இந்தியாவின் அதிவேக ரயிலின் WAP- 5 எஞ்சின் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

Written By:

இந்தியாவின் அதிவேக ரயிலான கட்டிமான் எக்ஸ்பிரஸ் இன்று தனது சேவையை துவங்கியிருக்கிறது. மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்ட இந்த ரயிலை இழுத்துச் செல்வதற்கு WAP- 5 மின்சார ரயில் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது.

இந்தநிலையில், WAP -5 எஞ்சினின் வல்லமைகளை பார்த்தால், அது மெய்சிலிர்க்க வைக்கிறது. அதாவது, ஜல்லிக்கட்டு காளை போன்ற இந்த ரயில் எஞ்சினை செக்கு மாடு போல இந்திய ரயில்வே பயன்படுத்தி வருவது தெரிய வருகிறது. இந்த ரயில் எஞ்சின் பற்றிய சுவாரஸ்யத் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

WAP -5 எஞ்சின் விளக்கம்

WAP என்பதில் W என்பது Wide Gauge என்று பொருள்படும் அகல ரயில் பாதை எஞ்சின். A என்பது AC எனப்படும் தலைக்கு மேலே செல்லும் மின்சார கம்பிகளிலிருந்து பெறப்படும் நேர்முனை மின்சாரத்தில் இயங்கக்கூடியது. P என்பது Passenger என்ற பயணிகள் ரயிலுக்கான எஞ்சின் என்பதை குறிக்கிறது. இந்த WAP மின்சார ரயில் குடும்ப வரிசையில் 5வது மாடலாகவும் இதனை குறிப்பிடுகின்றனர்.

Image Source

அறிமுகம்

WAP-5 மின்சார ரயில் எஞ்சின் முதல்முறையாக சுவிட்சர்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. மொத்தம் 10 WAP-5 ரயில் எஞ்சின்கள் இறக்குமதி செய்யப்பட்டன. அதாவது, சுவிஸ் எல்ஓகே 2000 என்ற கான்செப்ட் மாடலின் தொழில்நுட்பத்தில், ஜெர்மனியின் டிபி க்ளாஸ் 120 சேஸியீன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மின்சார ரயல் எஞ்சின் மாடலாகும்.

Image Source

இந்தியாவில் உற்பத்தி

கடந்த 2000வது ஆண்டில் இந்தியாவிலேய இந்த ரயில் எஞ்சின் உற்பத்தி துவங்கியது. சித்தரஞ்சனில் உள்ள ரயில் எஞ்சின் தயாரிப்பு ஆலையில் இந்த எஞ்சின் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த மாதம் வரை 95 WAP - 5 எஞ்சின்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.

Image Source

எடை, சிறப்புகள்

இந்த மின்சார ரயில் எஞ்சின் 79 டன் எடை கொண்டது. ஏர் பிரேக் சிஸ்டம், பிரேக்கிலிருந்து ஆற்றலை பெறும் நுட்பம் போன்ற சிறப்பம்சங்களையும் பெற்றிருக்கிறது.

Image Source

மின் மோட்டார்கள்

இந்த ரயில் எஞ்சினில் 4 ஏபிபி க்ரூப் 6எஃப்எக்ஸ்ஏ 7059 மின்சார மோட்டார்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இவை ஒருங்கிணைந்து அதிகபட்சமாக 5,500 குதிரைசக்தி திறனை வெளிப்படுத்தும்.

Image Source

சோதனையில் சாதனை

கடந்த 2014ம் ஆண்டு ஜூலை 3ந் தேதி டெல்லி- ஆக்ரா இடையிலான கட்டிமான் எக்ஸ்பிரஸ் சோதனை ஓட்டத்தின்போது மணிக்கு 160 கிமீ வேகத்தை தொட்டு இந்த ரயில் எஞ்சின் சாதனை படைத்தது.

Image Source

செக்குமாடு

டெல்லி- போபால் சதாப்தி ரயிலில் இந்த எஞ்சின்தான் பயன்படுத்தப்படுகிறது. இந்த ரயில் அதிகபட்சமாக மணிக்கு 150 கிமீ வேகத்தில் இயக்கப்படுகிறது. ஆனால், இந்த எஞ்சினை மணிக்கு 200 கிமீ வேகம் வரை அசால்ட்டாக செல்லுமாம். கடந்த 15 ஆண்டுகளாக இதனை செக்குமாடாக இந்திய ரயில்வே பயன்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

Image Source

அதிகபட்ச வேகம்

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் WAP -5 குடும்பத்தில் தயாரான 30086 என்ற எண் கொண்ட ரயில் எஞ்சினில் புதிய கியர் அசெம்பிளி கொண்டதாக மேம்படுத்தப்பட்டது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 225 கிமீ வேகம் வரை இயக்க முடியுமாம். ஆனால், 200 கிமீ வேகம் வரை இயக்குவதற்கு அனுமதி இருக்கிறது.

Image Source

பயன்பாடு குறைவு

ராஜ்தானி, துரந்தோ மற்றும் சதாப்தி ரயில்களில் இந்த ரயில் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. தென்மாநிலங்களைவிட வட மாநிலங்களில்தான் இந்த ரயில் எஞ்சின் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.

Image Source

 

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Interesting Facts About WAP 5 Locomotive.
Please Wait while comments are loading...

Latest Photos