டைட்டானிக் 2 ஆடம்பர கப்பலின் சிறப்பு தகவல்கள்: பகுதி- 2

உலக மக்களின் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்த டைட்டானிக் கப்பலின் மாதிரியிலேயே டைட்டானிக்- 2 என்ற புதிய சொகுசு கப்பல் உருவாக்கப்பட்டு வரும் செய்தியையும், படங்களையும் சமீபத்தில் வெளியிட்டிருந்தோம்.

இந்தநிலையில், புதிய டைட்டானிக் கப்பல் குறித்த பல சுவையான மற்றும் கூடுதல் தகவல்களை இன்றைய செய்தித் தொகுப்பில் வழங்குகிறோம்.

ஆஸ்திரேலிய பில்லியனர்

ஆஸ்திரேலிய பில்லியனர்

ஆஸ்திரேலியாவை சேர்ந்த சுரங்க அதிபரான கிளைவ் பால்மர் தனது புளூ ஸ்டார் லைன் கப்பல் நிறுவனத்திற்காக இந்த புதிய டைட்டானிக் கப்பலை உருவாக்கி வருகிறார். கடந்த 2012ம் ஆண்டு டைட்டானிக் கப்பல் மூழ்கி நூறாண்டுகள் ஆனதை நினைவு கூறும் வகையில், இந்த புதிய டைட்டானிக்-2 கப்பல் திட்டத்தை அறிவித்தார் கிளைவ் பால்மர்.

டிசைன்

டிசைன்

புதிய டைட்டானிக் -2 கப்பல் தோற்றத்தில் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் போன்றே இருக்கும். தவிர, உள்ளலங்காரம் போன்றவையும் பழைய டைட்டானிக் கப்பலை ஒத்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

104 ஆண்டுகளுக்கு பின்னர்...

104 ஆண்டுகளுக்கு பின்னர்...

ஆர்எம்எஸ் டைட்டானிக் சென்ற அதே பாதையில் வரும் 2016ம் ஆண்டில் தனது முதல் பயணத்தை டைட்டானிக் -2 ஆடம்பர கப்பல் துவங்க இருக்கிறது. 104 ஆண்டுகளுக்கு பின்னர் பழைய டைட்டானிக் கப்பல் சென்ற பாதையில் இங்கிலாந்தின் சவுத்தம்டன் நகரிலிருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு இந்த புதிய கப்பல் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேட் இன் சைனா

மேட் இன் சைனா

இந்த புதிய டைட்டானிக்- 2 கப்பல் சீனாவின் சிஎஸ்சி ஜின்லிங் ஷிப்யார்டில் கட்டமைக்கப்பட உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் கப்பல் கட்டும் பணிகள் துவங்கப்பட உள்ளன. மேலும், சீனாவில் உருவாக்கப்பட உள்ள மிகப்பெரிய பயணிகள் கப்பலாகவும் கூறப்படுகிறது. ஸ்வீடனை சேர்ந்த டில்பெர்க் டிசைன் நிறுவனம் கட்டுமான வடிவமைப்பை செய்து தர உள்ளது. லாயிட் நிறுவனம் கப்பலின் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் டிசைனுக்கான ஆய்வு மற்றும் ஆலோசனைகளை தரும்.

மதுவும் பழசுதான்...

மதுவும் பழசுதான்...

இந்த கப்பலில் செல்ல இருக்கும் பயணிகளுக்கு பழைய டைட்டானிக் கப்பல் மூழ்கிய காலத்தில் பிரபலமாக இருந்த டிசைனிலான ஆடைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிரவும், பழைய கப்பலில் கொடுத்த பிராண்டு மதுவகைகள்தான் கொடுக்கப்பட உள்ளதாம்.

சப்ளையர்கள்

சப்ளையர்கள்

மேலும், பழைய டைட்டானிக் கப்பலுக்கு உணவு மற்றும் இதர பொருட்களை சப்ளை செய்தவர்களேயே மீண்டும் நியமிக்க புளூ ஸ்டார் கப்பல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, பல்வேறு சப்ளையர்களுடன் பேச்சுவார்த்தையும், முயற்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

டிவி, இன்டர்நெட்டுக்கு குட்பை

டிவி, இன்டர்நெட்டுக்கு குட்பை

இந்த ஆடம்பர கப்பலில் பயணிப்போருக்கு ஏராளமான வசதிகள் இருக்கும். அதேவேளை, டிவி மற்றும் இன்டர்நெட் வசதி இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மகிழ்ச்சியை பெறுவதற்காக வருவோரின் கவனத்தை டிவி மற்றும் இன்டர்நெட் மூலம் கெடுக்கவோ அல்லது கவனத்தை திசை திருப்பவோ விரும்பவில்லை என்று கிளைவ் பால்மர் கூறியிருக்கிறார்.

மூன்றாம் வகுப்பு

மூன்றாம் வகுப்பு

புதிய டைட்டானிக்-2 கப்பல் பழைய கப்பலின் மாதிரியாக கொண்டே கட்டப்படுகிறது. அதேவேளை, மூன்றாம் வகுப்பு அறைகளின் டிசைனில் சில மாற்றங்களுடன் நவீனத்துவம் மிக்கதாக மாற்றுவதற்கு புளூ ஸ்டார் லைன் கப்பல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பயணிக்க ஆர்வம்

பயணிக்க ஆர்வம்

புதிய டைட்டானிக் - 2 கப்பலில் பயணிக்க உலக அளவிலிருந்து ஏராளமானோர் ஆர்வம் காட்டி வருவதாக புளூ ஸ்டார் லைன் கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவரை 40,000 பேர் கப்பலில் பயணிப்பதற்காக விசாரணை செய்துள்ளதாக புளூ ஸ்டார் லைன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிக்கெட் விற்பனை

டிக்கெட் விற்பனை

அடுத்த ஆண்டு துவக்கத்திலிருந்து 2016ம் ஆண்டு துவக்கம் வரையில் டைட்டானிக் - 2 கப்பலுக்கான பயணச் சீட்டு விற்பனை நடைபெறும்.

 டிக்கெட் விலை

டிக்கெட் விலை

பழைய டைட்டானிக் டிக்கெட்டின் அடிப்படையிலேயே, இந்த டைட்டானிக் கப்பலுக்கான டிக்கெட் விலை தற்போதைய பண மதிப்புக்கு மாற்றப்பட்டு நிர்ணயிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், முதல் வகுப்பு டிக்கெட் ஒரு லட்சம் டாலர் வரையிலும், மூன்றாம் வகுப்பு டிக்கெட் 57,000 டாலர் வரையிலும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

 பணியாளர்கள் தேர்வு

பணியாளர்கள் தேர்வு

இந்த கப்பலில் அனைத்து பிரிவுகளிலும் பணியாற்றுவதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை புளூ ஸ்டார் லைன் நிறுவனத்திற்கு அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் கேப்டன் பணியிடத்திற்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக புளூ ஸ்டார் லைன் தெரிவித்துள்ளது. தற்போது பணியாளர்கள் நியமனமும் நடந்து வருகிறதாம்.

மெனு கார்டு ரெடி

மெனு கார்டு ரெடி

டைட்டானிக் -2 கப்பல் பயணிகளுக்கான உணவு பட்டியலை 68 சமையல் கலைஞர்கள் அடங்கிய குழு தயாரித்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த உணவு பொருட்கள் பழைய முறையிலேயே தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளதால், சமையல் கலைஞர்களுக்கு இது ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என்று புளூ ஸ்டார் லைன் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

பழைய டைட்டானிக் கப்பல் மூழ்கியபோது அதில் போதிய எண்ணிக்கையில் உயிர்காக்கும் படகுகள் இல்லை. முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பில் பயணித்தோரில் பெரும்பாலானவர்கள் உயிர் பிழைத்தனர். மூன்றாம் வகுப்பில் பயணித்த 1,500 பேர் வரை நீரில் மூழ்கி மாண்டனர். ஆனால், புதிய டைட்டானிக்-2 கப்பலில் அவசர காலத்தில் பயணிக்கும் அனைவரும் தப்பிக்கும் வகையில், போதிய எண்ணிக்கையில் உயிர்காக்கும் படகுகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X