விமானங்களுக்கான இந்தியாவின் புதிய நேவிகேஷன் சிஸ்டம்... தாமதம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது...!!

By Saravana Rajan

ஒரே வான்பகுதியில் பல விமானங்களை பாதுகாப்பாக இயக்குவதற்கும், தரையிறக்குவதற்கும் அதிசிறந்த புதிய நேவிகேஷன் சிஸ்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவும், மத்திய விமான போக்குவரத்து ஒழுங்குமுறை கட்டுப்பாட்டு ஆணையமும் இணைந்து உருவாக்கியிருக்கின்றன.

இந்த புதிய நேவிகேஷன் சிஸ்டம் விமானங்களின் பாதுகாப்பை பன்மடங்கு உறுதி செய்வதுடன், விமானங்கள் தாமதமாவதையும் தவிர்க்கும். இந்த புதிய நேவிகேஷன் சிஸ்டம் பற்றிய கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

ஜிபிஎஸ் சிஸ்டம்

ஜிபிஎஸ் சிஸ்டம்

தற்போது அமெரிக்காவின் ஜிபிஎஸ் நேவிகேஷன் சிஸ்டத்தின் அடிப்படையில்தான் விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், இந்த ஜிபிஎஸ் மூலமாக ஒரே வான்பகுதியில் இரண்டு விமானங்களை மட்டுமே இயக்க முடியும்.

ககன் நேவிகேஷன் சிஸ்டம்

ககன் நேவிகேஷன் சிஸ்டம்

இந்திய விமான போக்குவரத்து ஒழுங்குமுறை கட்டுப்பாட்டு ஆணையமும், இஸ்ரோவும் இணைந்து உருவாக்கியிருக்கும் புதிய நேவிகேஷன் சிஸ்டத்தை பொருத்தினால், ஒரே வான் பகுதியில் 50 விமானங்கள் வரை பாதுகாப்பாக இயக்க முடியும்.

இடைவெளி

இடைவெளி

ஜிபிஎஸ் மூலமாக இயக்கப்படும் விமானங்கள் 18 கிமீ இடைவெளியில் விமானங்களை இயக்க விதி இருக்கிறது. ஆனால், நம் நாட்டிலேயே உருவாக்கப்பட்டிருக்கும் ககன் நேவிகேஷன் சிஸ்டம் மூலமாக 356 மீட்டர் இடைவெளியில் விமானங்களை இயக்க சாத்தியம் உண்டு.

முதலீடு

முதலீடு

ரூ.774 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ககன் நேவிகேஷன் சிஸ்டத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்ட்டு இருக்கின்றன. அடுத்த ஒரு சில ஆண்டுகளில் அனைத்து உள்நாட்டு விமானங்களிலும் இந்த நேவிகேஷன் சிஸ்டத்தில் இயங்கும் கருவியை பொருத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

செலவு

செலவு

ஒரு விமானத்தில் ககன் நேவிகேஷன் சிஸ்டத்தில் இயக்குவதற்கன ரிசீவரை பொருத்துவதற்கு ரூ.2 கோடி செலவாகுமாம். எனவே, இந்த புதிய நேவிகேஷன் சிஸ்டத்தை பொருத்துவதில் விமான நிறுவனங்கள் ஆர்வம் காட்டாமல் இருக்கின்றன.

அனுகூலங்கள்

அனுகூலங்கள்

விமானத்தின் பறக்கும் உயரம், இதர விமானங்கள் குறித்த எச்சரிக்கை உள்ளிட்ட பல தகவல்களை இந்த ககன் நேவிகேஷன் துல்லியமாக தரும். மேலும், தரையிறங்குவதற்கான விசேஷ கருவிகள் இல்லாத சாதாரண விமான நிலையங்களில் கூட விமானங்களை எளிதாக தரையிறக்க இந்த ககன் நேவிகேஷன் துணைபுரியும்.

தாமதம்..

தாமதம்..

தற்போது பரபரப்பான விமான நிலையங்களில் விமானங்களை தரையிறக்குவதற்கு அதிக கால தாமதம் ஏற்படுகிறது. மேலும், வானிலேயை வட்டமடிப்பதால் எரிபொருள் விரயமும் ஏற்படுகிறது. இவை இரண்டையும் ககன் நேவிகேஷன் சிஸ்டம் மூலமாக தவிர்க்க முடியும்.

 இலக்கு

இலக்கு

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் அனைத்து விமானங்களிலும் ககன் ரிசீவரை பொருத்த கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அந்த காலக்கெடு 2019ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பரபரப்பான விமான நிலையங்கள்

பரபரப்பான விமான நிலையங்கள்

டெல்லி, மும்பை உள்ளிட்ட பரபரப்பு மிகுந்த விமான நிலையங்களில், குறைவான இடைவெளியில் விமானங்களை இயக்குவதால் பல்வேறு அனுகூலங்கள் கிடைக்கும். பரபரப்பான சமயங்களில் அதிக நேரம் வானிலேயே வட்டமடிக்கும் நிலை தவிர்க்கப்படும்.

கட்டுப்பாட்டு மையங்கள்

கட்டுப்பாட்டு மையங்கள்

ஜிசாட் 8 மற்றும் ஜிசாட்10 செயற்கைகோள்கள் மூலமாக ககன் நேவிகேஷன் சிஸ்டம் செயல்படும். இதற்காக, நாடு முழுவதும் 15 இடங்களில் சிக்னல்களை பெறும் மையங்கள் நிறுவப்படும். அவை பெங்களூரில் இருக்கும் 2 கட்டுப்பாட்டு மையங்கள் மூலமாக கட்டுப்படுத்தப்படும். பெங்களூரில் இருக்கும் கட்டுப்பாட்டு மையங்கள் செயலிழந்தால், டெல்லியில் இருக்கும் மாற்று கட்டுப்பாட்டு மையம் மூலமாக கட்டுப்படுத்தப்படும்.

இந்தியாவின் சொந்த ஜிபிஎஸ் சிஸ்டம் தயார்: சோதனைக்கு பிறகு அனுமதி!

இந்தியாவின் சொந்த ஜிபிஎஸ் சிஸ்டம் தயார்: சோதனைக்கு பிறகு அனுமதி!

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
India's own Gagan navigation system to ease landing in airports.
Story first published: Monday, August 22, 2016, 13:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X