கன்கார்டு விமானத்தை விட வேகமாக பறந்த உலகின் அதிவேக பயணிகள் விமானம்!!

Written By:

பரபரக்கும் இந்த உலகத்தில் அதிவேக போக்குவரத்து சாதனங்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதில் வியப்பில்லை. பொதுவாக விமானங்கள் அதிவேகத்தில் திறன் கொண்டதாக இருந்தாலும், குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் செல்லும் விமானங்கள் பாதுகாப்பு கருதி, பயணிகள் சேவையில் இருப்பதில்லை.

அதேநேரத்தில், உலகிலேயே இயக்கப்பட்ட அதிவேக விமான மாடலாக கான்கார்டு என்பதை பலரும் அறிந்திருப்பீர்கள். ஆனால், கான்கார்டு விமானத்தை விட அதிவேகத்தில் இயக்கப்பட்ட பயணிகள் விமானம் குறித்த தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

கான்கார்டு விமானத்தை விட வேகமாக இயக்கப்பட்ட அந்த பயணிகள் விமானத்தின் பெயர் டூபலேவ் டியூ-144. சூப்பர்சானிக் வேகத்தில் இயக்கப்பட்ட உலகின் அதிவேக பயணிகள் விமானம் இதுதான்.

சோவியத் யூனியனின் வாரோனெக் நிறுவனத்தின் தயாரிப்புதான் இந்த விமானம். கடந்த 1968ம் ஆண்டு 31ந் தேதி முதல்முறையாக பறக்கவிட்டு சோதனை செய்தனர். மேலும், வர்த்தக ரீதியில் அதிவேகத்தில் இயக்கப்பட்ட விமான மாடலும் இதுதான்.

சோவியத் யூனியனின் வாரோனெக் நிறுவனத்தின் தயாரிப்புதான் இந்த விமானம். கடந்த 1968ம் ஆண்டு 31ந் தேதி முதல்முறையாக பறக்கவிட்டு சோதனை செய்தனர். மேலும், வர்த்தக ரீதியில் அதிவேகத்தில் இயக்கப்பட்ட விமான மாடலும் இதுதான்.

ஆனால், 1978ம் ஆண்டு மே23ந் தேதி ஒரு டுபலேவ் விமானம் தரையிறங்கும்போது விபத்தில் சிக்கியதையடுத்து, பயணிகள் சேவையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது. அதன்பின்னர், சரக்கு போக்குவரத்துக்கான பயன்பாட்டில் மட்டும் இருந்தது.

இந்த விமானங்கள் பழமையானதால், பாதுகாப்பு கருதி கடந்த 1983ம் ஆண்டு சேவையில் இருந்து முழுவதுமாக விலக்கப்பட்டது. மொத்தமாகவே 16 விமானங்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டன.

இந்த விமானத்தில் 4 கோலெசோவ் ஆர்டி-36-51 டர்போஜெட் எஞ்சின்கள் பொருத்தப்பட்டு இருந்தன. இந்த சக்திவாய்ந்த எஞ்சின்கள் உதவியுடன், மணிக்கு 2,340 கிமீ வேகத்தில் இந்த விமானம் பறந்தது. அதாவது, மேக் 2.29 வேகத்தில் பறந்து உலகையே ஆச்சர்யப்பட வைத்தது.

அதற்கடுத்து, உங்களுக்கெல்லாம் தெரிந்த கான்கார்டு விமானம் 1976ம் ஆண்டு சேவைக்கு வந்தது. இந்த விமானமானது மணிக்கு 2,180 கிமீ வேகத்தில் பறக்கும் வல்லமையை பெற்றிருந்தது. 2003ம் ஆண்டு சேவையில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது.

சேவையில் இருந்து விலக்கப்பட்ட 40 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும், இன்றுவரை இதுதான் உலகின் அதிவேக பயணிகள் விமானம் மற்றும் வர்த்தக விமானம் என்ற பெருமையை தக்க வைத்து வருகிறது.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Interesting Facts About World's Fastest Passenger Plane. Read in Tamil.
Please Wait while comments are loading...

Latest Photos