இந்தியாவுக்கு பரிசீலிக்கப்படும் மாக்லேவ் அதிவேக ரயில் குறித்த சிறப்புத் தகவல்கள்!

Written By:

புல்லட் ரயில் திட்டத்தைத் தொடர்ந்து மாக்லேவ் மற்றும் ஹைப்பர்லூப் போன்ற அதிவேக போக்குவரத்து சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான முயற்சிகளில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இந்தநிலையில், புல்லட் ரயிலைவிட அதிவேகத்தில் செல்லும் மாக்லேவ் ரயில்களையும் இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. புல்லட் ரயிலைவிட அதிவேக போக்குவரத்தை தரும் மாக்லேவ் ரயில் பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

தண்டவாளத்தை தொடாமல் காந்த விசை மூலமாக சில மில்லிமீட்டர்கள் இடைவெளியில், குறிப்பிட்ட தடத்தில் இயங்கும் ரயில்கள்தான் மாக்லேவ் என்று குறிப்பிடப்படுகிறது. காந்த விசையின் காரணமாக இந்த ரயிலுக்கான முன்னோக்கி செல்வதற்கான விசையும், தண்டவாளத்தில் இருந்து சிறிது இடைவெளியில் செல்லும் திறனும் கிடைக்கப்பெறுகிறது.

கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் 21ந் தேதி ஜப்பானில் மாக்லேவ் ரயில் மணிக்கு 603 கிமீ வேகத்தை தொட்டு புதிய சாதனை படைத்தது. பிரத்யேக சோதனை ஓட்டப் பகுதியில் கிட்டத்தட்ட 10.8 வினாடிகள் தொடர்ந்து மணிக்கு 600 கிமீ வேகத்தையும் தாண்டி மாக்லேவ் ரயில் சென்றது. இந்த நேரத்தில் 1.8 கிமீ தூரத்தை அந்த ரயில் கடந்தது.

தற்போது சீனாவில் வணிகரீதியில் மாக்லேவ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்கள் சராசரியாக மணிக்கு 431 கிமீ வேகத்தில் செல்கின்றன. டிரான்ஸ்ரேபிட் என்ற பெயரில் இந்த ரயில்கள் அழைக்கப்படுகின்றன.

மாக்லேவ் ரயில்களில் சக்கரங்கள் இருக்காது. இதனால், உராய்வு குறைவு என்பதால் இயக்குதல் மற்றும் பராமரிப்பு செலவு குறைவானது. உதிரிபாகங்களின் தேய்மானமும் மிக குறைவாக இருக்கும்.

மாக்லேவ் ரயில்களில் ரயில் தடம் புரளும் என்ற பேச்சுக்கே இடமிருக்காது. இதனால், புல்லட் ரயில் மற்றும் அதிவேக ரயில்களை விட மிகவும் பாதுகாப்பானதாக தெரிவிக்கப்படுகிறது.

சாதாரண ரயில்களைவிட மிகவும் நிலைத்தன்மையுடன் மாக்லேவ் ரயில்கள் செல்லும் தன்மையை பெற்றிருப்பதால், கூடுதல் அகலத்துடன் மாக்லேவ் ரயில் பெட்டிகளை தயாரிக்க முடிகிறது. இதனால், நெருக்கடி இல்லாத சொகுசான பயண அனுபவத்தை பயணிகள் பெற முடியும்.

மாக்லேவ் ரயில்களில் எரிபொருள் இல்லாமல் மின்காந்த விசை மூலமாக இயங்குவதால், புகை என்ற பிரச்னை இல்லை. எனவே, சுற்றுச்சூழலுக்கும் மிகுந்த சிறப்பானதாக இருக்கிறது.

சக்கரங்கள் இல்லை என்பதும் மிகப்பெரிய வரப்பிரசாதம். உராய்வு குறைவாக இருப்பதன் காரணமாக, பயணிகளுக்கு துளிகூட அதிர்வு தெரியாது. சப்தமும் இருக்காது. இதனால், உன்னதமான பயண அனுபவத்தை பெற முடியும்.

சாதாரண ரயில்களுக்கான தண்டவாளங்களை அதிக சரிவான நிலப்பகுதிகளில் அமைப்பது சவாலாக இருக்கும். ஆனால், சரிவான நிலப்பகுதிகளிலும் மாக்லேவ் ரயில் திணறாமல் செல்லும் என்பதால் நிலப்பகுதியில் அதிக மாற்றம் செய்ய தேவை இருக்காது.

மணிக்கு 500 கிமீ வேகத்தை தாண்டியவுடன் மாக்லேவ் ரயில் 10 செமீ இடைவெளியில் தண்டவாளத்தின் மேல் பகுதியில் மிதந்து செல்லும். எனவே, இதனை பறக்கும் ரயில் என்று சொன்னால் கூட மிகையாகாது.

மாக்லேவ் ரயில் தடத்திற்கான காந்தங்கள் இரும்பு கலந்த ஃபெரைட் அல்லது இரும்பு, அலுமினியம், நிக்கல், கோபால்ட் மற்றும் காப்பர் கலந்த கலப்பு உலோகத்தில் தயாரிக்கப்படுகின்றன. இதனால், மிக திறன் வாய்ந்த காந்த விசையை இவை வெளிப்படுத்தும்.

ஏராளமான சிறப்பம்சங்கள் மிகுந்த நவீன யுக மாக்லேவ் ரயில்களுக்கான ஸ்கேன்டியம், யட்ரியம் மற்றும் லந்தனைட்ஸ் போன்ற சில மூலப்பொருட்கள் அரிதானவை. இவற்றிற்கான விலை அதிகம். இதுதான் மாக்லேவ் ரயில் திட்டத்திற்கான பின்னடவை தரும் விஷயங்கள்.

மணிக்கு 400 கிமீ வேகத்திற்கு மேல் செல்லும் திறன் வாய்ந்த இந்த மாக்லேவ் ரயில் சென்னை மற்றும் பெங்களூர் இடையே இயக்கப்பட்டால், இரு நகரங்களுக்கும் இடையிலான 370 கிமீ தூரத்தை ஒரு மணிநேரத்திற்குள் கடந்து விடும்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
Story first published: Thursday, April 20, 2017, 15:04 [IST]
English summary
Interesting Facts About World's Fastest Maglev Trains.
Please Wait while comments are loading...

Latest Photos