அந்தமான்-நிகோபர் தீவுகளில் ரயில் போக்குவரத்து?

Written By:

முதல்முறையாக அந்தமான்- நிகோபர் தீவுகளில் ரயில் போக்குவரத்து அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த அந்தமான்- நிகோபர் தீவுகளில் ரயில் போக்குவரத்து துவங்கப்பட்டால், அந்த தீவுகளின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளை இணைக்கும் விதத்தில் இந்த ரயில் போக்குவரத்து துவங்கப்பட மத்திய ரயில்வே அமைச்சகம் திட்டம் வகுத்துள்ளது. அந்தமான் தீவில் உள்ள தலைநகர் போர்ட்பிளேயரிலிருந்து நிகோபர் தீவில் உள்ள திக்லிபூர் வரை இந்த ரயில் போக்குவரத்து கட்டமைப்பு உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 240 கிமீ தூரத்துக்கு இந்த ரயில் போக்குவரத்து கட்டமைப்பு அமைக்கப்பட உள்ளது. கடற்கரை ஓரமாகவே இந்த ரயில் போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன்மூலமாக, சுற்றுலாப் பயணிகளை இந்த ரயில் போக்குவரத்து வெகுவாக ஈர்க்கும்.

மேலும், அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளிடையே தற்போது விமான சேவை இல்லை. தரை மார்க்கமாக 350 கிமீ தூரத்தை பஸ்களில் கடப்பதற்கு 14 மணிநேரமும், கப்பல் மூலமாக செல்வதற்கு 24 மணிநேரமும் பிடிக்கிறது.

ஆனால், ரயில் பாதை அமைக்கப்பட்டால், மூன்று மணிநேரத்தில் இரண்டு தீவுகளையும் இணைத்துவிட முடியம். இந்த ரயில் சேவை துவங்கப்பட்டால், இந்த பயண நேரம் வெகுவாக குறையும் என்பதுடன், அழகிய அந்தமானை ரசிப்பதில் சுவாரஸ்யம் கூடும்.

இந்த திட்டத்திற்கான 50 சதவீத முதலீட்டை அந்தமான்- நிகோபர் நிர்வாகம் ஏற்க இசைவு தெரிவித்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக மட்டும் இது பார்க்கப்படவில்லை.

பாதுகாப்புத் துறையினருக்கும் இந்த ரயில் பாதை மிகவும் பயன்படும். எனவே, இந்த திட்டத்திற்கு விரைவில் பச்சைக் கொடி காட்டப்படும் என்று உறுதியாக நம்பப்படுகிறது. திக்லிபூர், ரோஸ் தீவுகள் மற்றும் ஸ்மித் தீவுகளிலும் சுற்றுலா மேம்படும்.

இதனிடையே, பழங்குடியினர் வாழும் பகுதிகளை தவிர்த்து, இந்த ரயில் பாதை திட்டத்தை அமைக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளன. மேலும், அந்தமான்-நிகோபர் தீவுகளின் சுற்றுச்சூழலியல் பாதிக்கப்படாமல் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

குறிப்பு: மாதிரி படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

புதிய யமஹா எஃப்இசட்250 பைக்கின் படங்கள்!

சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய யமஹா எஃப்இசட் 250 பைக்கின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Indian Railways Plans To Introduce Rail Service In Andaman and Nicobar.
Please Wait while comments are loading...

Latest Photos