இந்திய அரசியல் தலைவர்கள் பொதுவாகவே ஆடம்பர வாழ்க்கைக்கு பெயர் போனவர்கள். ஆனால், சமீபத்தில் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் வெளியிட்டுள்ள சொத்து விபரத்தில் சில சுவாரஸ்யமான தகவல்களும் வெளியாகி இருக்கின்றன. அதில், பளிச்சென பலரது கவனத்தையும் திசை திருப்பியிருப்பது அவர்கள் சொந்தமாக வைத்திருக்கும் கார்கள்தான்.
பிரதமர் மன்மோகன்சிங் தனக்கு சொந்தமாக ஒரே ஒரு மாருதி 800 கார் மட்டுமே உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுபோன்று நாட்டின் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் தலைவர்கள் சொந்தமாக வைத்திருக்கும் சிறிய கார் விபரங்களை காணலாம்.
பிரணாப் முகர்ஜி கார்
மேற்கு வங்கத்தை சேர்ந்த குடியரசு தலைவர் பிரணாபுக்கு அம்பாசடர் மீதுதான் கொள்ளை பிரியம். அம்பாசடர் அவருடைய சொந்த மாநிலத்தில் தயாராவதும் ஒரு காரணம். குடியரசு தலைவரனாதும் வழங்கப்பட்ட பென்ஸ் லிமோசின் கார் ரிப்பேர் ஆனதையே சாக்காக வைத்து மீண்டும் அம்பாசடரில் பயணத்தை துவங்கினார். ஆனால், பிரணாப் சொந்தமாக வைத்திருப்பது ஃபோர்டு ஐகான். இதன் மதிப்பு ரூ.1,06,250 ஆக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


































