ரோல்ஸ்ராய்ஸ் அந்தஸ்தை ஆட்டிப் பார்த்த இந்திய மன்னர்!

By Saravana

அந்தஸ்தை கூட்டுவதற்காக ரோல்ஸ்ராய்ஸ் கார் வாங்குவது இன்று நேற்றல்ல, தொன்று தொட்ட வழக்கமாக உள்ளது. ஆனால், உலக அளவில் ரோல்ஸ்ராய்ஸ் கார் வைத்திருப்பதை அகவுரமாக நினைக்க வைத்தார் ஓர் இந்திய மஹாராஜா.

ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தை மண்டியிட வைத்த அந்த மஹாராஜாவின் செயல் இன்று வரை ரோல்ஸ்ராய்ஸ் நிறுவன வரலாற்றில் மாறாத வடுவாக இருந்து வருகிறது.

ஆல்வார் மன்னர்

ஆல்வார் மன்னர்

ஆல்வார் மன்னரான ஜெய் சிங் ஒருமுறை லண்டன் சென்றிருந்தார். அங்குள்ள பாண்ட் சாலையில் சாதாரண உடையில் சென்று கொண்டிருந்த அவரது கண்ணில் ரோல்ஸ்ராய்ஸ் கார் ஷோரூம் ஒன்று கண்ணில் பட்டது. உடனே, ரோல்ஸ்ராய்ஸ் ஆசையில் உள்ளே நுழைந்துவிட்டார்.

அவமரியாதை

அவமரியாதை

ஷோரூமில் இருந்த விற்பனை பிரதிநிதி சாதாரண உடையில் இருந்த மன்னருக்கு தகவல்களை கூறாமல் மிகவும் இளக்காரமாக பேசியுள்ளார். கழுத்தை பிடித்து வெளியே தள்ளாத அளவுக்கு வார்த்தைகளால் மன்னரை ஏளனப்படுத்திவிட்டார்.

கோபம்

கோபம்

மவுனமாக ஓட்டல் அறைக்கு திரும்பிய மன்னர் ஜெய்சிங், தனது பணியாளர்களிடம் ரோல்ஸ்ராய்ஸ் கார் ஷோரூமுக்கு போன் போட சொல்லி கார் வாங்க வருவதை தெரிவிக்குமாறு கூறிவிட்டார். பின்னர், மன்னர் உடையில் தனது பரிவாரங்களுடன் அங்கு சென்றுள்ளார். அப்போது மன்னருக்கு ஷோரூமில் இருந்தவர்கள் சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்பு கொடுத்தனர்.

6 கார்கள்

6 கார்கள்

அப்போது, அந்த ஷோரூமில் நின்றிருந்த 6 கார்களையும் மன்னர் ஜெய்சிங் வாங்கியதுடன், முழுப் பணத்தையும் உடனடியாக செட்டில் செய்துவிட்டு வந்தார்.

 குப்பை வண்டி

குப்பை வண்டி

ஊருக்கு வந்தவுடன் ரோல்ஸ்ராய்ஸ் கார்களின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தார். கார்கள் அரண்மனைக்கு வந்தவுடன் முதல் வேளையாக அனைத்து கார்களையும் குப்பை வண்டியாக்க உத்தரவிட்டார். இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உலக அளவில் இந்த செய்தி ரோல்ஸ்ராய்ஸ் கார் உரிமையாளர்களுக்கு எட்டியது.

விற்பனை பெரும் சரிவு

விற்பனை பெரும் சரிவு

ரோல்ஸ்ராய்ஸ் கார்களை கவுரத்திற்காக வாங்கியவர்கள் மத்தியில் இந்த செய்தி மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், குப்பை வண்டியாக பயன்படும் கார்களை தாங்கள் வைத்திருப்பதை அகவுரமாக வாடிக்கையாளர்கள் நினைக்கத் தோன்றினர். இதனால், ரோல்ஸ்ராய்ஸ் கார் ஆர்டர் செய்திருந்த பலர் ஆர்டரை திரும்ப பெற்றனர். இதனால், ரோல்ஸ்ராய்ஸ் கார் நிறுவனத்தின் விற்பனை படு மோசமடைந்ததால், வருவாயிலும் பெரும் இழப்பு ஏற்பட துவங்கியது.

மன்னிப்பு கடிதம்

மன்னிப்பு கடிதம்

நிலைமையை உணர்ந்து கொண்ட ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் மன்னர் ஜெய்சிங்கிடம் கடிதம் மூலம் மன்னிப்பு கேட்டது. அத்துடன், ரோல்ஸ்ராய்ஸ் கார்களை குப்பை வண்டியாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டது. ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்துக்கு பாடம் கற்பிக்கவே இதுபோன்று செய்ததாகவும், அதனை ரோல்ஸ்ராய்ஸ் உணர்ந்து கொண்டதால், குப்பை வண்டியாக கார்களை பயன்படுத்த வேண்டாம் என்று பணியாளர்களுக்கு மன்னர் உத்தரவிட்டார்.

 கார்கள் பரிசு

கார்கள் பரிசு

மன்னிப்பு கேட்டதோடு மட்டுமல்லாமல் குப்பை வண்டியாக பயன்படுத்தப்பட்ட கார்களுக்கு பதிலாக 6 புதிய கார்களையும் பரிசாக வழங்கியது. இந்த நிகழ்வுக்கு பின்னர் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர் சேவையில் கூடுதல் கவனம் செலுத்தத் துவங்கியது.

Most Read Articles
English summary
Indian king's perfect lesson for Rolls Royce. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X