சோலார் ரயில் போக்குவரத்து டெல்லியில் அறிமுகம்: சுற்றுச்சூழலை பாதுகாக்க முதல் விதையை விதைத்து இந்தியா

Written By:

இந்தியன் ரயில்வே நிர்வாகம் நாட்டின் முதல் சோலார் ரயிலை, டெல்லியில் அறிமுகம் செய்து வைத்தது. இதில் ரயில்வே மத்திய அமைச்சர் சுரேஷ் பாபு பங்கேற்று ரயில்போக்குவரத்தை தொடங்கிவைத்தார்.

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, சூரிய மின்சக்தி மூலம் இயங்கும் சோலார் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

டீசல் மற்றும் மின்சார பயன்பாட்டை குறைக்கவும், சுற்றுசூழலை காக்கும் வகையில் சோலார் ரயில்களின் பயன்பாடு இருக்கும் என அமைச்சர் சுரேஷ் பாபு அப்போது தெரிவித்தார்.

இதனிடையே சூரிய மின்சக்தி கொண்டு இயங்கும் நாட்டின் முதல் சோலார் ரயில், டெல்லியில் உள்ள சாஃபர்டாஜுங் ரயில் நிலையத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

6 பெட்டிகளை கொண்ட இந்த ரயில், டீசல் மற்றும் மின்சாரத்தால் இயங்கும் ஆற்றல் பெற்றவை என இந்தியன் ரயில்வே நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.

ரயில் எஞ்சினுடன் இணைக்கப்பட்டுள்ள 6 பெட்டிகள் மீது 16 சூரிய மின் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளது.

அதன் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை ரயிலில் உள்ள விளக்குகள், மின் விசிறி ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படும்.

சோலார் ரயிலில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின் தகடுகள் அனைத்தும் மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்தியாவிலேயே ரூ.54 லட்சம் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளன.

சூரிய சக்தியின் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை வைத்து சுமார் 72 மணி நேரம் வரை ரயிலை இயக்கலாம் என இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தற்போது சிறியளவிலான தொலைவில் இயக்கப்படும் இந்த ரயிலின் பயன்பாட்டினை வைத்து, இன்னும் பல சோலார் ரயில்களை மத்திய அரசு உருவாக்கவுள்ளது.

நாடு முழுவதும் விரைவில் 50 பெட்டிகள் என்ற எண்ணிக்கையில் சோலார் ரயில் போக்குவரத்தை   அறிமுகப்படுத்தும் திட்டம் இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் உள்ளது.

மத்திய பட்ஜெட்டின் போது ரயில்வே அமைச்சர் சுரேஷ் பாபு, இன்னும் 5 வருடங்களில் 1000 மெகா வாட் மின்சாரத்தை வழங்கும் சோலார் ரயில்கள் தயாரிக்கப்படும் என அறிவித்தார்.

ரயில்வே ஆணையத்திற்கான மாற்று எரிசக்தி தயாரிக்கும் துறையின் தலைமை நிர்வாக அதிகாரி ரவிந்தர் குப்தா சோலார் ரயில்கள் தயாரிப்பை குறித்து கூறும்போது,

"சூரிய மின்சகதி திறன் கொண்டு இயங்கும் ரயில்கள் அல்லது மின்சார, டீசல் கூட்டமைப்பில் இயங்கும் ரயில்கள் இந்தியாவில் அறிமுகமானால் தற்போதைய செலவீனங்களை விட ரூ. 700 கோடி வரை இந்தியன் ரயில்வே சேமிக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.

சோலார் ரயில்கள் போக்குவரத்து வெற்றி அடைந்தால் 25 ஆண்டுகளில் சுமார் 5.25 லட்சம் லிட்டர் டீசல் தேவை மிச்சமாகும். ஒவ்வொரு ரயிலிற்கும் இந்திய ரயில்வே நிர்வாகம் ரூ.3 கோடி வரை சேமிக்கலாம்.

25 ஆண்டுகளில் ரயில்வே போக்குவரத்தால் 1,350 டன் நச்சுவாயு கார்பண்டை ஆக்ஸைடுடன் கலப்பது தடுக்கப்படும் எனவும் தலைமை நிர்வாக அதிகாரி ரவிந்தர் குப்தா கூறுகிறார்.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: India's First Solar Power Train With Six Coaches Launched in Delhi. Click for the Details...
Story first published: Saturday, July 15, 2017, 11:10 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos