மொபைல்போனுக்கான வீடியோ கேம் வெளியிட்ட இந்திய விமானப் படை: ஏன்?

மொபைல்போனுக்கான முப்பரிமாண வீடியோ விளையாட்டை இந்திய விமானப் படை வெளியிட்டுள்ளது. அடுத்த தலைமுறை இளைஞர்கள் விமானப் படையில் சேர்வதற்கான ஆர்வத்தை தூண்டும் வகையில் இந்த வீடியோ கேம் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்டியன்ஸ் ஆஃப் தி ஸ்கைஸ்(GOTS) என்ற பெயரில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த வீடியோ விளையாட்டை ஆன்ட்ராய்டு, விண்டோஸ் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் இயங்குதளங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். வானில் போர் விமானங்களின் சாகசங்கள் மற்றும் செயல்பாடுகளை உணரும் விதத்தில் இந்த வீடியோ கேம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indian Air Force Jet

வீடியோ விளையாட்டு வெளியிட்டு நிகழ்ச்சியில் பேசிய ஏர்மார்ஷல் எஸ் சுகுமார், " இந்திய விமானப் படையின் இந்த புதிய முயற்சி இளைஞர்களை விமானப் படையில் சேர்வதற்கு ஊக்கப்படுத்தும். விமானப் படையில் திறமைமிக்க இளைஞர்கள் அதிக அளவில் சேர வேண்டும் என்று விரும்புகிறோம்.

இந்த புதிய வீடியோ கேம் இளைஞர்களின் ஒவ்வொரு நாளையும் மிக உற்சாகமிக்கதாக வைத்திருக்கும். எதிர்காலத்தில் போர் தந்திரம் மற்றும் நாட்டின் பாதுகாப்பு விஷயங்களில் சிறந்த மனித ஆற்றலும், நவீன தொழில்நுட்பங்களும் இருப்பது அவசியம் என்று அவர் கூறினார்.

Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X