சிறு நகரங்களுக்கும் சேவை புரிய வரும் டார்னியர் விமானத்தின் சிறப்புகள்!

விமான சேவை இல்லாத நகரங்களுக்கும் விமானங்களை இயக்குவதற்காக டார்னியர் விமானங்களை குத்தைக்கு வாங்க ஏர் இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்த விமானத்தின் சிறப்புகளை காணலாம்.

By Saravana Rajan

இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை மற்றும் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த சிறு நகரங்களுக்கும் விமான சேவையை வழங்குவதற்கான விசேஷ சிட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதுவரை விமான சேவை இல்லாத நகரங்களுக்கும் விமான சேவையை துவங்குவதற்கு இந்த திட்டம் வகை செய்யும்.

யுடிஏஎன் என்று குறிப்பிடப்படும் இந்த திட்டத்தின் கீழ் மிக குறைவான கட்டணத்தில் குறைந்த தூர விமான சேவையை வழங்க வழி ஏற்பட்டுள்ளது. அதாவது, ஒரு மணிநேர பயண இடைவெளி கொண்ட நகரங்களுக்கு இடையில் ரூ.2,500 என்ற கட்டணத்தில் விமான சேவையை வழங்க இந்த திட்டம் வழி செய்திருக்கிறது. இதனால், இந்தியாவின் விமான சேவை மிக பரந்த அளவில் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

 சிறு நகரங்களுக்கும் சேவை புரிய வரும் டார்னியர் விமானத்தின் சிறப்புகள்!

இந்த நிலையில், இந்த திட்டத்தின் கீழ் சிறு நகரங்களுக்கு விமான சேவையை வழங்குவதற்காக ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடமிருந்து 10 டாரனியர் 228 விமானங்களை குத்தகைக்கு வாங்க ஏர் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. விரைவில் உங்கள் நகரத்திலும் இந்த விமானத்தில் பறக்கும் வாய்ப்பு கிட்டலாம்.

 சிறு நகரங்களுக்கும் சேவை புரிய வரும் டார்னியர் விமானத்தின் சிறப்புகள்!

அதற்கு முன்னதாக இந்த டார்னியர் 228 விமானத்தின் சிறப்புகளை இந்த செய்தியில் வழங்கியிருக்கிறோம். தனது கீழ் செயல்படும் அலையன்ஸ் ஏர் நிறுவனம் மூலமாக டார்னியர் 228 விமானங்களை இயக்க முடிவு செய்திருக்கிறது ஏர் இந்தியா.

 சிறு நகரங்களுக்கும் சேவை புரிய வரும் டார்னியர் விமானத்தின் சிறப்புகள்!

யுடிஏஎன் திட்டத்தின் மூலமாக 20 இருக்கைகள், 21 முதல் 80 இருக்கைகள், அதற்கு மேல் இருக்கை எண்ணிக்கை கொண்ட விமானங்கள் என மூன்று வகையான இருக்கை வசதி கொண்ட பிரிவுகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.அதில், 19 பேர் செல்வதற்கு இருக்கை வசதி கொண்ட டார்னியர் 228 விமானத்தையும் சேவையில் இணைக்க உள்ளது ஏர் இந்தியா.

 சிறு நகரங்களுக்கும் சேவை புரிய வரும் டார்னியர் விமானத்தின் சிறப்புகள்!

ஜெர்மனியை சேர்ந்த டார்னியர் நிறுவனத்தின் தயாரிப்பு. கடந்த 1981ம் ஆண்டு இந்த விமானம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆசிய பிராந்தியத்தில் இருந்த சந்தை வாய்ப்பை கருத்தில் கொண்டு, 1983ம் ஆண்டு 125 டார்னியர் விமானங்களை அசெம்பிள் செய்வதற்கான தயாரிப்பு உரிமத்தை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் பெற்றது.

 சிறு நகரங்களுக்கும் சேவை புரிய வரும் டார்னியர் விமானத்தின் சிறப்புகள்!

ஜெர்மனியில் உள்ள ஆலையிலும், கான்பூரில் உள்ள ஆலையிலும் இந்த டார்னியர் 228 விமானம் உற்பத்தி செய்யப்பட்டது. 2009ம் ஆண்டில் மேம்படுத்தப்பட்ட மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

 சிறு நகரங்களுக்கும் சேவை புரிய வரும் டார்னியர் விமானத்தின் சிறப்புகள்!

ஜெர்மனியில் அசெம்பிள் செய்யப்படும் இந்த விமானத்திற்கான உடல்கூடு, இறக்கைகள், வால் பகுதி ஆகியவை கான்பூர் எச்ஏஎல் ஆலையிலிருந்து தயாரித்து அனுப்பப்படுகிறது.

 சிறு நகரங்களுக்கும் சேவை புரிய வரும் டார்னியர் விமானத்தின் சிறப்புகள்!

இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் இந்த விமானம் பயன்பாட்டில் உள்ளது. 19 பயணிகள் செல்வதற்கான வசதி கொண்ட இந்த விமானத்தை இரண்டு பைலட்டுகள் இயக்க முடியும். 3 பணியாளர்கள் இருப்பார்கள்.

 சிறு நகரங்களுக்கும் சேவை புரிய வரும் டார்னியர் விமானத்தின் சிறப்புகள்!

இந்த விமானமானது 16.56 மீட்டர் நீளமும், 16.97மீட்டர் அகலமும், 4.86 மீட்டர் உயரமும் கொண்டது. அதிகபட்சமாக 6,400 கிலோ எடையை சுமந்து கொண்டு மேல் எழும்பும் திறன் படைத்தது.

 சிறு நகரங்களுக்கும் சேவை புரிய வரும் டார்னியர் விமானத்தின் சிறப்புகள்!

இரண்டு எஞ்சின் பொருத்தப்பட்ட இந்த விமானம் அதிகபட்சமாக மணிக்கு 519 கிமீ வேகத்தில் பறக்கும். ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 1,111 கிமீ தூரம் வரை பறக்கும்.

 சிறு நகரங்களுக்கும் சேவை புரிய வரும் டார்னியர் விமானத்தின் சிறப்புகள்!

குறுகிய உடல்கூடு அமைப்பு கொண்ட இந்த விமானத்தில் இருக்கைகள் இரண்டு வரிசையில் தனித்தனியாக இருப்பது பயணிகளுக்கு சவுகரியத்தை தரும்.

 சிறு நகரங்களுக்கும் சேவை புரிய வரும் டார்னியர் விமானத்தின் சிறப்புகள்!
  • உலகின் மிக நீண்ட தூர இடைநில்லா விமானத்தை இயக்கி சாதனை படைத்த ஏர் இந்தியா!
  • நடுவானில் எஞ்சின்கள் செயலிழந்தாலும் விமானம் தொடர்ந்து பறக்கும்... எப்படி தெரியுமா?
  • ஹெலிகாப்டர் போன்று எழும்பும் புதிய பயணிகள் விமானம்... போயிங் நிறுவனம் தீவிரம்!
Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Interesting Facts About Dornier 228 Plane. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X