கேட்டர்பில்லர் ரயில்... இந்திய ரயில்வே எஞ்சினியரின் அசத்தலான கான்செப்ட்!

பொது போக்குவரத்தை மேம்படுத்தப்பட்ட பல்வேறு விதமான யோசனைகள் தெரிவிக்கப்பட்டாலும் அவை நடைமுறையில் சாத்தியப்படுத்துவதில் பல்வேறு குழப்பங்களையும், நடைமுறை சிக்கல்களையும் ஏற்படுத்துகின்றன. இந்தநிலையில், பொது போக்குவரத்துக்கான சிறப்பான புதிய ரயில் திட்ட மாதிரி ஒன்றை இந்திய ரயில்வே எஞ்சினியர் ஒருவர் உருவாக்கியிருக்கிறார்.

மிக எளிதாக அமைக்கக்கூடியதாகவும், இதர போக்குவரத்துக்கு இடைஞ்சல் தராத வகையிலும் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ரயில் திட்டம், அமெரிக்காவிலுள்ள மாசாசூட்ஸ் நடத்திய சர்வதேச அளவிலான போட்டியில் முதலிடத்தை பெற்றிருக்கிறது. இந்த ரயில் எவ்வாறு இயங்கும், அதன் சிறப்பம்சங்கள் என்ன என்பதை தொடர்ந்து காணலாம்.

ரயில்வே எஞ்சினியர்

ரயில்வே எஞ்சினியர்

டெல்லியில் உள்ள இந்திய ரயில்வேயின் தகவல் தொடர்பு மையத்தில் எஞ்சினியராக பணிபுரிந்து வரும் அஸ்வனிக்குமார் உபத்யாயா [47] என்பவர்தான் இந்த ரயில் மாதிரி திட்டத்தை உருவாக்கியிருக்கிறார். மேற்படிப்பு விடுமுறையுடன் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள மாசாசூட்ஸ் பல்கலைகழகத்தில் பிஎச்டி படிப்பை படித்து வருகிறார்.

கேட்டர் பில்லர் ரயில்

கேட்டர் பில்லர் ரயில்

கேட்டர்பில்லர் ரயில் என்பதை சுருக்கமாக சிரயில் என்று குறிப்பிட்டுள்ளார் அஸ்வனிக்குமார். இந்த ரயிலுக்கு அடிப்பகுதியில் மட்டுமின்றி மேல்பகுதியிலும் சக்கரங்கள் இருப்பதால் இந்த பெயரிட்டதாக தெரிவிக்கிறார்.

தொங்கும் ரயில்

தொங்கும் ரயில்

இந்த ரயிலை இடவசதிக்கு தகுந்தாற்போல் தண்டவாளத்தில் மேல் செலுத்த முடியும். அதேபோன்று, சில இடங்களில் தண்டவாளத்தில் தொங்கியபடி செலுத்த முடியும் என்பதே இதன் முக்கிய சிறப்பு.

எளிது

எளிது

மெட்ரோ ரயில், பறக்கும் ரயில் போன்றவற்றிற்கான கட்டமைப்புகளால் சாலையிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் இடவசதி பாதிக்கப்படுகிறது. ஆனால், இந்த ரயில் பாதை கட்டமைப்பை 5 மீட்டர் அகலமுடைய தெருவில் கூட அமைக்க முடியும்.

கட்டமைப்பு

கட்டமைப்பு

இந்த ரயில் பாதைக்கான கட்டமைப்புக்கு இரண்டு புறமும் கான்கிரீட் தூண்களை அமைத்து, அதில் உலோக கர்டர்களை ஆர்ச் போல வளைவாக அமைத்து அதில் தண்டவாளங்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

இடைஞ்சல்

இடைஞ்சல்

இந்த முறையால் சாலையில் பெரிய பெரிய கான்கிரீட் தூண்கள் அமைப்பதை தவிர்க்க முடியும் என்பதுடன், ரயில் பாதைக்கான பெரிய கான்கிரீட் பாலங்களும் தேவைப்படாது.

ரயில் நிலையங்கள்

ரயில் நிலையங்கள்

ரயில் நிலையங்களும் மிக எளிமையாக அமைக்க முடியும். எளிய கட்டமைப்பு, குறைந்த செலவு போன்றவற்றால் குடியிருப்புப் பகுதிகளின் ஊடாகவும் எளிதாக செலுத்த முடியும்.

இருக்கை வசதி

இருக்கை வசதி

இந்த ரயிலில் 20 பேர் வரை அமர்ந்து செல்லலாம். மேலும், குறைவான இடைவெளிகளில் தொடர்ந்து ரயில்களை செலுத்த முடியும்.

மின்சார ரயில்

மின்சார ரயில்

இந்த ரயில்கள் மின்சாரத்தில் இயங்கும். ஒருவேளை மின்சாரம் துண்டிக்கப்பட்டாலும் கூட ரயில் பெட்டியில் இருக்கும் பேட்டரி மூலமாக அடுத்து உள்ள ரயில் நிலையத்தை அடைந்துவிடும். நடுவழியில் தொங்கிக் கொண்டிருக்காது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Indian Railways Engineer Wins MIT Award for His Caterpillar Train System.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X