மணிக்கு 500 கிமீ வேகத்தில் செல்லும் ரயில்... வெளிநாட்டு ரயில் நிறுவனங்களுக்கு அழைப்பு!

Written By:

அதிவேக ரயில்கள், புல்லட் ரயில்களை இயக்குவதற்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் மத்திய அரசு, தற்போது அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது. ஆம், சக்கரங்கள் இல்லாமல் காந்த விசையில் மணிக்கு 500 கிமீ வேகத்தில் செல்லும் ரயில்களை இயக்குவதற்கான திட்டததை கையிலெடுத்துள்ளது.

இதற்கான திட்டத்தை சமர்ப்பிதற்காக நாளை டெல்லியில் சர்வதேச மாநாடு ஒன்றுக்கும் இந்திய ரயில்வே துறை நாளை ஏற்பாடு செய்திருக்கிறது. இதனால், புல்லட் ரயிலை தொடர்ந்து, சூப்பர் புல்லட் ரயில் கனவுக்கும் அச்சாரம் போடப்படுகிறது.

மணிக்கு 1,124 கிமீ வேகத்தில் செல்லும் ஹைப்பர்லூப் ரயிலை உருவாக்கி வரும் அமெரிக்காவின் ஹைப்பர்லூப் டிரான்ஸ்போர்ட் டெக்னாலஜி நிறுவனம் மற்றும் க்வாட்ராலேவ் ரயில் நிறுவனங்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்பெயின் நாட்டின் டால்கோ நிறுவனம், ஜப்பானை சேர்ந்த ஆர்டிஆர்ஐ, ஜெர்மனியை சேர்ந்த சீமென்ஸ் மற்றும் நார் பிரெம்மிஸ், சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த புரோஸ் உள்பட உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த ரயில் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புயல்வேக ரயில் திட்டத்திற்கான தயாரிப்பு, கட்டுமானம், இயக்குதல், பராமரிப்பு போன்ற பணிகளை செய்து தருவதற்கான திட்ட மாதிரியை வரும் 6ந் தேதிக்குள் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சமர்ப்பிக்கவும் ரயில்வே துறை கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், இதற்கு பல வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வம் தெரிவித்துள்ளன.

சூப்பர் புல்லட் ரயிலுக்கான திட்டங்களை பரிசீலித்து அதில் நமது முதலீட்டிற்கும், நடைமுறைக்கும் ஒத்து வரும் திட்டத்தை ரயில்வே துறை பரிசீலித்து தேர்வு செய்யும். அதன்பிறகு, சூப்பர் புல்லட் ரயிலை இயக்குவதற்கான ஆயத்த நடவடிக்கைகள் துவங்கும்.

தற்போது உலகிலேயே அதிவேக சூப்பர் புல்லட் ரயிலான ஷாங்காய் மாக்லேவ் ரயில் இயக்கப்படுகிறது. சக்கரங்கள் இல்லாமல் காந்த விசையில் தண்டவாளத்திலிருந்து சில மிமீ இடைவெளியில் செல்லும்

 

 

ஷாங்காய் மாக்லேவ் ரயில் மணிக்கு 430 கிமீ வேகத்தில் இயக்கப்படுகிறது. இதற்கடுத்து, சீனாவின் ஹார்மோனி சிஆர்எச் 380ஏ புல்லட் ரயில் மணிக்கு 380 கிமீ வேகம் வரை இயக்கப்படுகிறது.

 

 

இந்த நிலையில், மணிக்கு 500 கிமீ வேகத்தில் ரயில்களை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து சூப்பர் புல்லட் ரயிலை விரைந்து கொண்டு வர மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

 

 

உலகிலேயே அதிக வேகத்தில் பயணிக்கும் டாப் 10 புல்லட் ரயில்கள் பற்றிய சிறப்புத் தகவல்களை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

 

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Indian Railways is looking to explore technologies that will help it run trains at a top speed of 500km/h.
Please Wait while comments are loading...

Latest Photos