இந்தியாவின் தேஜஸ் போர் விமானத்தை வாங்க வெளிநாடுகள் போட்டா போட்டி!

By Saravana

பல பில்லியன் டாலர்களை கொட்டிக் கொடுத்து ராணுவ தளவாடங்களையும், போர் விமானங்களையும் வாங்கி சேர்த்தது அந்த காலம். தற்போது நவீன ரக போர் விமானங்களை தயாரிப்பதில் இந்தியா கைதேர்ந்த நாடாக மாறி, வல்லரசுகளுக்கு போட்டியாக உருவெடுத்துள்ளது. ஆம், இந்தியாவின் முதல் இலகு ரக போர் விமானமான தேஜஸை வாங்குவதற்கு பல வெளிநாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன.

மேலும், பாகிஸ்தான் கொடுத்த ஆஃபரையும் வேண்டாம் என சொல்லி, இந்தியாவின் தேஜஸ் விமானத்தை வாங்குவதற்கு இலங்கை விருப்பம் தெரிவித்துள்ளது. நம் நாட்டின் தொழில்நுட்ப வல்லமை மட்டுமல்ல, வர்த்தகத்திலும் தேஜஸ் போர் விமானம் மிக முக்கிய இடத்தை விரைவில் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் மேற்கத்திய நாடுகளின் போர் விமான வர்த்தகத்தை பெரிதும் பாதிக்கும் என்பதால், அவை கவலை கொண்டிருப்பதாக ராணுவ புலனாய்வு நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

திட்டத் துவக்கம்

திட்டத் துவக்கம்

நீண்டகாலமாக இந்திய விமானப்படையில் பணியாற்றி வரும், மிக்-21 போர் விமானங்களுக்கு மாற்றாக, புதிய விமானத்தை தயாரிக்க இந்தியா திட்டமிட்டது. 1983ம் ஆண்டு இதற்கான திட்டம் துவங்கப்பட்டு பல்வேறு தாமதங்களுக்கு பின் தற்போது விமானப்படை சேவைக்கு தயாராகி வருகிறது தேஜஸ் போர் விமானம்.

ரகம்

ரகம்

Light combat aircraft[LCA] என்ற இலகு வகையில் தயாரிக்கப்பட்ட நவீன வகை போர் விமானம்தான் தேஜஸ். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த விமானத்தை வடிவமைக்கும் பணிகள் நடந்தன.

பெங்களூரில் உருவாக்கம்

பெங்களூரில் உருவாக்கம்

பெங்களூரிலுள்ள விமான மேம்பாட்டு நிறுவனமும்[ADA], ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனமும் இணைந்து உருவாக்கின. வடிவமைப்பு, தொழில்நுட்ப பணிகளை ADAவும், உற்பத்தி பணிகளை இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனமும் மேற்கொண்டுள்ளன.

மேம்பாட்டு பணிகள்

மேம்பாட்டு பணிகள்

தற்போது தேஜஸ் விமானம் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு உட்படுத்ப்பட்டு, விமானப்படையில் சேர்ப்பதற்கான அனுமதியை பெற்றுவிட்டது. இந்த நிலையில், தேஜஸ் விமானத்தில் உள்ள சிறு குறைபாடுகளையும் களைந்து இன்னும் நவீனப்படுத்தம் முயற்சிகளும் நடந்து வருகின்றன. இந்த தேஜஸ் விமானம் மார்க்-2 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படுகிறது.

நவீன விமானம்

நவீன விமானம்

உலகிலேயே குறைந்த எடையுடைய சிறிய ரக பன்னோக்கு திறன் படைத்த போர் விமானம் தேஜஸ். உலகில் பயன்பாட்டில் உள்ள சில நவீன ரக விமானங்களுக்கு இணையான அல்லது அதற்கு மேற்பட்ட சிறப்பம்சங்களை கொண்ட போர் விமானமாக கருதப்படுகிறது.

யூ-டர்ன்

யூ-டர்ன்

தேஜஸ் விமானத்தின் குறைபாடுகளை காரணம் காட்டி, வெளிநாட்டிலிருந்து போர் விமானங்களை வாங்குவதற்கு விமானப்படை திட்டமிட்டது. ஆனால், பிரான்ஸ் நாட்டின் ரஃபேல் போர் விமானத்தை வாங்குவதற்கான முயற்சியின்போது, அதன் விலையும், பராமரிப்பு செலவையும் கண்டு அரண்டு போன மத்திய அரசு, தேஜஸ் போர் விமானத்தையே கையகப்படுத்த முடிவு செய்தது.

ஆர்டர்

ஆர்டர்

விமானப்படைக்காக முதல் கட்டமாக 120 தேஜஸ் போர் விமானங்களை டெலிவிரி தருமாறு எச்ஏஎல் நிறுவனத்துக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில், தேஜஸ் போர் விமானத்தை வாங்குவதற்கு பல வெளிநாடுகளும் ஆர்வம் காட்டியுள்ளன.

இலங்கை ஆர்வம்

இலங்கை ஆர்வம்

இலங்கை, எகிப்து ஆகிய நாடுகள் தேஜஸ் போர் விமானத்தை வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன. மேலும், சீனாவிலிருந்து லைசென்ஸ் பெற்று தயாரிக்கப்பட்ட மிக்-21 போர் விமானத்திற்கு ஓய்வு கொடுப்பதற்காக 18 முதல் 24 புதிய போர் விமானங்களை சேர்க்க இலங்கை விமானப்படை திட்டமிட்டிருக்கிறது. இதற்கு, தேஜஸ் பொருத்தமாக இருக்கும் என இலங்கை விமானப்படை கருதுகிறது.

நூல் விட்ட பாக்...

நூல் விட்ட பாக்...

தேஜஸ் விமானத்திற்கு போட்டியாக சீனாவுடன் இணைந்து பாகிஸ்தான் தயாரித்திருக்கும் போர் விமானம் ஜேஎஃப்-17 என்பது உங்களுக்கு தெரிந்ததுதான். இந்த விமானத்தை வாங்கிக் கொள்ளுமாறு பாகிஸ்தான் கொடுத்த ஆஃபரையும் உதறிவிட்டு, இந்தியாவின் தேஜஸ் போர் விமானத்தை வாங்கும் முனைப்பில் உள்ளது இலங்கை. ஆனால், டெலிவிரி கொடுக்கும் காலத்தை பொறுத்தே, இந்த டீல் அமையும்.

க்யூ கட்டும் நாடுகள்

க்யூ கட்டும் நாடுகள்

மற்றொரு புறம் எகிப்து நாடும் தேஜஸ் விமானத்தை வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 24 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு அந்நாடு ஒப்பந்தம் செய்த நிலையில், புதிதாக தேஜஸ் விமானத்தை வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளன. இந்த இரு நாடுகளும் தற்போதைய தேஜஸ் மாடலையே வாங்குவதற்கும் விருப்பம் தெரிவித்துள்ளன. இதுதவிர, வேறு சில நாடுகளும் விருப்பம் தெரிவித்துள்ளதாக இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் தெரிவிக்கிறது.

காரணம் என்ன?

காரணம் என்ன?

உலகிலேயே மிக குறைவான விலை கொண்ட அதி செயல்திறன் மிக்க நவீன வகை போர் விமான மாடலாக தேஜஸ் கருதப்படுகிறது. விலை, பராமரிப்பு போன்றவை மிக குறைவாக இருக்கும் என்பதால், தேஜஸ் மீது வெளிநாட்டு நிறுவனங்கள் மோகம் கொள்வதற்கான காரணமாக அமைந்துள்ளது.

டெலிவிரி திட்டம்

டெலிவிரி திட்டம்

தற்போதையே தேஜஸ் விமானத்தில் 40 மாறுதல்களை செய்து உடனடியாக விமானப்படையில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மாறுதல்களுடன் கூடிய 6 தேஜஸ் விமானங்களை விமானப்படைக்கு டெலிவிரி கொடுக்க ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் முடிவு செய்துள்ளது. ஆண்டுக்கு 8 முதல் 16 தேஜஸ் போர் விமானங்களை உற்பத்தி செய்யவும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தனியார் ஒத்துழைப்பு

தனியார் ஒத்துழைப்பு

ஒருவேளை ஆர்டர் குவிந்துவிட்டால், உற்பத்தி நெருக்கடியை சமாளிக்க அதிரடி திட்டம் ஒன்று உள்ளது. அதாவது, டாடா உள்ளிட்ட தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் அதிக அளவில் தேஜஸ் போர் விமானத்தை உற்பத்தி செய்ய ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் திட்டமிட்டுள்ளது. தேஜஸ் விமானத்தை டாடா போன்ற தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் உற்பத்தி செய்வதற்கான அனுமதியையும் மத்திய அரசிடம் இருந்து ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் பெற்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னுரிமை

முன்னுரிமை

வெளிநாடுகள் பலவும் தேஜஸ் போர் விமானத்தை வாங்க முட்டி மோதி வரும் நிலையில், இந்திய விமானப்படை மற்றும் கடற்படைக்கு தேஜஸ் போர் விமானங்களை வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதலாவது தேஜஸ் படைப்பிரிவு

முதலாவது தேஜஸ் படைப்பிரிவு

கோவையிலுள்ள சூலூர் விமானப்படை தளத்தில்தான் தேஜஸ் போர் விமானங்கள் அடங்கிய முதலாவது படைப்பிரிவு அமைக்கப்பட உள்ளது. 45 ஸ்குவாட்ரான் என்ற பெயரில் இந்த விமானப்படை பிரிவு அமைக்கப்படுகிறுத. இதற்காக, 4 போர் விமானங்கள் முதல்கட்டமாக சேர்க்கப்பட்டு, பயிற்சி பணிகளுக்காக பயன்படுத்தப்பட உள்ளது. அடுத்த ஆண்டு இந்த போர் விமானப் படைப்பிரிவு செயல்பட துவங்கும்.

தேவை

தேவை

இந்திய விமானப்படைக்கு தற்போது 200 ஒற்றை இருக்கை கொண்ட போர் விமானங்களும், 20 இரட்டை இருக்கை கொண்ட போர் விமானங்களும் தேவைப்படுகின்றன. அதேபோன்று, இந்திய கடற்படைக்கு 40 போர் விமானங்கள் தேவைப்படுகின்றன. இதன்பின்னரே, வெளிநாடுகள் பற்றி யோசிக்க முடியும்.

பெரும் வர்த்தகம்

பெரும் வர்த்தகம்

உலகின் பல நாடுகளின் பொருளாதாரத்தில் போர் விமான விற்பனை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, சில ஆண்டுகளுக்கு பின்னர், தேஜஸ் போர் விமானங்களை விற்பனை செய்யத் துவங்கினால், பெரும் லாபம் கொழிக்கும் வர்த்தகமாக அமையும் என கருதப்படுகிறது.

மேற்கத்திய நாடுகள் கவலை

மேற்கத்திய நாடுகள் கவலை

போர் விமான தயாரிப்பிலும், விற்பனையிலும் மேற்கத்திய நாடுகள்தான் கோலோய்ச்சி வருகின்றன. எதிர்காலத்தில் மேற்கத்திய நாடுகளின் போர் விமான வர்த்தகத்தை தேஜஸ் படுக்க செய்துவிடும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இதனால், தேஜஸ் போர் விமானம் மேற்கத்திய நாடுகளை கவலை கொள்ள செய்துள்ளது.

 எப்படி?

எப்படி?

உதாரணத்திற்கு, ரஃபேல் போர் விமானத்தை இறக்குமதி செய்யும்போது, ஒரு விமானத்தின் விலை ரூ.1,000 கோடியை தாண்டும். அதன்பின், ராயல்டி, பராமரிப்பு செலவு என இதர இத்யாதிகளை பார்க்கும்போது விலை எகிறி நிற்கும். மேலும், அவர்கள் சொன்னதை கொடுத்து வாங்கும் நிலைதான் இருக்கிறது.

மிக குறைவான விலை

மிக குறைவான விலை

அதேநேரத்தில், இந்தியாவின் தேஜஸ் விமானத்தின் உற்பத்தி செய்து இந்திய விமானப்படையிடம் கொடுக்கும்போது ரூ.200 கோடி அல்லது அதற்கும் குறைவாக இருக்கும். ஏற்றுமதி செய்தால்கூட, பிற நாடுகளைவிட பன்மடங்கு விலை குறைவாக இருப்பதோடு, நவீன அம்சங்கள் பொருத்தியதாக விஞ்சி நிற்கிறது தேஜஸ்.

தேஜஸ் போர் விமானத்தின் சிறப்புகளை அலசும் சிறப்பு கட்டுரை!

தேஜஸ் போர் விமானத்தின் சிறப்புகளை அலசும் சிறப்பு கட்டுரை!

Most Read Articles
மேலும்... #ராணுவம் #military
English summary
Indian Tejas jet's success leaves Western arms Traders Worried.
Story first published: Thursday, April 28, 2016, 13:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X