விபத்துக்களை தடுக்க ரயில் எஞ்சின்களில் அதிநவீன எச்சரிக்கை கருவி!

விபத்துக்களை தவிர்ப்பதற்காக ரயில் எஞ்சின்களில் ட்ரை-நேத்ரா என்ற அதிநவீன பாதுகாப்பு சாதனம் பொருத்தப்பட உள்ளது.

Written By:

விபத்துக்களை தவிர்ப்பதற்காக ரயில் எஞ்சின்களில் ரேடார் துணையுடன் இயங்கும் அதிநவீன சாதனங்கள் பொருத்தப்பட உள்ளது. ட்ரை-நேத்ரா என்று குறிப்பிடப்படும் இந்த கருவியை ரயில் வாரியத்தின் கீழ் செயல்படும் தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கி உள்ளது.

இந்த சாதனங்கள் மூலமாக தண்டவாளத்தில் இருக்கும் தடைகளை முன்கூட்டியே தெரிந்து கொண்டு ரயிலை நிறுத்த முடியும். இந்த சாதனம் செயல்படும் விதம், பயன்கள் குறித்த தகவல்களை தொடர்ந்து காணலாம்.

கம்ப்யூட்டர், மானிட்டர், இரண்டு உயர் துல்லிய கேமரார்கள், அகச்சிவப்பு கதிர் நுட்பத்தில் செயல்படும் உயர் துல்லிய வீடியோ கேமரா ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படும் அமைப்பாக ட்ரை-நேத்ரா தொழில்நுடமானது இருக்கும். மேலும், இவை ரேடார் சாதனத்தின் துணையும் இயங்குகிறது.

கம்ப்யூட்டர், மானிட்டர், இரண்டு உயர் துல்லிய கேமரார்கள், அகச்சிவப்பு கதிர் நுட்பத்தில் செயல்படும் உயர் துல்லிய வீடியோ கேமரா ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படும் அமைப்பாக ட்ரை-நேத்ரா தொழில்நுடமானது இருக்கும். மேலும், இவை ரேடார் சாதனத்தின் துணையும் இயங்குகிறது.

அதிவேகத்தில் செல்லும்போது தண்டவாளங்களில் இருக்கும் தடைகளை ரயில் ஓட்டுனர்கள் கண்டுபிடித்தால் கூட உடனடியாக ரயிலை நிறுத்த முடியாது. ஆனால், இந்த ட்ரை-நேத்ரா சாதனத்தின் மூலமாக 2 முதல் 3 கிமீ தொலைவில் உள்ள கண்ணுக்கு தெரியாத தடைகளை கூட எளிதாக தெரிந்து கொள்ள முடியும் என்பதால் பாதுகாப்பாக ரயிலை நிறுத்த முடியும்.

கடுமையான பனிமூட்டம், கனமழை மற்றும் இரவு நேரங்களில் கூட இந்த ட்ரை-நேத்ரா சாதனமானது துல்லியமாக வேலை செய்யும். எனவே, விபத்துக்களை தவிர்க்க இந்த புதிய கருவி ஆபத்பாந்தவானாக செயல்படும்.

நம் நாட்டின் போர் விமானங்கள், கடற்படை கப்பல்களில் இந்த ட்ரை-நேத்ரா தொழில்நுட்பமானது ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது. போர் விமானங்கள் மேக மூட்டங்களின் ஊடாக செல்லும்போதும், மோசமான சீதோஷ்ண நிலையிலும் இதே தொழில்நுட்ப சாதனத்தை பயன்படுத்தி செலுத்தப்படும்.

அதேபோன்று, இரவு நேரத்திலும், மோசமான சீதோஷ்ண நிலையிலும் கப்பலை இயக்கும்போது, கடலின் நீர்பரப்புக்கு கீழே இருக்கும் கண்ணுக்கு தெரியாத தடைகளை இந்த தொழில்நுட்ப வசதியின் மூலமாகத்தான் கப்பல் கேப்டன்கள் தெரிந்து கொண்டு கப்பலை செலுத்துகின்றனர்.

ரயில் டீசல் எஞ்சின்களில் இந்த ட்ரை-நேத்ரா சாதனம் பொருத்தப்பட உள்ளது. இந்த புதிய சாதனம் மூலமாக ரயில் விபத்துக்கள் வெகுவாக குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. விபத்துக்களை குறைப்பதோடு மட்டுமின்றி, இந்த சாதனத்தின் உதவியுடன் மிக மோசமான சீதோஷ்ண நிலையில் கூட வழக்கமான வேகத்தில் ரயிலை இயக்க முடியும்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Indian Railways to launch Tri-Netra system.
Please Wait while comments are loading...

Latest Photos