வடகொரியாவை மிரட்டும் அமெரிக்காவின் ‘கார்ல் வின்சன்’ போர்கப்பல்: சிறப்புத் தகவல்கள்

Written By:

வடகொரியாவின் அணு சோதனைகள் குறித்து அமெரிக்கா காத்து வந்த பொறுமை எல்லை மீறி விட்டது. இதனால் அதிபர் டோனால்ட் டிரம்பின் உத்தரவை ஏற்று, அந்நாட்டின் மிகப்பெரிய போர் கப்பலான கார்ல் வின்ஸன் வட கொரியாவை நோக்கி அனுபப்பட்டுள்ளது.

கொரிய தீபகற்பத்தை நோக்கி சென்றுகொண்டுயிருக்கும் கார்ல் வின்ஸன் போர்கப்பலை, ஒரே அடியில் மூழ்கடித்த விட முடியும் என்ற எச்சரிக்கை வடகொரியாவின் நோடாங் ஷின்முன் செய்தித்தாளில் வெளியாகியுள்ளது.

இருநாடுகளுக்கும் போர் உருவாகவுள்ள சூழலில் அமெரிக்காவின் கார்ல் வின்ஸன் போர் கப்பல் வட கொரியாவை நோக்கி பயணம் மேற்கொண்டுயிருப்பது, கொரிய தீபகற்பத்தை சுற்றி பதற்றமடைய செய்துள்ளது.

தற்போது உலகவனம் பெற்றிருக்கும் அமெரிக்காவின் மிகப்பெரிய போர்கப்பலாக உள்ள கார்ல் வின்சனை குறித்த விவரங்கள் இனி...

 

மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பல்களை அமெரிக்காவின் கப்பற்படை சூப்பர்கேரியர் என்ற பெயரில் குறிப்பிடும். சூப்பர்கேரியர் வரிசையில் முதன்மையானதாக உள்ள கார்ல் வின்சனுக்கான கட்டமைப்பு பணிகள்1974ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது.

5 ஆண்டுகள் கட்டமைக்கும் பணிகளுக்கு பிறகு 1980ம் ஆண்டு வெளியிடப்பட்டது. பின், 1982ல் மார்ச் முதல் அமெரிக்க கப்பற்படையோடு கார்ல் வின்சன் இணைக்கப்பட்டது.

அமெரிக்காவின் கப்பற்படைக்கான அதிகாரங்களை உருவாக்கியவர்களில் ஒருவரான கார்ல் வின்சனை நினைவுகூறும் விதமாக இந்த விமானம் தாங்கி கப்பலுக்கு அவரது பெயர் வைக்கப்பட்டது.

வின்ரிஜினியாவின் நியூபோர்ட் நியூ ஷிப்பிள்டிங் என்ற நிறுவனம் கார்ல் வினசன் விமானம் தாங்கி கப்பலை கட்டமைத்தது.

 

அணு ஏவுகணைகள் பொருத்தப்பட்ட விமானங்கள் நிறுத்தப்படக்கூடிய முக்கியமான கப்பல்களில் கார்ல் வின்சனும் ஒன்று. மேலும் அமெரிக்காவின் முக்கிய போர் விமானங்களில் முதன்மையான எஸ்.ஹெச்.60 சீஹாக் ஹெலிகாப்படரை கொண்டு நிறுத்தும் அளவிற்கு இது இடவசதிக்கொண்டது.

ஒருமுறை எரிவாயூ நிரப்பப்பட்டால், கார்ல் வின்சன் கப்பலை தொடர்ந்து 20 ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும். அணு ஆயுதங்களை ஏந்தி செல்ல வேண்டியிருப்பதால், அதிக எரிவாயுவை கொள்ளவு கொண்ட வகையில் திட்டமிட்டு இது தயாரிக்கப்பட்டது.

கப்பலை வேகமாக நகர்த்த 4 ப்ராபலர் ஷாஃப்ட்ஸ்கள் கப்பலில் இடம்பெற்றுள்ளன. இதனால் ஒரு மணி நேரத்தில் 56.3 கிலோ மீட்டர் வேகத்தை சென்றைடையக்கூடிய ஆற்றல் கொண்டது.

1092நீளமும், 252அடி அகலலும் கொண்ட இந்த போர்கப்பலின் உயரம் மட்டும் 41 அடி.

 

இந்த கப்பலின் கம்பீரத்தை பறை சாற்றும் விதமாக, இரண்டு கழுகுகள் சிறகுகளை விரித்துக்கொண்டு, அமெரிக்காவின் தேசியக்கொடியை அலகால் கவ்வியது போன்று கார்ல் வின்சன் கப்பலின் முத்திரை உருவாக்கபப்ட்டது.

லத்தின் மொழியில் கடலுக்கு வலிமை அளிப்பவள் என்ற சொல்லை வைத்து, இந்த அடையாளக்குறி கார்ல் வின்சன் கப்பலுக்காக உருவாக்கப்பட்டது. தங்க நிறத்தில் முத்திரை இருப்பதால், இந்த விமானம் தாங்கி கப்பலை, அமெரிக்க கடற்படையினர் கோல்ட் ஈகிள் (தங்கக் கழுகு) என்றும் குறிப்பிடுவர்.

 

இப்படி ஒரு பிரம்மாண்டமான கார்ல் வின்சன் கப்பலை இயக்க மட்டும் கிட்டத்தட்ட 5680 பேர் தேவைப்படுவர். மேலும் இதில் கப்பல் மற்றும் விமானம் என இருவேறு துறைகளில் பணியாற்றுபவர்களும் இருப்பர்.

விமானப்படையிலிருந்து மட்டும் கார்ல் வின்சன் போர் கப்பலில் கிட்டத்தட்ட 2480 பேர் இடம்பெறுவார்கள்.

வெறும் போர் சூழலில் மட்டுமில்லாமல், சில பொழுதுபோக்கு அம்சங்களுக்காகவும் கார்ல் வின்சன் விமானம் தாங்கி கப்பல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 

2001ம் ஆண்டு பிரபல ஹாலிவுட் நடிகர் ஓவன் வில்சன் நடிப்பில் வெளியான "பிகைண்ட் எனிமி லைன்ஸ்" என்ற போர் சம்பந்தப்பட்ட படத்தில் சில காட்சிகளுக்கான வில்சன் போர் கப்பல் பயன்படுத்தப்பட்டது.

பிகைண்ட் எனிமி லைன்ஸ் படத்தை நீங்கள் பார்க்க நேர்ந்தால், கார்ல் வில்சன் கப்பலின் வெளிப்புற மற்றும் உட்புற கட்டமைப்புகள். கப்பலின் டெக் ஆகியவற்றை பார்க்கலாம். இதன்மூலம் இந்த போர்கப்பலில் இருக்கக்கூடிய பாதுகாப்பு அம்சங்களையும் நாம் தெரிந்துக்கொள்ளலாம்.

2011ம் ஆண்டில் ஓசமா பின்லேடனை கொன்ற பிறகு அமெரிக்க இராணுவப் படை, கார்ல் வில்சன் கப்பலில் தான் அவனது உடலை எடுத்து வந்தது. கப்பலில் கடைசி டெக்கில் வைக்கப்பட்டு இருந்த அவனது உடல் இறுதியாக நடுக்கடலில் தூக்கி வீசப்பட்டது.

1998ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இராக் நாட்டில் அமெரிக்க தாக்குதல்களை மேற்கொண்டபோது, பாரசீக வளைகுடாவில் கார்ல் வின்சன் கப்பல் நிறுத்தப்பட்டு இருந்தது. இராக்கில் 50 இடங்களை குறிவைத்து 11 இராணுவ விமானங்கள் இந்த விமானம் தாங்கி கப்பல் மீது நிறுத்தப்பட்டு இருந்தது.

அமெரிக்காவில் செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பிறகு ஆஃப்கானிஸ்தான் நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு தீவிரவாதத்தை ஒழிக்க அமெரிக்க மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளிலும் கலந்துகொண்டது.

ஆஃப்கானிஸ்தானில் இருந்தபோது கார்ல் வில்சன் விமானம் தாங்கி கப்பலில்லிருந்து 3303 கிலோ எடைக்கொண்ட ஆயுதங்கள் இருப்பு வைக்கப்பட்டது. அவை அனைத்தும் தரைப்படை தாக்குதல்களுக்காக பயன்படுத்தப்பட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் தென் சீன கடற்பகுதியில் கார்ல் வில்சன் விமானம் தாங்கி கப்பல் உலாவிக்கொண்டு இருந்த போது, பயந்துபோன சீனா, நாட்டின் இறையாண்மையை கெடுக்கும் வகையில் அமெரிக்க நடந்துக்கொள்வதை நிறுத்தவும் என எச்சரிக்கை விடுத்தது.

சீனாவிற்கே கிலி ஏற்படுத்தியிருக்கும் இந்த கப்பல் வடகொரியாவை நோக்கி சென்று கொண்டுயிருப்பது உலக நாடுகள் மத்தியில் பதற்றத்தை அதிகரித்துள்ளன. பொதுவாக விமானம் தாங்கி கப்பல் சென்றால், அதற்கு பிறகு விமான பரிவாரங்கள் சென்று அதில் அடையும்.

கார்ல் வில்சனின் இந்த பயணம் ஆசிய நாடுகள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் இவை எதை பற்றியும் கவலைப்படாமல் வடகொரியாவின் ஊடகங்களும், அந்நாட்டு அதிபர் கிம் ஜாங்கும் அதை எதிர்க்கும் வல்லமை குறித்து தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

"எதிரிகள் திரும்ப எழ முடியாத அளவு ராணுவம் இரக்கமற்ற அடியை கொடுக்கும்" என சமீபத்தில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் தெரிவித்திருப்பது அமெரிக்காவிற்கு மிக எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், கார்ல் வில்சனின் பயணம் முதற்படி தான் என்றும், இதற்கு பிறகு பல்வேறு தாக்குதல்கள் முறைகள் வடகொரியா மீது நடத்தப்படும் நோக்கில் அமெரிக்க இராணுவம் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
US Aircraft Carl Vinson has heading for the North Korea Penninsula, as per President Donald Trump order. Click for the interesting facts about Carl VinsonAircraft ...
Please Wait while comments are loading...

Latest Photos