உலகின் நீண்ட தூர வழித்தடங்களில் பயன்படுத்தப்படும் போயிங் 777 விமானத்தின் சிறப்புகள்!

உலகின் மிக நீண்ட தூர இடைநில்லா விமான சேவையை கத்தார் ஏர்வேஸ் அறிமுகம் செய்துள்ளது. இந்த வழித்தடத்தில் பயன்படுத்தப்படும் போயிங் 777எல்ஆர் விமானத்தின் சிறப்பம்சங்கள், சுவாரஸ்யங்களை இந்த செய்தியில் காணலாம

Written By:

உலகின் மிக நீண்ட தூரம் இடைநில்லாமல் செல்லும் விமான சேவையை கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் துவங்கி உள்ளது. தோஹாவிலிருந்து நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து நகருக்கு இந்த விமான சேவை துவங்கப்பட்டு இருக்கிறது.

தோஹாவில் இருந்து புறப்பட்ட கத்தாஸ் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777-220எல்ஆர் விமானம் கிட்டத்தட்ட 16 மணி 20 நிமிட பயணத்திற்கு பின் ஆக்லாந்து நகரில் இறங்கியது. கிட்டத்தட்ட 14,535 கிமீ தூரம் அந்த விமானம் பறந்து சென்றது.

ஆக்லாந்து நகரை அடைந்த விமானத்திற்கு வாட்டர் சல்யூட் வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்த நிலையில், அதே விமானம் மீண்டும் தோஹாவுக்கு திரும்புகையில் எதிர்காற்று காரணமாக 17 மணி 30 நிமிட பயண நேரத்தில் தோஹைவை அடைந்தது.

இந்த விமானத்தில் பறந்த பயணிகளுக்கு சிறப்பு உணவுகள் வழங்கப்பட்டன. இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன் ஏர் இந்தியா நிறுவனம் டெல்லியிலிருந்து சான்பிரான்சிஸ்கோ நகருக்கு இயக்கிய விமானம்தான் மிக நீண்ட தூரம் இடைநில்லாமல் இயக்கப்பட்ட விமானமாக இருக்கிறது.

ஆனால், இப்போது கத்தாஸ் ஏர்வேஸ் நிறுவனம் இதற்கு புது விளக்கம் கூறுகிறது. அதாவது, ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 777-200எல்ஆர் விமானமானது, 15,300 கிமீ தூரம் பயணித்தது. அட்லாண்டிக் வழித்தடத்தில் செல்வதற்கு பதிலாக பசிபிக் பெருங்கடல் வழித்தடத்தில் அந்த விமானம் சென்றது.

இதற்கு காரணம், தூரம் அதிகம் இருந்தாலும் தள்ளுக்காற்று மூலமாக விரைவாக செல்ல முடியும் என்பதுடன், அதிக எரிபொருள் சேமிப்பையும் பெற முடிந்தது. இந்த நிலையில், டெல்லியிலிருந்து சான்பிரான்சிஸ்கோ நகருக்கு நேர்கோட்டு தூரம் 12,343 கிமீ என்றும், அதேநேரத்தில், தோஹோவாலிருந்து ஆக்லாந்து 14,528 கிமீ தூரத்தில் அமைந்திருப்பதாகவும் காரணம் தெரிவிக்கப்படுகிறது.

இதுபோன்ற நீண்ட தூர வழித்தடங்களில் இயக்கப்படும் போயிங் 777 விமானத்தின் சில சிறப்பம்சங்களை தொடர்ந்து காணலாம். போயிங் நிறுவனத்தின் மிக பிரம்மாண்டமான பயணிகள் விமான மாடல்.

1995ம் ஆண்டு யுனைடேட் ஏர்லைன்ஸ் மூலமாக சேவைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மேம்படுத்தப்பட்ட மாடலாக அதிக தூரம் பயணிக்கக்கூடிய மாடலாக 2005ம் ஆண்டில் போயிங் 777-200எல்ஆர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விமானம் சோதனை முயற்சியாக ஹாங்காங் நகரில் இருந்து லண்டனுக்கு 21,602 கிமீ தூரம் இடைநில்லாமல் பறந்து புதிய சாதனை படைத்தது.

இந்த பயணமானது 22 மணி 42 நிமிடங்கள் நீடித்ததுடன், கின்னஸ் புத்தகத்திலும் இடம்பிடித்தது. இந்த சாதனையை தொடர்ந்து மிக நீண்ட தூர வழித்தடங்களில் மிகவும் நம்பகமான விமான மாடலாக இந்த விமானம் தற்போது பல நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகிறது.

ஃப்ளை பை ஒயர் என்ற மிக நவீன மின்னணு கட்டுப்பாட்டு அமைப்புடன் வந்த முதல் வர்த்தக ரீதியிலான பயணிகள் விமானம் என்ற பெருமை இந்த விமானத்திற்கு உண்டு. இதனால், விமானத்தை சிக்கல் இல்லாமல் எளிமையாக இயக்குவதற்கான வசதியை பைலட்டுகள் பெற்றனர்.

மேலும், விமானம் அதிவேகத்த்தில் பறப்பதை தவிர்க்கவும், திரும்பும்போது ஏற்படும் அபாயங்களை தவிர்க்கவும் உதவுகிறது. இந்த விமானத்தின் விசேஷ வடிவமைப்பு மூலமாக அதிகபட்சமாக மேக் 0.84 என்ற வேகம் வரை தொடக்கூடிய திறனை பெற்றிருக்கிறது.

அதிக பாரத்துடன், அதிக உயரங்களில் பறப்பதற்கான திறனும் இந்த விமானத்தில் உள்ளது. இந்த விமானத்தில் இரட்டை எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளன. இரண்டு பைலட்டுகள் மூலமாக மிக நீண்ட தூரம் இயக்கும் வசதியையும் பெற்றிருக்கிறது.

இந்த விமானம் வணிக ரீதியில் 15,844 கிமீ தூரம் பறக்கும் திறன் கொண்டதாக போயிங் நிறுவனம் தெரிவிக்கிறது. சிங்கப்பூரிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட பல நீண்ட தொலைவு வழித்தடங்களில் அதிகம் பயன்படுத்தப்படுவது இந்த விமானம்தான்.

இந்த விமானத்தின் லாங் ரேன்ச் மாடலான 777-200எல்ஆர் மாடலில் ஜிஇ எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளன. மணிக்கு 892 கிமீ வேகம் வரை பறக்கும். இதன் நேரடி போட்டியாளராக ஏர்பஸ் ஏ340-500HGW மாடல் விளங்குகிறது.

போயிங் 777-200எல்ஆர் விமானம் 347.8 டன் எடை கொண்டது. இந்த விமானத்தில் 138 டன் அளவுக்கு எரிபொருள் நிரப்பப்பட்டிருக்கும். இந்த விமானம் 209 அடி நீளமும், 212 அடி அகலமும் கொண்டது.  இந்த விமானத்தில் 42 பிசினஸ் க்ளாஸ் இருக்கைகளும், 217 எக்கானமி க்ளாஸ் இருக்கைகளும் உள்ளன. இதன் பிசினஸ் க்ளாஸ் இருக்கைகளை 180 டிகிரி கோணத்தில் சாய்த்துக் கொள்ள முடியும்.

புதிய ஜீப் ரேங்லர் ரூபிகன் ரெக்கான் எஸ்யூவியின் படங்கள்!

ஜீப் ரேங்லர் எஸ்யூவியின் அதிக சிறப்பம்சங்கள் கொண்ட ஆஃப்ரோடு மாடலாக வெளியிடப்பட்டுள்ள புதிய ரேங்லர் ரூபிகன் ரெக்கான் எஸ்யூவியின் உயர் தர படங்களை கேலரியில் காணலாம்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Interesting Things About Boeing 777LR Plane.
Please Wait while comments are loading...

Latest Photos