால், அந்த பற்றாக்குறை மேலும் அதிகரித்துள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் மிக்-21 போர் விமானங்களை கொண்ட 10 ஸ்குவாட்ரான்கள் விலக்கிக் கொள்ளப்பட உள்ளன.

புதிய விமானங்கள்

புதிய விமானங்கள்

இதற்கு மாற்றாக, புதிய போர் விமானங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது அவசியம். பிரான்ஸ் நாட்டின் 36 ரஃபேல் போர் விமானங்களையும், 120 தேஜஸ் போர் விமானங்களுடன் புதிய ஸ்குவாட்ரான்களை அமைக்க இந்திய விமானப்படை திட்டமிட்டிருக்கிறது. ஆனால், அதுவரை பழைய போர் விமானங்களை வைத்தே பூச்சாண்டி காட்ட வேண்டியிருக்கும் என கருதப்படுகிறது.

 காரணம்...

காரணம்...

பிற அரசுத் துறைகளில் உள்ளது போன்றே, பாதுகாப்புத் துறையிலும் ஊழல், லஞ்ச லாவண்யம் மலிந்து விட்டதே விமானங்களின் பராமரிப்புப் பணிகள் மற்றும் புதிய விமானங்களை கையகப்படுத்துவதிலும் பெரும் இடையூறாக இருக்கிறது. மோசமான வானிலை என்பது ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும், அதனை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கும் கருவிகள், விமானங்களுக்கான நவீன டிராக்கர் சாதனங்கள் போன்றவையும் அவசியமாகியிருக்கிறது. அத்துடன், போதிய பராமரிப்பும் அவசியம். உலகின் மிகப்பெரிய ராணுவ பலத்தை கொண்ட நாடுகளில் 4வது இடத்தில் இருக்கிறோம் என்று பூச்சாண்டி காட்டினால் மட்டும் போதாது. அதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்குவதே இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்கவும், விலை மதிப்பில்லா உயிர்களை காக்கவும் உதவும்.

மெகா பட்ஜெட்

மெகா பட்ஜெட்

நடப்பு நிதி ஆண்டில் பாதுகாப்புத் துறைக்கு மட்டும் ரூ.2.58 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் புதிய தளவாடங்கள், விமானங்களை வாங்குவதற்கு மட்டுமின்றி, பழைய விமானங்களை பராமரிப்பதற்கும் குறிப்பிடத்தக்க அளவு நிதி ஒத்துக்கீடு செய்யப்படுகிறது. இந்த நிதி முறையாக கையாளப்படும்பட்சத்தில், இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க முடியும்.

ரஃபேல் போர் விமானமும், இந்தியாவுக்கு அதன் அவசியமும்...!!

ரஃபேல் போர் விமானமும், இந்தியாவுக்கு அதன் அவசியமும்...!!

Most Read Articles
மேலும்... #ராணுவம் #military
English summary
Why the Indian Air Force has a high crash rate?
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X