தரையிலும், கடலிலும் தரையிறங்கும் போர் விமானத்தை வாங்கும் இந்தியா!

கடலிலும், தரையிலும் தரையிறங்கும் நவீன ரக போர் விமானத்தை ஜப்பானிடமிருந்து இந்தியா வாங்குகிறது. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் பிற நாடுகளுக்கு ராணுவ தளவாடங்களை விற்பனை செய்வதற்கு ஜப்பான் அரசு தடை விதித்திருந்தது. அந்த தடையை விலக்கிக் கொண்டு இந்தியாவுக்கு ராணுவ தளவாடங்களை விற்பனை செய்ய ஜப்பான் முன்வந்துள்ளது.

அதன்படி, யுஎஸ்-2 என்ற நவீன ரக போர் விமானத்தை இந்தியாவுக்கு வழங்க ஜப்பான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சமீபத்தில் ஜப்பானில் சுற்றுப்பயணம் செய்த பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு பிரதமரை சந்தித்தப்போது இந்த போர் விமானத்தை வாங்குவதற்கான முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த புதிய போர் விமானம் பற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

கூடுதல் விபரங்கள்

கூடுதல் விபரங்கள்

பல விசேஷ அம்சங்களை கொண்ட நவீன ரக யுஎஸ்-2 என்ற அந்த போர் விமானம் பற்றிய கூடுதல் சிறப்புத் தகவல்களையும், படங்களையும் அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

தயாரிப்பு நிறுவனம்

தயாரிப்பு நிறுவனம்

ஜப்பானை சேர்ந்த சின்மேவா நிறுவனத்தின் தயாரிப்பான யுஎஸ்-2 என்ற நவீன ரக போர் விமானத்தை இந்தியாவுக்கு வழங்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

ஓடுபாதை தேவையில்லை

ஓடுபாதை தேவையில்லை

ஓடுதளம் இல்லாத பகுதியிலும் தரையிறங்கும் வசதி கொண்டது. மேலும், கடலிலும், தரையிலும் இந்த விமானத்தை தரையிறக்க முடியும்.

ரேஞ்ச்

ரேஞ்ச்

இந்த போர் விமானத்தில் ஒருமுறை முழுமையாக எரிபொருள் நிரப்பினால் 4,500 கிமீ வரை பயணிக்கும்.

 எடை சுமக்கும் திறன்

எடை சுமக்கும் திறன்

இந்த விமானத்தில் 30 வரை பயணிக்க முடியும் என்பதோடு, 18 டன் எடையையும் எடுத்துச் செல்ல முடியும்.

மோசமான வானிலை

மோசமான வானிலை

மோசமான வானிலையிலும் கூட தரையிறக்க முடியும். குறிப்பாக, கடல்காற்று 40 கிமீ வேகத்தில் வீசும்போதும் இதனை சுலபமாக தரையிறக்க முடியும்.

பயன்பாடு

பயன்பாடு

அந்தமான், லட்சத்தீவுகள் பகுதியின் கடலோர பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணிகளில் இந்த விமானத்தை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 மேட் இன் இந்தியா

மேட் இன் இந்தியா

பிரதமர் மோடியின் இந்தியா மேக் என்ற தாரக மந்திரம் போன்றே இந்த புதிய ரக விமானம் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்பட உள்ளது. இதற்கான தொழில்நுட்பம் மற்றும் முதலீடுகளையும் ஜப்பான் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தம்

ஒப்பந்தம்

ஜப்பானுடன் போடப்பட்டிருக்கும் சமீபத்திய ராணுவ வர்த்தக ஒப்பந்தத்தின்படி, மேலும் 6 போர் விமானங்களையும், சில முக்கிய ராணுவ தளவாடங்களையும் இந்தியா வாங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Photo Credit:ShinMaywa

Most Read Articles
English summary
India is set to become the first country since World War Two to buy a military aircraft from Japan, helping Prime Minister Shinzo Abe dismantle a ban on weapons exports that has kept his country's defence contractors out of foreign markets. The two countries are in broad agreement on a deal for the ShinMaywa Industries (7224.T) amphibious aircraft, which could amount to as much as $1.65 billion, Indian officials said.. It will be assembled in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X