ஆட்டோமொபைல் உலகின் சுவாரஸ்யமான உண்மைகள்!!

ஆட்டோமொபைல் உலகின் சில வியப்புக்குரிய நிகழ்வுகளையும், அதில் முக்கிய அங்கமான கார்கள் பற்றி அறிந்து கொள்வதிலும் அனைவருக்கும் அலாதி ஆர்வம் இருப்பதுண்டு.

அதிலும், குறிப்பாக கார்களில் இருக்கும் வசதிகள் மற்றும் கார்கள் கடந்து பாதையில் ஏற்பட்ட சுவாரஸ்யமான நிகழ்வுகளை அறிந்து கொள்வதில் ஆர்வம் அதிகமே. கார்களின் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளிலும், ஆட்டோமொபைல் உலகில் நிகழ்ந்த சுவாரஸ்ய தகவல்களையும் இந்த தொகுப்பில் காணலாம்.

முதல் கார்

முதல் கார்

1885ல் ஜெர்மனியை சேர்ந்த கார்ல் பென்ஸ் என்பவர்தான் எஞ்சின் பொருத்தப்பட்ட முதல் காரை கண்டுபிடித்தார்.

முதல் கார் வைப்பர்

முதல் கார் வைப்பர்

அமெரிக்காவை சேர்ந்த மேரி ஆன்டர்சன் என்ற பெண்தான் காருக்கான வைப்பரை கண்டறிந்தவர். 1903ல் இந்த கருவையை உருவாக்கினார்.

முதல் கார் ரேடியோ

முதல் கார் ரேடியோ

1929ல் முதல் கார் ரேடியோவை பால் கெவின் என்பவர் கண்டுபிடித்தார்.

பெரிய்யய.. லிமோசின்

பெரிய்யய.. லிமோசின்

உலகின் மிகப்பெரிய லிமோசின் வாகனம் மிட்நைட் ரைடர். 40 பேர் செல்லும் வசதி கொண்ட இந்த லிமோசின் ரக வாகனத்தில் மூன்று ஓய்வறைகளும், ஒரு பாரும் உண்டு.

ஜீசஸ் பெயரில் லைசென்ஸ்

ஜீசஸ் பெயரில் லைசென்ஸ்

கலிஃபோர்னியாவில் இயேசு கிறிஸ்து பெயரில் 6 பேர் ஓட்டுனர் உரிமம் பெற்றுள்ளனர்.

 டிராஃபிக் ஜாம்

டிராஃபிக் ஜாம்

உலகின் மிக மோசமான போக்குவரத்து நெரிசல் 2010ம் ஆண்டு சீன தலைநகர் பீஜிங்கில் ஏற்பட்டது. 100 கிமீ., நீளத்துக்கு ஏற்பட்ட இந்த போக்குவரத்து நெரிசல் 12 நாட்களுக்கு நீடித்தது.

 உற்பத்தியில் முதலிடம்

உற்பத்தியில் முதலிடம்

உலகின் அதிகம் உற்பத்தி செய்யப்பட்ட கார் மாடல் டொயோட்டா கரொல்லா.

ரோல்ஸ்ராய்ஸ் கோட்டை

ரோல்ஸ்ராய்ஸ் கோட்டை

உலகின் அதிகம் ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் உள்ள நகரம் ஹாங்காங்.

கார் வாஷ்

கார் வாஷ்

காரை பளிச்சென்று வைத்துக் கொள்வதற்காக காரை மாதம் ஒருமுறையாவது கழுவுபவர்களின் எண்ணிக்கை 53 சதவீதமாம். ஒருமுறை கூட கழுவாதவர்களின் எண்ணிக்கை 16 சதவீதமாம்.

சாதனை

சாதனை

2010ல் ஒரு காரில் அமர்ந்து சென்ற சாதனை நிகழ்த்தப்பட்டது. ஸ்மார்ட் காரில் பாகிஸ்தானை சேர்ந்த 19 மாணவியர் சென்று இந்த சாதனையை நிகழ்த்தினர்.

 ஃபெராரி உற்பத்தி

ஃபெராரி உற்பத்தி

ஒரு நாளைக்கு 14 ஃபெராரி கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

அய்யய்யோ..

அய்யய்யோ..

அரிய கண்டுபிடிப்பான ஏர்பேக் எனப்படும் உயிர் காக்கும் காற்றுப்பைகள் 23ல் ஒருவரை பலிவாங்கிவிடுகிறதாம். எதற்கும் ஜாக்கிரதை.

 கடைசி ஆசை?

கடைசி ஆசை?

சூரியனுக்கு கார் மூலம் சென்றடைய 150 ஆண்டுகள் பிடிக்குமாம்.

சிவப்பு அலர்ஜி

சிவப்பு அலர்ஜி

ஷாங்காய் நகரில் சிவப்பு கார்களுக்கு தடை விதிக்கப்பட்டிக்கிறது.

மான் வேட்டை

மான் வேட்டை

வேட்டைக்காரர்கள் கொல்வதைவிட வாகனங்கள் மோதி இறக்கும் மான்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.

 ஆமை வேகம்

ஆமை வேகம்

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 1972ல் கார்கள் செல்லும் வேகம் மணிக்கு 96 கிமீ., ஆக இருந்தது. இதுவே அடுத்த பத்தாண்டுகளில், 1982ம் ஆண்டு 28 கிமீ., ஆக குறைந்தது. இப்போது ஆமை வேகம்தான்.

 ஒன்றுக்கு ஒன்று வீதம்

ஒன்றுக்கு ஒன்று வீதம்

அமெரிக்காவில் குழந்தைகளையும் சேர்த்து ஒருவருக்கு ஒன்று வீதத்தில் கார்கள் இருக்கின்றனவாம்.

அதிக அபராதம்

அதிக அபராதம்

சுவிட்சர்லாந்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி மணிக்கு 289 கிமீ., வேகத்தில் காரை ஓட்டியதற்காக ஒருவருக்கு 1,000,000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. அங்கு ஒருவரின் வருமானத்தின் அடிப்படையில் அபராதம் விதிக்கும் நடைமுறை அமலில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

2 வாரம் காரில்தான்

2 வாரம் காரில்தான்

ஒவ்வொரு அமெரிக்கரும் தன் வாழ்நாளில் 2 வாரங்களை போக்குவரத்து சிக்னல்களில் கழிப்பதாக புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.

 முதல் கார் ரேஸ்

முதல் கார் ரேஸ்

1895ம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள, சிகாகோ நகரில்தான் முதல் கார் ரேஸ் நடந்தது. மணிக்கு சராசரியாக 115 கிமீ வேகத்தில் காரை ஓட்டி இந்த ரேஸில் ஜேம்ஸ் ஃபிராங்க் துர்யா என்பவர் வெற்றி பெற்றார். அதுவும் ஸ்டீயரிங் இல்லாமல் லிவர் மூலம் கட்டுப்படுத்தி இந்த ரேஸில் வென்றார்.

Most Read Articles
English summary
Do you know some interesting facts about auto world and cars. Check out, some interesting facts related to automobile world and cars through pictures. 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X