இந்தியாவின் முதல் ஹைப்பர்சானிக் ஏவுகணை சவுரியா பற்றிய சிறப்புத் தகவல்கள்!

By Saravana

ஒலியைவிட பன்மடங்கு வேகத்தில் பறக்கக்கூடிய DZ- ZF என்ற ஹைப்பர்சானிக் வகையை சேர்ந்த அணு ஆயுத ஏவுகணையை சீனா நேற்று 6-வது முறையாக சோதனை செய்துள்ளது. இந்த ஏவுகணை சோதனை மூலம் தனது ஆயுத பலத்தை உலக நாடுகளுக்கு பரைசாற்றியிருக்கிறது சீனா. அதாவது, ஒரு மணிநேரத்தில் உலகின் எந்தவொரு மூலையையும் தாக்கக்கூடிய வல்லமை பொருந்தியது இந்த ஏவுகணை.

ஆனால், 2008ம் ஆண்டிலேயே குறைந்த தூர வகையில், ஹைப்பர்சானிக் வகையில் சவுரியா ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துவிட்டது. அமெரிக்காவிற்கு அடுத்து ஹைப்பர்சானிக் ஏவுகணையை தயாரித்த இரண்டாவது நாடு என்ற பெருமையும் இந்தியாவிற்கு உண்டு.

ஹைப்பர்சானிக் ஏவுகணையை தயாரித்து சோதனை நடத்தி வரும் அமெரிக்கா, சீனா, ரஷ்யா நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இடம்பெற்றிருக்கிறது. இந்தநிலையில், உலகிற்கு முன்னோடியாக தயாரிக்கப்பட்ட இந்தியாவின் சவுரியா ஏவுகணை பற்றியும், ஹைப்பர்சானிக் ஏவுகணை தயாரிப்பிற்கான அவசியம், அதன் பலன்கள் மற்றும் இந்தியாவின் புதிய ஹைப்பர்சானிக் திட்டம் பற்றியத் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

01. காரணம்

01. காரணம்

அமெரிக்காவின் கண்ணில் விரலை விட்டு ஆட்டி வந்த, அல்கொய்தா தீவிரவாத இயக்கத் தலைவன் ஒசாமா பின்லேடனை பிடிப்பதற்காக, ஆப்கானிஸ்தானில் ராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டிருந்தது. மேலும், ஆப்கானிஸ்தான் மலைப்பகுதியில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடனை குறிவைத்து போர்க்கப்பல்களிலிருந்து ஏவப்பட்ட தோமஹாக் வகை ஏவுகணைகள் இலக்கை சரிவர தாக்கவில்லை. ஏன் தாக்கவில்லை என்ற காரணம் விந்தையானது.

02. பின்லேடனின் மாய வித்தை

02. பின்லேடனின் மாய வித்தை

போர்க்கப்பலிலிருந்து ஏவப்பட்ட தோமஹாக் ஏவுகணைகள் இலக்கை அடைவதற்கு 2 மணிநேரம் பிடித்தது. ஆனால், அடுத்த ஒரு மணிநேரத்தில் பின்லேடனுக்கு தகவல் கிடைத்தோ அல்லது இடத்தை மாற்றிக் கொண்டே இருந்ததால், தோமஹாக் ஏவுகணைகள் பலனளிக்கவில்லை. இது தனது ராணுவ பலத்துக்கு விடுக்கப்பட்ட பெரும் சவாலாக கருதியது.

03. ஆற்றல்வாய்ந்த ஏவுகணை

03. ஆற்றல்வாய்ந்த ஏவுகணை

தோமஹாக் ஏவுகணைகளை விட சிறப்பான ஏவுகணைகளை உருவாக்க அமெரிக்கா முடிவு செய்தது. ஏவிய சில நிமிடங்களில் குறைந்த தூர இலக்கை அழிப்பதற்கான ஏவுகணைகளையும், சில மணிநேரத்தில் உலகின் எந்த மூலையையும் தாக்க வல்ல ஏவுகணைகளை உருவாக்க அமெரிக்கா முடிவு செய்தது. அதன்படி துவங்கப்பட்டதுதான் சூப்பர்சானிக் மற்றும் ஹைப்பர்சானிக் ஏவுகணை திட்டங்கள். இந்த வகை ஏவுகணைகள் ஒலியைவிட பன்மடங்கு வேகத்தில் பறந்து சென்று, இலக்கை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும்.

04. சூப்பர்சானிக் Vs ஹைப்பர்சானிக்

04. சூப்பர்சானிக் Vs ஹைப்பர்சானிக்

இங்கே ஒரு விஷயத்தை தெளிவுப்படுத்திவிட்டால், உஙகளுக்கு எளிதாக புரிந்துவிடும். தற்போது ஒலியைவிட அதிவேகத்தில் செல்லும் ஏவுகணைகள் இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் இருக்கின்றன. அப்படியானால், சூப்பர்சானிக் மற்றும் ஹைப்பர்சானிக் இடையிலான வேக வேறுபாட்டை சொல்ல வேண்டும். சூப்பர்சானிக் ஏவுகணைகள் மேக்-1.2 முதல் மேக் 5 வரையிலான வேகத்தில் செல்லும். அதாவது, மணிக்கு 1,470 கிமீ வேகம் முதல் மணிக்கு 6,150 கிமீ வேகம் வரை செல்லக்கூடியவை சூப்பர்சானிக் ஏவுகணைகளாக வரையறுக்கப்படுகின்றன. மேக் 5.0 முதல் மேக் 10 வரையிலான வேக அளவுகள் ஹைப்பர்சானிக் ரகம். இவை மணிக்கு 7,680 கிமீ வேகம் முதல் மணிக்கு 16,250 கிமீ வேகம் வரை செல்லக்கூடியவை. சரி, இப்போது கட்டுரையை தொடரலாம்.

05. போட்டா போட்டி

05. போட்டா போட்டி

அமெரிக்காவின் சூப்பர்சானிக் ஏவுகணைகளை பார்த்து, உலகின் பல நாடுகளும் இந்த வகை ஏவுகணைகளை உருவாக்கி வெற்றி கண்டன. அடுத்த நிலைக்கு செல்ல அனைத்து நாடுகளும் களமிறங்கின. அதன்படி உருவாகி வருவதுதான் ஹைப்பர்சானிக் ஏவுகணைகள். அமெரிக்காவிற்கு இணையான ஹைப்பர்சானிக் அணு ஆயுத ஏவுகணையை உருவாக்கும் நோக்கில் சில நாடுகள் குதித்தன.

Photo Credit: Wikimedia Commons

06. பட்டியலில் இந்தியா

06. பட்டியலில் இந்தியா

ஹைப்பர்சானிக் ஏவுகணை தயாரிப்பு என்று பட்டியல் தயாரிக்கும் போது அமெரிக்கா, சீனா, ரஷ்யா மற்றும் இந்தியா ஆகிய நான்கு நாடுகளே இப்போதைக்கு குறிப்பிடப்படுகின்றன. அமெரிக்காவின் நேர் எதிரியாக கருதப்படும் ரஷ்யா இறங்கியது. அதனுடன், அண்டை நாடுகளாலும், தீவிரவாதிகளாலும் அதிக பிரச்னைகளை சந்தித்த இந்தியாவும் குதித்தது. அமெரிக்கா- ரஷ்யாவுக்கு அடுத்து உலகின் வல்லரசுகளில் ஒன்றான சீனாவும் தனது அண்டை நாடுகளை மிரட்டி வைப்பதற்காக ஹைப்பர்சானிக் ஏவுகணையை தயாரித்திருக்கிறது.

07. இந்தியாவின் பெருமை

07. இந்தியாவின் பெருமை

கடந்த 2008ம் ஆண்டில் சவுரியா [வீரம் என்று அர்த்தம்] என்ற ஹைப்பர்சானிக் ரக ஏவுகணையை இந்தியா தயாரித்து சோதனை நடத்தியது. அதாவது, இதுதான் இந்தியாவின் ஹைப்பர்சானிக் ஏவுகணை திட்டத்தின் முதல் படி எனலாம். அந்த சோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும், அமெரிக்காவுக்கு அடுத்து ஹைப்பர்சானிக் ஏவுகணையை தயாரித்த இரண்டாவது நாடு இந்தியா என்பதும் வரலாற்றில் பதிவானது.

08. சவுரியா ஏவுகணை

08. சவுரியா ஏவுகணை

சவுரியா ஏவுகணை தரையிலிருந்து ஏவி தரையிலுள்ள இலக்குகளை அழிக்கும் ரகத்தை சேர்ந்தது. தரையிலிருந்து ஏவு வாகனத்தின் வழியாகவும், நீர்மூழ்கி கப்பல்களிலிருந்தும் ஏவி தரை இலக்குகளை அழிக்க முடியும். இரண்டடுக்கு திட எரிபொருளில் பறக்கும் ஏவுகணை. 700 கிமீ முதல் 1,900 கிமீ தூரம் பறந்து சென்று இலக்குகளை தாக்கி அழிக்க வல்லது. ஏவப்பட்டவுடன் 40 கிமீ சராசரி உயரத்தில் இலக்கை நோக்கி பறந்து செல்லும். மேக்-7.5 என்ற வேகத்தில் ஒலியைவிட பன்மடங்கு வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது.

09. வெற்றிகரமாக சோதனை

09. வெற்றிகரமாக சோதனை

கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 12ந் தேதி முதல்முறையாக ஒடிஷாவிலுள்ள சந்திப்பூர் ஒருங்கிணைந்த சோதனை தளத்திலிருந்து ஏவி பரிசோதிக்கப்பட்டது. அதன் மூன்றாவது மேம்படுத்தப்பட்ட மாடல் கடந்த 2011ம் ஆணடில் சோதிக்கப்பட்டது.

10. வேகம்

10. வேகம்

சோதனையின்போது 700 கிமீ தூரத்தை வெறும் 500 வினாடிகளில் கடந்ததாக தெரிவிக்கப்பட்டது. இலக்கிலிருந்து 20 மீட்டர் முதல் 30 மீட்டர் துல்லியத்தில் தாக்கி அழிக்கக்கூடியது. ரேடார் கண்களில் சிக்காமல், எதிர்ப்பு ஏவுகணைகளின் கண்களிலும் மண்ணை தூவி இலக்கை தாக்கும்.

11. அணு ஆயுத ஏவுகணை

11. அணு ஆயுத ஏவுகணை

சவுரியா ஏவுகணை 6.7 டன் எடை கொண்டது. இந்த ஏவுகணையில் ஒரு டன் அணு குண்டு அல்லது சாதாரண வெடிபொருட்களை சுமந்து சென்று இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது.

12. பயன்பாடு

12. பயன்பாடு

இது குறைந்த தூர ஹைப்பர்சானிக் வகை ஏவுகணை என்பதால், எல்லைக்கருகில் வைத்து செலுத்த முடியும். மேலும், கடல்வழியாக வரும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்வதற்கும், இலக்குகளை நெருங்கி சென்று ஏவ வேண்டியிருக்கும்.

13. சிக்கல்

13. சிக்கல்

இந்த ஏவுகணையின் உற்பத்தி துவங்கப்பட்டுவிட்டது. ஆனால், இதன் செயல்திறனும், இலக்கை குறி பார்க்கும் திறனும் எதிர்பார்த்த அளவு இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. எனவே, இந்த ஏவுகணையை ராணுவத்தில் சேர்ப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. ஆனால், இதற்கு மாற்றாக புதிய ஹைப்பர்சானிக் ஏவுகணையை இந்தியா தயாரிக்கிறது.

14. சர்ச்சை

14. சர்ச்சை

நீர் மூழ்கி கப்பல்களிலிருந்து ஏவக்கூடிய சாகரிகா ஏவுகணையின் நிலப்பதிப்பாக சவுரியா மாற்றப்பட்டிருக்கிறது என்று ஒரு சர்ச்சையும் முன்வைக்கப்பட்டது. ஆனால், இதனை உருவாக்கிய பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை இதனை திட்டவட்டமாக மறுத்து வருகிறது.

15. ஹைப்பர்சானிக் ஏவுகணை

15. ஹைப்பர்சானிக் ஏவுகணை

சவுரியா ஏவுகணை குறைந்த தூர இலக்குகளை தாக்க வல்லது. ஆனால், உலக நாடுகளுக்கு இணையான ஹைப்பர்சானிக் ரகத்தில் ஓர் ஆற்றல்வாய்ந்த ஏவுகணையை ரஷ்யா கூட்டணியுடன் இந்தியா தயாரித்து வருகிறது. பிரம்மோஸ்-II என்ற பெயரில் உருவாகி வரும் இந்த ஏவுகணையின் சிறப்புகளை மற்றொரு சிறப்புத் தொகுப்பில் காணலாம்.

16. மக்கள் ஜனாதிபதியின் பெருங்கனவு

16. மக்கள் ஜனாதிபதியின் பெருங்கனவு

மக்கள் ஜனாதிபதியாக மனதில் இடம்பிடித்த மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஏவுகணை செயல்திட்டங்களில் திறமையானவர், திடமானவர். மேலும், எதிர்காலத்தில் இந்தியாவின் நவீன வகை ஏவுகணை எவ்வாறு இருக்க வேண்டும் என்ற ஒரு பெரும் கனவு ஒன்றை தனது சகாக்களிடம் வெளிப்படுத்தியிருந்தார். அதனை பிரம்மோஸ்-II ஏவுகணை திட்ட இயக்குனர் சிவதாணுப் பிள்ளை சமீபத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். நமது நாட்டின் அடுத்த ஏவுகணை இலக்கு அதுவாகத்தான் இருக்கும். அப்துல்கலாமின் அந்த கனவு என்ன என்பதை பிரம்மோஸ்-II செய்தித் தொகுப்பில் உங்களுக்கு வழங்குகிறோம்.

தொடர்புடைய இதர செய்திகள்

01. அமெரிக்காவின் சதிதையை மீறி சிறகு முளைத்த அக்னி ஏவுகணை...

02. ஐஎஸ் தீவிரவாதிகளை அழிக்க புடின் அனுப்பிய ஏவுகணை

03. போர் விமானத்தில் 3 டன் ஏவுகணையை இணைக்கும் உலகின் முதல் நாடு இந்தியா

Most Read Articles
மேலும்... #ராணுவம் #military
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X