திமுக தலைவர் கருணாநிதி பயணித்த சலூன் கார் சொகுசு ரயில் பெட்டி: சுவாரஸ்யங்கள்

By Saravana

80 ஆண்டுகால பொது வாழ்வில் ஈடுபட்டு வரும் நாட்டின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு இன்று அகவை 93. எழுதுகோலை ஊன்றுகோலாக்கி உயர்ந்த பெரும் தலைவரான கருணாநிதி தன் வயதை ஒருபோதும் நினைத்து தளராமல் இருக்கும் அவரது சுறுசுறுப்பு இளைஞர்களையும் கவர்ந்த ஒன்று. இந்தநிலையில், சமீபத்தில் தனது சொந்த ஊரான திருவாரூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி கண்டார்.

இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுவது, இந்த வயதிலும் அவர் நேரடியாக திருவாரூர் தொகுதியில் பிரச்சாரம் செய்ததுதான். மாற்றுக் கட்சியினரையும் அவரது பிரச்சாரம் வெகுவாக கவர்ந்தது. இந்தநிலையில், அவர் பிரச்சாரத்திற்காக சென்னையிலிருந்து திருவாரூர் செல்கையில், விசேஷ ரயில் பெட்டியை பயன்படுத்தினார். 5 நட்சத்திர ஓட்டல் அறை போல இருக்கும் அந்த ரயில் பெட்டி பலர் சந்தேகமும், திகைப்பும் அடைந்தனர். அது ரயில் பெட்டியா என்று கூட பலருக்கு சந்தேகம் எழுந்தது. அந்த ரயில் பெட்டியின் விசேஷ அம்சங்கள், சுவாரஸ்யங்களையும் இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

 சலூன் கார் ரயில்

சலூன் கார் ரயில்

கருணாநிதி பயன்படுத்திய அந்த ரயில் பெட்டி, சலூன் கார் ரயில் என்று பெயரில் அழைக்கப்படுகிறது. விவிஐபி., பயன்பாட்டுக்காக இந்தியாவிலேயே மிகவும் அதிக கட்டணம் கொண்ட ரயில் பெட்டியாகவும் இதனை கூறலாம்.

ஜனாதிபதிக்காக...

ஜனாதிபதிக்காக...

இந்த சலூன் கார் ரயில் பெட்டி முதல்முறையாக நாட்டின் ஜனாதிபதியின் பயன்பாட்டிற்காக தயாரிக்கப்பட்டது. இது 9000 மற்றும் 9000 என்ற இரண்டு பெட்டிகளை கொண்டது. ஆனால், தற்போது அகல ரயில்ப்பாதையில் பயணிக்கும் வகையிலான பெட்டிகள் மாற்றப்பட்டு பயன்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது.

அறைகள்

அறைகள்

கூட்டம் நடத்துவதற்கான அறை, 5 நட்சத்திர விடுதிக்கான இணையான அம்சங்கள் கொண்ட படுக்கை அறை, உடன் வருபவர்களுக்கான அறைகள் உண்டு.

 குளிர்சாதன வசதி

குளிர்சாதன வசதி

இந்த ரயில் பெட்டி முழுக்க முழுக்க குளிர்சாத வசதி கொண்டது. சாப்பிடுவதற்கான அறை, ஹீட்டருடன் கூடிய குளியல் அறை போன்றவையும் இருக்கின்றன.

பயன்பாடு

பயன்பாடு

அந்த காலத்தில் ஜனாதிபதி வெளியூர் பயணங்களுக்காக தயாரிக்கப்பட்ட இந்த ரயில் பெட்டிகள், நாளடைவில் அவர்கள் பெரும்பாலும் ஹெலிகாப்டர் மற்றும் விமானங்களை பயன்படுத்த துவங்கியதால், ரயில் நிலையத்திலேயே பயன்பாடு இல்லாமல் நின்றது.

வாடகை

வாடகை

ஜனாதிபதியின் பயன்பாடு குறைந்தவுடன், தற்போது இந்த ரயில் பெட்டிகளை ரயில்வே நிர்வாகம் கணிசமான கட்டணத்துடன் வாடகைக்கு விட்டு வருகிறது. இந்தியாவிலேயே அதிக கட்டணம் கொண்ட தனி ரயில் பெட்டியாகவும் கூறலாம்

கட்டணம்

கட்டணம்

திமுக தலைவர் கருணாநிதி சென்னையிலிருந்து திருவாரூக்கு இரண்டு முறை இந்த ரயிலில் பயணித்தார். ஒவ்வொரு முறையும் தலா ரூ.1.65 லட்சம் வரை கட்டணம் செலுத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரயில் டிக்கெட்டிற்கு காசில்லை...

ரயில் டிக்கெட்டிற்கு காசில்லை...

முதல்முறையாக சென்னை வரும்போது ரயில் டிக்கெட் எடுக்கக்கூட கையில் காசில்லாமல் வந்ததாக ஒருமுறை கருணாநிதி கூறியிருந்தார். இந்த நிலையில், இப்போது அவர் பயணித்த சொகுசு ரயில் பெட்டி இந்தியாவில் அதிக கட்டணம் கொண்ட ரயில் பெட்டிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

சரி, சரி

சரி, சரி

சரி, சரி ரயில் எப்போதாவது பயன்படுத்தும் விஷயம். தற்போது அவரை பட்டு போல அழைத்துச் செல்லும் அவர் பயன்படுத்தும் மினி வேன் பற்றிய தகவல்களை தொடர்ந்து காணலாம்.

டொயோட்டா கார்

டொயோட்டா கார்

திமுக தலைவர் கருணாநிதி வலம் வரும் கார் மாடல் டொயோட்டா அல்ஃபார்டு என்ற மாடல் சொகுசு மினி வேன் ரகத்தை சேர்ந்தது.

 இருக்கை வசதி

இருக்கை வசதி

இந்த கார் 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் மாடல்களில் கிடைக்கிறது. ஆனால், திமுக தலைவர் கருணாநிதியின் ஹைட்ராலிக் இருக்கையை நிறுத்துவதற்கு ஏதுவான இடவசதியுடன் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

அல்ஃபார்டு வேனில் 117 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 3.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

இந்த காரில் இருக்கும் திறன் வாய்ந்த எஞ்சின் மூலமாக அதிகபட்சமாக மணிக்கு 180 கிமீ வேகம் வரை பறக்கும் திறன் கொண்டது.

 வடிவம்

வடிவம்

4840 மிமீ நீளமும், 1830 மிமீ அகலமும், 1905 மிமீ உயரமும் கொண்டது. 1800 கிலோ எடையும் கொண்டது அல்ஃபார்டு. உட்புறத்தில் மிக தாராளமான இடவசதி கொண்ட கார்.

தொழில்நுட்ப வசதிகள்

தொழில்நுட்ப வசதிகள்

இந்த காரில் தடம் மாறுவதை கண்காணித்து எச்சரிக்கும் லேன் மானிட்டரிங் சிஸ்டம், இதர வாகனங்களுடன் குறிப்பிட்ட இடைவெளியில் செலுத்தும் ரேடார் குரூஸ் கன்ட்ரோல், கண்ணுக்கு புலப்படாத பகுதியில் வரும் வாகனங்களை தெரிவிக்கும் பிளைன்ட் ஸ்பாட் டிடெக்ஷன் சிஸ்டம், பின்புற நகர்வுகளை தெரிந்து கொள்ள உதவும்பேக் கெய்டு மானிட்டர் உள்ளிட்ட நவீன வசதிகளை கொண்டது.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

இந்த காரில் 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல் உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகள் உள்ளன.

மதிப்பு

மதிப்பு

இந்த கார் தற்போது இந்தியாவில் நேரடி விற்பனைக்கு இல்லை. எனவே, இறக்குமதி செய்யப்பட்டது. ஒரு கோடி ரூபாய் விலை மதிப்பு கொண்டது.

அன்றிலிருந்து இன்று வரை... தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கார்கள்!

அன்றிலிருந்து இன்று வரை... தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கார்கள்!

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Interesting Things About Saloon Car Train Coach.
Story first published: Friday, June 3, 2016, 13:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X