ரேடார் கண்களில் சிக்காத ஐந்தாம் தலைமுறை தேஜஸ் விமானம்!

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வரும் புதிய தேஜஸ் மார்க்-2 போர் விமானத்தின் சில முக்கிய சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

ரேடார் கண்களில் சிக்காத ஐந்தாம் தலைமுறை அம்சங்கள் கொண்ட 83 தேஜஸ் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் பிரிவு ஒப்புதல் அளித்துள்ளது.

அண்மையில் சொந்த தயாரிப்பில் உருவான ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை சீனா அறிமுகம் செய்திருக்கும் நிலையில், மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சொந்த தயாரிப்பில் ஐந்தாம் தலைமுறை அம்சங்கள் கொண்ட தேஜஸ் போர் விமானத்தை வாங்குவதற்கு ஒப்புதல் அளித்திருப்பது முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இந்த நிலையில், ஐந்தாம் தலைமுறை தேஜஸ் போர் விமானத்தின் சிறப்புகளை இந்த செய்தியில் காணலாம்.

ரேடார் கண்களில் சிக்காத ஐந்தாம் தலைமுறை தேஜஸ் விமானம்!

சீனாவின் ஐந்தாம் தலைமுறை போர் விமானமான ஜே20 நடுத்தர வகையை சேர்ந்தது. ஆனால், இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் இலகு வகையை சேர்ந்தது. இருப்பினும் ரேடார் கண்களில் சிக்காத ஐந்தாம் தலைமுறை அம்சங்களுடன் தேஜஸ் சேர்க்கப்பட இருப்பது இந்தியாவின் எல்லை மற்றும் வான் பாதுகாப்பில் மிக முக்கிய பங்களிப்பை வழங்கும்.

ரேடார் கண்களில் சிக்காத ஐந்தாம் தலைமுறை தேஜஸ் விமானம்!

இந்தியாவின் சொந்த முயற்சியில் உருவாக்கப்பட்ட முதல் இலகு வகை போர் விமான மாடல் தேஜஸ். சமீபத்தில் விமானப்படையில் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இந்த விமானம் நான்காம் தலைமுறை அம்சங்கள் கொண்ட நவீன போர் விமானம்.

ரேடார் கண்களில் சிக்காத ஐந்தாம் தலைமுறை தேஜஸ் விமானம்!

தற்போது மத்திய பாதுகாப்பு கொள்முதல் பிரிவு ஒப்புதல் அளித்திருக்கும் விமான மாடல் தேஜஸ் மார்க்-2. தற்போதைய தேஜஸ் போர் விமானத்தைவிட பன்மடங்கு நவீன சிறப்பம்சங்களை இந்த விமானம் கொண்டதாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.

ரேடார் கண்களில் சிக்காத ஐந்தாம் தலைமுறை தேஜஸ் விமானம்!

குறிப்பாக, எதிரி நாட்டு ரேடார் கண்களில் சிக்காத சிறப்பம்சங்களை மேம்படுத்தப்பட்ட தேஜஸ் மார்க்-2 போர் விமானம் பெற்றிருக்கும். இதனால், இந்தியாவின் பாதுகாப்பில் தேஜஸ் மார்க்-2 விமானத்தின் பங்கு மிக முக்கியமானதாக மாறும்.

ரேடார் கண்களில் சிக்காத ஐந்தாம் தலைமுறை தேஜஸ் விமானம்!

இந்தியாவின் சொந்த தயாரிப்பான காவேரி எஞ்சின் தயாரிப்பு தாமதப்பட்டு வருவதால், தேஜஸ் போர் விமானத்தில் இப்போது ஜிஇ- எஃப்404 எஞ்சின் பொருத்தப்பட்டது. ஆனால், இந்த எஞ்சின் இந்திய விமானப்படையின் எதிர்பார்ப்புகளைவிட குறைவான சக்தி கொண்ட எஞ்சினாக கருதப்படுகிறது.

ரேடார் கண்களில் சிக்காத ஐந்தாம் தலைமுறை தேஜஸ் விமானம்!

இதனால், புதிய தேஜஸ் மார்க்-2 போர் விமானத்தில் சக்திவாய்ந்த ஜிஇ-எஃப்414 ஐஎன்எஸ்6 எஞ்சினை வாங்கி பொருத்த முடிவு செய்யப்பட்டது. மொத்தம் 99 எஞ்சின்களை தேஜஸ் மார்க்-2 போர் விமானத்திற்காக இந்தியா வாங்க இருக்கிறது.

ரேடார் கண்களில் சிக்காத ஐந்தாம் தலைமுறை தேஜஸ் விமானம்!

புதிய எஞ்சினை பொருத்துவதற்கு ஏதுவாக தேஜஸ் மார்க் -1 விமானத்தின் உடல்கூடு அமைப்பில் சிறிய மாற்றங்கள் செய்யப்படுகிறது. அதாவது, புதிய தேஜஸ் மார்க் 2 விமானத்தில் 14.2 மீட்டர் நீளமுடையதாக எஞ்சின் பொருத்துவதற்கான இடவசதி ஒரு மீட்டர் அதிகரிக்கப்படுகிறது.

ரேடார் கண்களில் சிக்காத ஐந்தாம் தலைமுறை தேஜஸ் விமானம்!

மேலும், காற்று உள்வாங்கி அமைப்பும் விரிவாக்கப்படுவதன் மூலமாக, அதிக சக்தியை வெளிப்படுத்தும் திறனை புதிய எஞ்சின் பெற்றிருக்கும். மேலும், பொருட்களுக்கான இடவசதியும் 4,000 லிட்டரிலிருந்து 5,000 லிட்டராக அதிகரிக்கப்படுகிறது.

ரேடார் கண்களில் சிக்காத ஐந்தாம் தலைமுறை தேஜஸ் விமானம்!

தேஜஸ் மார்க் 2 போர் விமானத்தில் புதிய காக்பிட் அமைப்பை பெறுகிறது. ஃப்ளை பை ஒயர் என்ற நவீன மின்னணு கட்டுப்பாட்டு அமைப்பு கொடுக்கப்பட்டிருக்கும். இந்த விமானத்தை பகல், இரவு என எந்த நிலையிலும், எந்த சீதோஷ்ண நிலையிலும் இயக்குவதற்கான விசேஷ கட்டுப்பாட்டு மற்றும் எச்சரிக்கை வசதிகள் கொடுக்கப்பட்டு இருக்கும்.

ரேடார் கண்களில் சிக்காத ஐந்தாம் தலைமுறை தேஜஸ் விமானம்!

விமானம் பறந்துகொண்டிருக்கும்போதே, பைலட்டுக்கு தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்து தரும் கருவி, அனைத்து உயரங்களிலும் சூப்பர்சானிக் வேகத்தில் பறப்பதற்கு துணைபுரியும் வால் அற்ற டெல்டா விங் இறக்கை அமைப்பு போன்றவையும் இந்த விமானத்தின் சிறப்புகளாக இருக்கும்.

ரேடார் கண்களில் சிக்காத ஐந்தாம் தலைமுறை தேஜஸ் விமானம்!

போர் சமயங்களில் தரையிறக்காமலேயே பறப்பதற்கு ஏதுவாக, வானில் இருந்தே வேறு விமானத்தின் மூலமாக எரிபொருள் நிரப்பிக் கொள்ளும் வசதியும் உண்டு.

ரேடார் கண்களில் சிக்காத ஐந்தாம் தலைமுறை தேஜஸ் விமானம்!

இந்த விமானத்தில் வானில் இருந்து வான் இலக்கையும், தரை இலக்கையும் அழிக்கக்கூடிய ஏவுகணைகள் பொருத்தப்பட்டு இருக்கும். அடுத்து 2018ம் ஆண்டு உற்பத்தி துவங்கப்பட இருக்கும் அஸ்த்ரா ஏவுகணைகளையும் தேஜஸ் மார்க்1 மற்றும் மார்க் 1 விமானங்களில் பொருத்தப்பட இருக்கிறது. மொத்தமாக 8 ஏவுகணைகளை பொருத்துவதற்கான கருவிகள் இதில் இருக்கும்.

ரேடார் கண்களில் சிக்காத ஐந்தாம் தலைமுறை தேஜஸ் விமானம்!

தேஜஸ் மார்க்-2 விமானம் அதிகபட்சமாக மணிக்கு 1,975 கிமீ வேகத்தில் பறக்கும். ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 3,000 கிமீ தூரம் வரை பறக்கும்.

ரேடார் கண்களில் சிக்காத ஐந்தாம் தலைமுறை தேஜஸ் விமானம்!

வரும் 2018ம் ஆண்டு தேஜஸ் மார்க்-2 விமானத்தை பறக்கவிட்டு சோதனைகள் செய்யப்படும். 2022ம் ஆண்டில் இந்திய விமானப்படையில் சேர்க்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்
  • ரஃபேல் போர் விமானமும், இந்தியாவுக்கு அதன் அவசியமும்...!!
  • உலகின் டாப்-10 ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள்!
  • இந்திய ராணுவத்தின் முதுகெலும்பாக விளங்கும் 45 ராணுவ வாகனங்கள்!
Most Read Articles
English summary
Interesting Facts About HAL Tejas Mark 2 Fighter Jet.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X