காஷ்மீரின் லே பகுதிக்கு உலகின் மிக உயரமான ரயில் பாதையை அமைக்கிறது இந்தியா : சமூக ஆர்வலர்கள் அச்சம்.!

Written By:

இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள ஜம்மு காஷ்மீர் இயற்கை எழில்கொஞ்சும் ஒரு மாநிலம் ஆகும். காஷ்மீரில் உள்ள லே வென்பனியால் சூழப்பட்ட, ஒரு பகுதியாகும்.

சுற்றுலாப்பயணிகளை பரவசம் கொள்ளச்செய்யும் லே பகுதிக்கு செல்ல சாலை மார்க்கமாகவே செல்ல முடியும் என்ற நிலை தற்போது உள்ளது. இதற்காக தேசிய நெடுஞ்சாலை ஒன்று உள்ளது.

தற்போது லே பகுதியில் இருக்கும் சாலை தான், உலகிலேயே அதிக உயரமான சாலை என்ற சிறப்பு பெற்றதாகும். இந்நிலையில், லே பகுதிக்கு ரயில்வே பாதையை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள பிலாஸ்பூர் நகரில் இருந்து காஷ்மீரில் உள்ள லே வரை அமைக்கப்படவிருக்கும் இந்த ரயில் பாதை 498 கிமீ நீளம் கொண்டது.

இந்த ரயில் பாதை அமைக்கும் பணி முடிவடைந்து விட்டால், லே பகுதி இமாச்சலப் பிரதேசத்துடனும், இந்தியாவின் இதர பகுதி ரயில்வேயுடன் நேரடியாக இணையும். ராணுவத்தினர் மற்றும் தளவாடங்களை லே பகுதிக்கு எளிதாக அனுப்ப முடியும்.

இதற்கான இறுதிகட்ட களஆய்வு பணியை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தொடங்கி வைத்தார். இந்த சவாலான பணியை ரைட்ஸ் நிறுவனத்தின் நிபுணர் குழு மேற்கொள்கிறது. இதற்கான நிதியை ராணுவ அமைச்சகம் வழங்குகிறது.

3,300 மீட்டர் உயரத்தில் அமையவுள்ள இந்த ரயில்பாதை திட்டம் உலகின் மிக உயரமான ரயில் பாதையாக இருக்கும். தற்போது சீனாவின் கிங்காய்-திபெத் ரயில்பாதைதான் உலகின் மிக உயர்ந்த ரயில்பாதையாக உள்ளது.

சீனா, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்திய பகுதிகளை இணைக்கும் வகையில் ரயில் பாதை அமைக்கும் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு 157.77 கோடி ரூபாய் ஆகும்.

இந்த பாதை அமைக்கப்பட்டால், இமயமலைப் பகுதியில் மேற்கொள்ளப்படும் ரயில் பயணம் மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இமயமலையின் மலை வழிப்பாதையிலும் செல்லும் வழித்தடம் காண்போரை ஆச்சரியம் கொள்ளச் செய்யும்.

இந்த வழித்தடத்தில் சுந்தர் நகர், மண்டி, தண்டி, கீலோங், கோக்சர், தர்ச்சா, உப்ஷி மற்றும் காரு ஆகிய முக்கிய நகரங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

லே நகரை அடையும் நெடுஞ்ச்சாலை காலநிலை காரணமாக வருடத்தின் 5 மாதங்கள் மட்டுமே திறந்திருக்கும் நிலையில், இந்த ரயில் பாதை அனைத்து சீதோஷ்ன நிலைகளிலும் தாக்குப்பிடிக்கும் வகையில் அமையப்பெரும் என்பதால் லே பகுதியை எந்த காலநிலையிலும் அடையலாம்.

சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் இந்த ரயில் பாதை அமைக்கப்படுகிறது என்றாலும் லேயில் உள்ள இந்திய ராணுவ முகாம்களுக்கான வீரர்கள்,தளவாடங்களை இந்த ரயில் பாதை மூலம் எடுத்துச் செல்ல முடியும்.

சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் இந்த ரயில் பாதை அமைக்கப்படுகிறது என்றாலும் லேயில் உள்ள இந்திய ராணுவ முகாம்களுக்கான வீரர்கள்,தளவாடங்களை இந்த ரயில் பாதை மூலம் எடுத்துச் செல்ல முடியும்.

எனினும் இயற்கையின் போர்வையால் போர்த்தப்பட்டுள்ள லே, இந்த ரயில் பாதை அமையப்பெற்றால் சுற்றுலா பயணிகளால் சீரழிய வாய்ப்பு ஏற்படும் என்று சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

பிளாஸ்டிக், குப்பைகள், மாசு, பாட்டில்கள் என அனைத்து வகையிலுமான சீர்கேடுகளை விரைவில் லே சந்திக்க உள்ளது என்றும் சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பரிமாறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Read in Tamil about worlds highest railway line to come up in kahsmir
Story first published: Wednesday, June 28, 2017, 11:07 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos